உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466
Showing posts with label FACEBOOK சிறந்த பதிவுகள். Show all posts
Showing posts with label FACEBOOK சிறந்த பதிவுகள். Show all posts

19 December 2012

FACEBOOK சிறந்த பதிவுகள் - 09


Mohamed Ali
19/12/2012

கடவுள் ரசித்து செதுக்கிய உலகமிது, இது ஒரே நாளில் தோன்றியதில்லை ஒருவர் இருவராகி இருவர் பலராகி உருவான 
உலகமிது. 2012ல உலகம் அழியப்போகுதாம், என்னங்கடா நக்கல் பண்றீங்க, மாயன் எல்லாம் ஒன்னுமில்ல,உலகமும் ஒரே நாளில்
அழிவதுமில்லை,உலகத்தை ரசி...உறவுகளை நேசி...

22 July 2012

FACEBOOK சிறந்த பதிவுகள் - 08

CHINNIAH KASI
22/07/2012
தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்!
தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்!
தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்!
50 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் விற்பனை இருந்ததா?
அது காசுக்கு விற்கப்படும் என்பதை அப்போது நம்பினோர் உண்டா?
இப்பொழுது குடிப்பதற்கு மட்டுமல்ல, அனைத்து தேவைகளுக்குமே
காசு கொடுக்காமலே தண்ணீர் கிடைக்கிறதா?
வீட்டுக்கு விருந்தினர் வந்தால் காசு செலவு செய்ய தயாராக இருப்போரும்
தண்ணீர் செலவு செய்ய தயாரா?
இதே நிலைமை நீடித்தால் நாம் அடுத்த தலைமுறைக்கு
எதை விட்டுச் செல்ல போகிறோம்?
நினைத்தால் மலைப்புத்தான்!
ஒன்றுபட்டால் மலையை புரட்டலாம்!
ஒன்றுபட்டால் மலையை புரட்டலாம்!
ஒன்றுபட்டால் மலையை புரட்டலாம்!

20 July 2012

FACEBOOK சிறந்த பதிவுகள் - 07


டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி
20/07/2012
இனி, பழனிக்கு போயிட்டு வர சொந்தகாரன் எவனையும் வீட்டு பக்கம் விடகூடாது.. வீட்ல ஒரு வாரமா தோசைக்கு தொட்டுக்க பஞ்சாமிர்தம்தான் வைக்கிராய்ங்க..:(

FACEBOOK சிறந்த பதிவுகள் - 06

Vijay Sivanandam (ரௌத்திரக்காரன்)
<பளபளன்னு வெள்ளை வேஷ்டி சட்டைல இன்னோவா கார்ல இருந்து எறங்கி ஒரு கல்யாணத்துக்கு போங்க .......>

<சாதாரண சட்டை பேண்ட்ல பஸ்ச விட்டு இறங்கி ஒரு கல்யாணத்துக்கு போங்க .....>
#அப்புறம் தெரிஞ்சிக்கலாம் மக்களோட மனப்பக்குவத்த....
#சாதாரணமா கல்யாணத்துக்கு போறவன் நிலைமை எல்லாம் இன்னிக்கு டூ சீரியஸ் ....:(((((((((

19 July 2012

FACEBOOK சிறந்த பதிவுகள் - 05

TAMILARASI DHANDAPANI
19/07/2012
கனத்த மனநிலையிலும்
மகிழ்ச்சியான கவிதைகளையே
எழுதுகிறேன்
வாழ்வில் இல்லாதது
கவிதைகளிலாவது
இருக்கட்டுமென..!

FACEBOOK சிறந்த பதிவுகள் - 04

டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி
19/07/2012
உனக்கு ஏன் என்னை பிடிச்சிருக்கு?
என்னை மறந்திட மாட்டியே?
என்னை எவ்ளோ பேர் ப்ரபோஸ் பண்ணிருக்காங்க தெரியுமா?
இந்த மூணு மொக்கை கேள்வியையும் கேட்காத கேள் பிரண்ட் உலகத்திலேயே கிடையாது.. திருந்துங்க.. முடியல..

FACEBOOK சிறந்த பதிவுகள் - 03

YARLINI RAJENDIRAN YARLINI
17/07/2012
கொம்பு முளைத்த செல்போன் மறந்து
தம்பு (Thumb) தடவிப் பேசிக்கொண்டிருக்கிறோம்...!!!

சட்டை சுரண்டிப் பணம்தேடுவதை மறந்து
அட்டை சுரண்டித் தேடிக்கொண்டிருக்கிறோம்...!!!

முகம் பார்த்துச் சிரிக்க மறந்து
முகப்புத்தகம் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறோம்...!!!

ஹிம்... எழுதுகோள் பிடிக்க மறந்து
இப்படி எலியை பிடித்துக்கொண்டிருக்கிறோம்...!!!

-மறந்தது எத்தனையோ.....

FACEBOOK சிறந்த பதிவுகள் - 02

surya born to win (இனியன்)
19/07/2012
டாக்டர்! தெனமும் எனக்கு விநோதமான கனவெல்லாம் வருது. நீங்கதான் எனக்கு உதவணும்"

"என்ன மாதிரியான கனவு ?"

"தெனமும் கழுதைகளோட நான் கால்பந்து விளையாடுறதா கனவு வருது"

"தினமுமா?"

"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வேற வேற கழுதை குழுவோட வெளையாடுறேன். சில சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்கள்ல அதுங்க ஜெயிக்குதுங்க."

டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகளை அவரிடம் கொடுத்து,

"நாலு மணி நேரத்துக்கொருமுறை மூணு மாத்திரை வீதம் சாப்பிடுங்க. இம்மாதிரியான கனவுலேர்ந்து முற்றிலுமா உங்களுக்கு விடுதலை கிடைக்கும்" என்றார்.

"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"

"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?"

"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்' இருக்கு" :-)))))

FACEBOOK சிறந்த பதிவுகள் - 01


sugumaran sugu
19/07/2012
கொஞ்சம் காதல், கொஞ்சம் மோதல், கொஞ்சம் கோபம்,
கொஞ்சம் நக்கல், கொஞ்சம் கிண்டல், கொஞ்சம் அரசியல்
இவையனைத்தும் இருந்தால்தான் " அது முக நூல் "
முகமென்றால் அனைத்து பாவனைகளும் இருக்கவேண்டும்.
இல்லையென்றால் அது உப்பிலாத பழங்கஞ்சி போன்றாகிவிடும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT