உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

22 June 2012

ஷங்கர் இயக்கும் புதிய படம் "ஐ'

பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு "ஐ' என தலைப்பிடப்பட்டுள்ளது.

நண்பன் படத்தையடுத்து ஷங்கர் இயக்கவுள்ள இப் படத்தை ஏராளமான வெற்றிப் படங்களைத் தயாரித்த ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் முதல்முறையாக ஷங்கருடன் கைகோக்கிறார்.
விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் சுரேஷ்கோபி, சிவாஜிகணேசனின் மூத்த மகனும் நடிகர் பிரபுவின் அண்ணனுமான ஜி.ராம்குமார், சந்தானம் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஐ என்பதற்கு - அழகு, அரசன், ஆசான், வியப்பு, மேன்மை, எழுத்து, எசமானன், நுண்மை, அம்பு, ஐயம் என பல பொருள்கள் உள்ளன. இவற்றின் கலவையாக இந்தப் படம் உருவாகிறது.
பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில் மென் இன் பிளாக் சீரிஸ் படங்களில் பணிபுரிந்த மேரி வாட், கதாபாத்திரங்களுக்கு பிரத்யேகமான உடைகளை வடிவமைக்கிறார். ஹாரிபாட்டர் சீரிஸ் படங்களில் பணியாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரைசிங் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் விஷுவல் எஃபக்ட்ஸ் பகுதிகளை அமைக்கிறது. ஹாலிவுட் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்களும் இந்தப் படத்தில் பணிபுரிகிறார்கள்.
சண்டைக் காட்சிகளை அனல் அரசுவும், சீனாவைச் சேர்ந்த பீட்டர் மிங்கும் இணைந்து அமைக்கிறார்கள். இந்த ரொமான்ட்டிக் த்ரில்லர் படத்தின் படத்தொகுப்புப் பணியை ஆண்டனி ஏற்றுள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கபிலன் எழுதி விஜய்பிரகாஷ் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
இந்த படத்துக்கு வசனம் எழுதுவதன் மூலம் இரட்டை எழுத்தாளர்கள் சுபா முதல் முறையாக ஷங்கருடன் இணைகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT