உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

20 December 2012

நித்யஸ்ரீ தற்கொலை முயற்சி!! நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை!


பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் மகாதேவன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொ‌லை செய்து கொண்டார். கணவரின் தற்கொலை செய்தி அறிந்து நித்யஸ்ரீயும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு ‌தற்கொலைக்கு முயன்றுள்ளார். மறைந்த கர்நாடக இசை மேதை டி.கே.பட்டமாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன். இசை குடும்பத்தில் இருந்து வந்த இவருக்கும் இசை மீது அளவுக்கு அதிகமான மோகம். அதனாலேயே இவரும் கர்நாடக இசையை கற்று தேர்ந்து பிரபலமானார். பல்வேறு மேடைகளில் கர்நாடக இசையை பாடியுள்ளார். சினிமாவிலும் நிறைய படங்களில் பாடியிருக்கிறார். அதுமட்டுமல்லாது 100க்கும் மேற்பட்ட ஆல்பங்களையும் உருவாக்கியுள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய சபாக்களிலும் பாடியுள்ளார். இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுக்க தனது இனிமையான குரலால் அனைவரையும் மயக்கியவர் நித்யஸ்ரீ மகாதேவன். இவருக்கும் மகாதேவன் என்பவருக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனுஸ்ரீ, தேஜாஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் இன்று மதியம் 12.50 மணியளவில் நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே நித்யஸ்ரீயும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது நித்யஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனது கணவரை பார்க்க வேண்டும் என்று பிடிவாதமாக வீடு திரும்பி இருக்கிறார். தற்போது மகாதேவனின் உடலை கைப்பற்றி உள்ள போலீசார் சென்னை ராயப்பேட்டை மருத்துமனையில் வைத்துள்ளனர்.

குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னை காரணமாக மகாதேவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

19 December 2012

ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் வீடியோகானும் விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.,சில் ஒளிபரப்புகின்றன

ஏர்டெல்லை தொடர்ந்து ரிலையன்ஸ் மற்றும் வீடியோகானும் விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.,சில் ஒளிபரப்புகின்றன. கமல் ஹாசன் நடிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வரூபம். முதன்முறையாக இத்திரைப்படம் டி.டி.எச் மூலம் வெளியிடப்பட இருக்கிறது. ஆரம்பத்தில் விஸ்வரூபம் திரைப்படம் ஏர்டெல் டி.டி.எச்சில் மட்டுமே வெளியிட இருந்தது. தற்போது அந்த நிலை மாறி ரிலையன்ஸ் மற்றும் வீடியோகான் டி.டி.எச்சிலும் ஒளிபரப்பபட இருக்கிறது. ஆரோ 3டி எனும் நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் அடுத்த மாதம் 11ம் தேதி திரைக்கு வருகிறது. டி.டி.எச்சில் ஒருநாள் முன்னதாக அதாவது 10ம் தேதி இரவே ஒளிபரப்பபடுகிறது. இந்த டி.டி.எச் இணைப்புக்கு ரூ.1000 வரை வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.

VISHNUVARDHAM FILM AJITH ACCIDENT - EXCLUSIVE VIDEO


Shooting Spot Accident Of Ajith During Vishnuvardhan Film - EXCLUSIVE VIDEO

விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் திரையிட விடமாட்டோம்!

டி.டி.எச்.,-ல் வெளியிடப்படும் எந்த திரைப்படத்தையும் நாங்கள் தியேட்டரில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் கமலின் விஸ்வரூபம் படம் தியேட்டரில் ‌ரிலீஸ் ஆவது சிக்கலாகியுள்ளது. கமல் நடித்து, இயக்கி, ஹாலிவுட் பாணியில் பிரம்மாண்டமாய் தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். இப்படம் பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. 

இந்நிலையில் இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பாக டி.டி.எச்.,ல் வெளியிட கமல் முடிவு செய்துள்ளார். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு தெரிவித்தபோதும், தியேட்டர் உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கமல் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக கமல் தரப்பிலும், தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பிலும் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் கமல் தமது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. அதேபோல் தியேட்டர் உரிமையாளர் தங்களது முடிவில் பின்வாங்கவில்லை. இதனிடையே விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.-ல் வெளியிட் ஏர்டெல், வீடியோகான் போன்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தின் அவசரக்கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்டவர்களுடன் 80க்கும் மேற்பட்ட தி‌யேட்டர் உரிமையாளர்களும் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் டி.டி.எச்.சில் வெளியிடப்படும் எந்த திரைப்படத்தையும் தியேட்டரில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் விஸ்வரூபத்தை ஒளிபரப்பினால் தியேட்டர்களில் அப்படத்தை திரையிடக்கூடாது என்றும், விஸ்வரூபம் மட்டுமல்லாது எதிர்காலத்தில் எந்த படமும் இதுபோன்று டி.டி.எச்.ல் ஒளிப்பரப்பபட்டால் அந்த படங்களையும் தியேட்டரில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தியேட்டர் உரிமையாளர்களின் இந்த முடிவால் விஸ்வரூபம் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

16 September 2012

காமெடி நடிகர் லூஸ் மோகன் மரணம்!

காமெடி நடிகர் லூஸ் மோகன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. சென்னையை பூர்விகமாக கொண்ட லூஸ் மோகன் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் பி.யூ.சின்னப்பாவின் நாடக குரூப்பில் சேர்ந்து நடித்து வந்தார். பின்னர் ஹரிதாஸ் என்ற படம்மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ‌ஆரம்பத்தில் மோகன் என்ற பெயரிலேயே லூஸ் மோகன் நடித்து வந்தார். லூஸ் - டைட் என்ற படத்தில் பிரபலமானதைதொடர்ந்து மோகன் லூஸ் மோகன் எனும் அடைமொழியோடு நடித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி முதல் ரஜினி, கமல் வரை முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் லூஸ் மோகன். சென்னையிலேயே மோகன் பிறந்ததால், சென்னை பாஷை இவருக்கு மிகவும் சாதரணம். இந்த பாஷையை பேச இவருக்கு நிகர் வேறு யாரும் கிடையாது.

இதுவரை 3000-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ள லூஸ் மோகன் கடைசியாக தங்கர்பச்சானின் அழகி படத்தில் நடித்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் மகன் கார்த்திகேயனுடன் வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் லூஸ் மோகனுக்கு  இன்று காலை உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து அவர் உடனடியாக ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த லூஸ் மோகனுக்கு பச்சையம்மாள் என்ற மனைவி இருந்தார். அவரும் கடந்த 2004-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகனும், 3 மகளும் உள்ளனர். சமீபத்தில் லூஸ் மோகன், தனது மகன் மற்றும் மருமகள் என்னை சரியாக கவனித்து கொள்வது இல்லை. பணத்திற்கு குறைவில்லை என்றாலும், "சாப்பிட்டியா, நல்லா இருக்கியா எனக் கேட்க கூட யாரும் இல்லை. மகன் இருந்தும் அனாதையாக உள்ளேன். அவர் என்னை கவனித்துக் கொண்டால் போதும். இதற்கு, போலீசார் தான் உதவி செய்ய வேண்டும் என்று போலீஸில் புகார் கொடுத்தார். பின்னர் தனது மகன் தன்னை கவனிப்பதாக கூறியதை அடுத்து தனது புகாரை வாபஸ் பெற்று கொண்டார்.

மறைந்த லூஸ் மோகனின் உடல், அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் அவருக்கு இரங்கலும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். மாலை அவரது இறுதிசடங்கு நடைபெற இருக்கிறது.

நன்றி: தினமலர் 

01 September 2012

முதன்முறையாக தாடி இல்லாமல் நடிக்கிறார் சசிகுமார்!

"சுப்ரமணியபுரம் துவங்கி, தற்போது நடித்துள்ள, "சுந்தரபாண்டியன் வரை, தான் நடித்த அனைத்து படங்களிலும், தாடி கெட்டப்பிலேயே நடித்துள்ளார் சசிகுமார். ஆனால், அடுத்த ஆண்டு தான் இயக்கி, நடிக்கவுள்ள ஒரு படத்திற்காக, முதன்முறையாக தாடி இல்லாமல் நடிக்கிறார்.  மேலும், தொடர்ந்து புதுமுக டைரக்டர்களின் படங்களிலேயே நடிக்க திட்டமிட்டிருப்பவர்,  தன் மூலமாக, குறைந்தது ஒரு பத்து இயக்குனர்களையாவது அறிமுகம் செய்ய, யோசித்து வருவதாக சொல்கிறார்.

22 August 2012

புது பொலிவு பெறும் எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்கள்

"கர்ணன் படம் புதுப்பொலிவுடன் வெளியிடப்பட்டதில், சக்கை போடு போட்டதால், தமிழ் சினிமா உலகத்தில் பழைய படங்களை மறுவெளியீடு செய்யும் புது, "டிரெண்ட் உருவாகியுள்ளது. எம்.ஜி.ஆரின், "மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், எங்க வீட்டுப் பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, வேட்டைக்காரன் ஆகிய படங்களும். சிவாஜியின், "பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், புதிய பறவை, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களும்,  தற்போதுள்ள நவீன திரையரங்குகளின் தரத்திற்கேற்ப,  மெருகேற்றப்பட்டு மறுவெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

19 August 2012

தமிழில் வெளிவருகிறது சிவாஜி நடித்த தெலுங்கு படம்!

கர்ணன் படம் மறு திரையீட்டில் பெரிய வரவேற்பை பெற்றதும், சினிமாக்காரர்களுக்கு என்ன செய்வது, ஏதுசெய்வது என்றே தெரியவில்லை. சிலர் சிவாஜியின் பழைய ஹிட் படங்களை தூசு தட்ட ஆரம்பித்திருக்கின்றனர், திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்பன், திரிசூலம், தங்கப்பதக்கம், கவுரம், புதிய பறவை என சிவாஜி படங்களை டிஜிட்டல் படுத்தி வெளியிட பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கும் ஒரு படிமேலே போய்விட்டார்கள் தெலுங்கு சினிமாகாரர்கள். 1987ம் ஆண்டு சிவாஜி நடித்த தெலுங்கு படம் விசுவநாத நாயகுடு, இது 16ம் நூற்றாண்டில் நடந்த சரித்திரத்தை மையமாக கொண்டது. புகழ்பெற்ற மன்னர் கிருஷ்ணதேவராயரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் விசுநாத நாயகுடு. தமிழ்நாட்டு ராஜராஜசோழன் போன்று அங்கு புகழ் பெற்றவர். இவரது சரித்திரப் படம்தான் இது. இதில் விசுவநாதநாயுகுடுவாக அப்போது தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக இருந்த கிருஷ்ணா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாகவும், அரசவை நடனக்காரியாகவும் ஜெயப்பிரதா நடிதிருந்தார். சிவாஜி, விசுநாதநாயுடுகுவின் தந்தை நாகம்ம நாயக்கராக நடித்திருந்தார். அவருக்கு ஜோடி கே.ஆர்.விஜயா. படத்தை தாசரி நாராயணராவ் இயக்கி இருந்தார். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்.

அப்போது இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிட யாரும் முன்வரவில்லை. இப்போது கர்ணன் காட்டிய வழியில் தாசர நாராயணராவின் உறவினர்கள் பத்ரகாளி, பெத்தபாபு ஆகியோர் தங்களின் குருபிரம்மா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் இதை டப் செய்து வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். படத்திற்கு படத்தில் சிவாஜியின் கேரக்டர் பெயரான நாகம்ம நாயக்கர் என்று வைத்திருக்கிறார்கள்.

எப்போதோ செய்திருக்க வேண்டியதை இப்போதாவது செய்ய முன்வந்ததற்கு வாழ்த்து சொல்லலாம். ஆனால் டப்பிங்கிற்கு அந்த சிம்மக்குரல் வேண்டுமே அதற்கென்ன செய்யப்போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

14 August 2012

ரஜினியின் முதல் 3டியில் வெளியாகும் படம் சிவாஜி...!

சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற சிவாஜி படம் இப்போது 3டியில் உருவாகி ரஜினியின் முதல் 3டி படமாக வெளியாக இருக்கிறது. ஏ.வி.எம். தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, ஸ்ரேயா நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த படம் சிவாஜி. ஷங்கர்-ரஜினி கூட்டணியில் அமைந்த முதல்படம் இது. கறுப்புபணத்தை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அத்துடன் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இடம்பெற்ற சஹானா, ஆம்பல் ஆம்பல், அதிரடிக்காரன் மச்சான்... போன்ற பாடல்கள் பிரபலமும் அடைந்தன.

இந்நிலையில் இப்படத்தை இப்போது 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட ஏ.வி.எம். நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி கடந்த ஒருவருடமாக சுமார் 400 தொழில்நுட்ப கலைஞர்களுடன் சிவாஜியின் 3டி தொழில்நுட்ப பணியை பிரசாத் லேப்பில் தொடங்கியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மிக பிரம்மாண்டமாக சிவாஜி 3டி படத்தை உருவாக்கி உள்ளனர். ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பட்ட ரசிகர்களுக்கும் இப்படம் ஒரு புதுவித அனுபவமாக இருக்கும்.

படம் உருவான விதம் குறித்து நாம் கேட்டறிந்த செய்திகள் இதோ, பிரசாத் குரூப் நிறுவனம் திரு.சாய் பிரசாத் ஏ.வி.ஏம்.குகனை சந்தித்து 3டியில் படம் பண்ணலாமே என்று கேட்டபோது, ரஜினியின் சிவாஜி படத்தை எடுக்க முடிவு செய்தனர். அதன்படி இப்படத்தில் உள்ள காட்சிகள், பாடல்கள், சண்டைக்காட்சிகள் என்று ஒவ்வொரு காட்சியையும் பிரித்து எடுத்து, மிட் வைடு, க்ளோஸ் என்று ஒவ்‌வொரு பகுதியும் பிரிக்கப்பட்டு, ரோட்டோ ஸ்கோபி முறையில் தொடங்கி, அதற்கென உரிய சாப்ட்வேர் கொண்டு பிரேம் பை பிரேம் அவுட்புட் எடுத்து இறுதியாக படத்தின் தரம், கலர், சவுண்ட் உள்ளிட்டவைகள் 2டியில் எடுக்கப்பட்டு பின்னர் 3டியில் இப்படத்தை கொண்டு வந்துள்ளனர். மேலும் 3டியில் படத்தின் நீளமும் 2.17 மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது.

`சிவாஜி 3டி படத்தின் ஒரு பாடல் மற்றும் டிரைலர் பத்திரிகையாளர்களுக்கு நேற்று மாலை திரையிட்டு காண்பிக்கப்பட்டது. சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் கலந்து கொண்டார். நிருபர்களுடன் அமர்ந்து கறுப்பு கண்ணாடி அணிந்தபடி, `சிவாஜி 3டி படத்தின் பாடல் மற்றும் டிரைலரை பார்த்து ரசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஏவி.எம். நிறுவனம் `சிவாஜி படத்தை 3டி படமாக உருவாக்கியிருக்கிறது. இந்த படத்தை சில நாட்களுக்கு முன்புதான் எனக்கு திரையிட்டு காண்பித்தார்கள். என் படம் என்று தெரியாமல், நானே கைதட்டி ரசித்தேன். குறிப்பாக, பாடல் காட்சிகளை மூன்று முறை பார்த்து பிரமித்துப் போய்விட்டேன். `கோச்சடையான் படம்தான் முதலில் 3டியில் வருவதாக இருந்தது. ஏவி.எம். நிறுவனம் முந்திக்கொண்டார்கள். பத்திரிக்கையாளர்களாகிய உங்களுக்கே இந்த படம் பிடித்து இருக்கிறது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். சிவாஜியை தொடர்ந்து எந்திரன் படத்தை 3டியில் கொண்டு வரலாம். தமிழ் படங்கள் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டை நெருங்கிவிட்டது. அதை எண்ணும்போது பெருமையாக இருக்கிறது என்றார்.

அருணா குகன் : சிவாஜி 3டி படத்தின் தயாரிப்பாளரான அருணா குகன் கூறுகையில், சிவாஜி 3டி படத்தின் டிரைலர் பார்த்தேன். நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் இந்தப்படம் ரஜினி ரசிகர்களை வெகுவாக கவரும், படம் முழுமையாக முடிய இன்னும் சில பணிகள் இருக்கிறது. அது முடிந்ததும் விரைவில் திரைக்கு வரும் என்றார்.

அதிர வைத்த 'கொலவெறி' அனிருத் - ஆன்ட்ரியா ரியல் லிப்-டூ-லிப் கிஸ்

சமூக வலைத்தளங்கள், சினிமா தளங்களை நேற்றிலிருந்து ஒரு படம் அதிரவைத்துக் கொண்டிருக்கிறது... அது கொலவெறி புகழ் அனிருத்தும், ஆன்ட்ரியாவும் அடித்துக் கொள்ளும் ஒரு படு  லிப்-டூ-லிப் கிஸ்
சினிமாவில் கூட இப்படி ஒரு முத்தக் காட்சியைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படியொரு முத்தம்...
அனிருத்துக்கும் ஆன்ட்ரியாவுக்கும் எப்படி 'இது' பத்திக்கிச்சு என பலரும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், இந்தப் பையனுக்கு 18 வயசுதான் ஆகுது. ஆன்ட்ரியாவோ, ஓரிரு வருடங்களில் ஆன்ட்டியாகும் வயதிலிருக்கிறார். இந்த இருவரின் உறவும் பொருந்தா காதலா, காமமா என்ற சர்ச்சைகளும் ஓடிக் கொண்டிருக்கின்றன.
அனிருத்தின் தந்தை நடிகர் ரவி ராகவேந்தர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிக நெருங்கிய உறவுக்காரர்.
அனிருத் ஒரே ஒரு படத்துக்குதான் இசையமைத்திருக்கிறார். பார்க்க ரொம்ப அப்பாவி சாதுப் பையன் போல இருந்தவர், இப்படி அடுத்த படம் தொடங்குவதற்குள்ளேயே ஆழமான காமத்தில் சிக்கிக் கொண்டாரே... என உச்சுக் கொட்டுகிறார்கள் அவரை அறிந்தவர்கள்.
அது கிடக்கட்டும். அவர்களின் பர்சனல் சமாச்சாரம் அது. நமக்கென்ன வந்தது என்று ஆதரவளிப்போரும் இல்லாமலில்லை!
யார் கண்டது... அது நாங்கள் இல்லை... கிராபிக்ஸ் என்று சொன்னாலும் சொல்வார்கள்!

12 August 2012

சிகரெட் பிடிக்கும் காட்சிக்கு இனி தடையில்லை!


சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவதற்கு மத்திய அரசு தடை விதித்து இருந்தது. நடிகர்களைத் தாண்டி, நடிகைகளும் ஏகாந்தமாக தம்மடிப்பது போல காட்சிகளை வைக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டதால், திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னணி நடிகர் நடிகைகளும் கண்டித்தனர். ஆனால் தடை உத்தரவை நடைமுறைப் படுத்துவதில் உறுதியாக இருந்தது மத்திய அரசு.

நடிகர்கள் புகை பிடிப்பதை பார்த்து இளைய தலைமுறையினர் அப்பழக்கத்துக்கு அடிமையாவதால் அத்தகைய காட்சிகள் இடம்பெறக்கூடாது என அரசும் சமூக நல ஆர்வலர்களும் கூறினர். ஆனால் இப்போது தனது உத்தரவை மத்திய அரசு திடீரென வாபஸ் பெற்றுள்ளது. கதைக்கு தேவை என்றால் புகை பிடிக்கும் காட்சியை வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. புகை பிடிக்கும் காட்சிகளை வைப்பதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. படம் துவங்கும் போது புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகத்தை இடம்பெறச் செய்யவேண்டும். இடைவேளை விட்டு படம் துவங்கும் போதும் இந்த வாசகம் இருக்க வேண்டும். புகை பிடிக்கும் காட்சி வரும் போதும் நன்றாக பெரிய எழுத்தில் இந்த வாசகம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

காதலிக்க 7 நாட்கள் போதும்!

இன்றைய கால கட்டத்தில் காதலிக்க ஏழு வருடங்கள் தேவையில்லை; ஏழு நாட்கள் போதும்... என்ற லவ் மெசேஜூடன் உருவாகி வருகிறது நந்தனம் படம். இன்றைய பெண்களும் சரி, ஆண்களும் சரி வாழ்க்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை முன்னிறுத்தியே தங்கள் சக துணையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற மையக்கருவை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் புது இயக்குநர் என்சி ஷியாமளன். இவர் டைரக்டர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

சிங்கக்குட்டி படத்தின் மூலம் மிகப் பிரமாண்டமாக அறிமுகம் செய்யப்பட்ட சிவாஜி தேவ்தான் படத்தின் நாயகன். செவாலியே சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் புதல்வர். தன் தாத்தாவின் பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டுள்ளார். சிங்கக்குட்டி முடித்த கையோடு லண்டனில் நடிப்புப் பயிற்சியை மேற்கொள்ளச் சென்றவர், இப்போது அடுத்தடுத்து புதிய படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார். நந்தனம் தன்னையும் கோடம்பாக்கத்தில் ஒரு நல்ல இடத்தில் கொண்டுபோய் நிறுத்தும் என்கிறார் நம்பிக்கையுடன். நாயகியாக நடிகை மித்ரா குரியன் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நடிகர் ரிஷி நடிக்கிறார். காமடி களத்தை அயன் ஜெகன் களைகட்ட வைக்க, ஈசனுக்குப் பிறகு ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஏ.எல்.அழகப்பன். முதல் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் உள்ள நந்தனம் மற்றும் ஹெச்.சி.எல். போன்ற பிரபல ஐ டி நிறுவனங்களில் அனுமதி பெற்று நடைபெற்றது.

10 August 2012

துப்பாக்கி விஜய் படத்தை கைப்பற்றியது விஜய் தொலைக்காட்சி

கோச்சடையான், விஸ்வரூபம் திரைப்படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் துப்பாக்கி. விஜய் நடிக்கும் இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். முதன் முறையாக இந்த கூட்டணி இணைந்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் துப்பாக்கி திரைப்படத்தின் தலைப்பு, ஒரு புறம் பிரச்னையாக இருந்தாலும் படத்திற்கான தொலைக்காட்சி உரிமையை பெருந்தொகை கொடுத்து விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயின் முந்தைய படமான நண்பன் திரைப்படத்தையும் விஜய் தொலைக்காட்சி ரூ.12 கோடி கொடுத்து பெற்றிருந்தது. தற்போது அந்த தொகையை விட பெருந்தொகை கொடுத்து துப்பாக்கி படத்தை கைப்பற்றியுள்ளது.

09 August 2012

மீண்டும் நடிக்கிறார் விசு

பிரபல இயக்குனர், வசனகர்த்தா, இயக்குனர் விசு, மீண்டும் நடிக்கிறார். மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம் உள்பட பல்வேறு குடும்ப படங்களை இயக்கியவர், தில்லுமுல்லு, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர். தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்த சென்ற பிறகு விசு சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வந்தார். உடல்நல குறைவு காரணமாக நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தார். ஆரோக்கியமான காற்று, அமைதியான சூழ்நிலை இவற்றுக்காக சென்னையை விட்டு ஒதுங்கி புறநகர் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். சமீபத்தில் நடந்த பெப்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு ஒருசில ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தற்போது நல்ல உடல் ஆரோக்கியம் பெற்றுள்ள விசு,  மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். லவ் டூடே, துள்ளித் திரிந்த காலம், ஆர்யா படங்களை இயக்கிய பாலசேகரன் இயக்கும் புதிய படமான ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நல்ல கேரக்டர்கள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தில் ராட்டினம் படத்தில் நடித்த லகுவரனும், சுவாதியும் ஹீரோ ஹீரோயின்களாக மீண்டும் ஜோடி சேருகிறார்கள்.

08 August 2012

மாற்றான் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாற்றான். ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக இப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.  சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் நாளை(09.08.12) பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. விழாவில் நடிகர், நடிகைகளின் ஆட்டம், பாட்டு என ஒரு கலை நிகழ்ச்சி போல இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இதற்காக பிரபல நடிகர், நடிகைகள் இன்று சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளனர். டைரக்டர்கள் லிங்குசாமி, கவுதம் மேனன், நடிகர்கள் கார்த்தி, பிரசன்னா, அவரது மனைவியும் நடிகையுமான சினேகா, நடிகைகள் சோனியா அகர்வால், ஹன்சிகா, அஞ்சலி, பூர்ணா, பாடலாசிரியர்கள் தாமரை, பா.விஜய், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

07 August 2012

நடிகை அனன்யா - ஆஞ்சநேயலு ரகசிய திருமணம்!

நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனன்யா. இவருக்கும், கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயலுக்கும் பிப்ரவரி 3ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிச்சயதார்த்தத்திற்குப் பிறகுதான் ஆஞ்சநேயலு ஏற்கனவே திருமணமானவர் என தெரியவந்தது. இதனால் இருவருக்கும் நடக்கவிருந்த திருமணம் ரத்தானது. இதனையடுத்து நடிகை அனன்யா மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் தன்னுடைய மகள் அனன்யா வீட்டை விட்டு வெளியேறி ஆஞ்சநேயலுவுடன் திருப்பதியில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அனன்யாவில் தந்தை கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். என் மகளுக்கு ஆஞ்சநேயலு பொருத்தமானவரில்லை. அனன்யா எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார் எனவும் கூறினார்.

பொன்விழா கொண்டாடும் பொன்னான படங்கள்...!

வேகமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் பெற்ற பிள்ளைகளின் பிறந்த நாளைக்கூட மனதில் வைத்துக் கொண்டாட முடியாமல் இருக்கிறோம். அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு 50 வயதை தொட்டு பொன்விழா கொண்டாடும் படங்களை பற்றி மட்டும் எப்படி நினைத்துக் கொண்டிருப்போம். இதோ தினமலர் இணையதளம் நினைவூட்டுகிறது.

இந்த ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முந்தைய 1962ம் ஆண்டு சினிமாவில் பொற்காலமாக இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்ற மூவருக்கும் இடையில் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது. இது ரசிகனுக்கு தரமான படங்களை கொடுத்தது. பா வரிசை படங்கள் அதிகம் வெளிவந்தது இந்த ஆண்டில்தான். மொத்தம் 51 படங்கள் வெளிவந்திருந்தாலும் மக்கள் கவனத்தை ஈர்த்தது சுமார் 20 படங்கள். அவை இப்போதும் காலத்தை கடந்து நிற்கிறது. இந்த ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அதிக பட்டசமாக 7 படங்களிலும், எம்.ஜி.ஆர் 6 படங்களிலும், ஜெமினி கணேசன் 5 படங்களிலும் நடித்திருந்தார்கள்.

எம்.ஜி.ஆர் நடித்த படங்கள்:

குடும்ப தலைவன்: தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில், எம்.ஏ திருமுகம் இயக்கி இருந்தார். கே.வி.மகாதேவன் இசை அமைப்பு. சரோஜாதேவி ஹீரோயின்

மாடப்புறா: பி.வி.என் பிக்சர்ஸ் தயாரித்து, எஸ்.ஏ.சுப்பாராமன் இயக்கிய படம். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். சரோஜாதேவி ஜோடி.

 பாசம்: டி.ஆர்.ராமண்ணா இயக்கிய படம் விசுவநாதன்&ராமமூர்த்தி இசை, ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரிப்பு. சரோஜாதேவி ஹீரோயின்

தாயை காத்த தனயன்: தேவர் பிலிம்ஸ் தயாரித்து எம்.ஏ.திருமுகம் இயக்கிய படம். கே.வி.மகாதேவன் இசை. சரோஜாதேவி ஹீரோயின்.

விக்ரமாதித்தன்: பாரதி புரொடக்ஷன் தயாரித்து, டி.ஆர்.ரகுநாத் இயக்கிய படம். எஸ்.ராஜேஷ்வரராவ் இசை. பத்மினி ஜோடி.

(சிறப்பு குறிப்பு 4 படங்களில் சரோஜாதேவிதான் ஹீரோயின், ஒரு படத்தில் மட்டும் பத்மினி)

சிவாஜி நடித்த படங்கள்

ஆலயமணி: கே.சங்கர் இயக்கத்தில் பி.எஸ்.வி பிக்சர்ஸ் தயாரித்த படம். விசு&ராம் இசை. ஜோடி சரோஜாதேவி. இவர்கள் தவிர எஸ்.எஸ்.ராஜேந்திரன்-&விஜயகுமாரி ஜோடியும் நடித்திருந்தனர்.

பலே பாண்டியா: பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பு, பி.ஆர்.பந்துலு இயக்கம், விசு&ராம் இசை. தேவிகா ஹீரோயின்.

பந்த பாசம்: பீம்சிங் இயக்கம், சாந்தி பிலிம்ஸ் தயாரிப்பு, தேவிகா, சாவித்தி என இரு ஜோடிகள்.

நிச்சயதாம்பூலம்: ஜமுனா ஹீரோயின், விசு&ராம் இசை, வி.எஸ்.ரங்கா இயக்கம்.

பார்த்தால் பசி தீரும்: ஏவிஎம் தயாரித்த படம். இயக்கம் ஏ.பீம்சிங், ஜோடி சரோஜாதேவி. ஜெமினிக்கு ஜோடி சாவித்ரி, சவுகார் ஜானகி. கமல் குழந்தை நட்சத்திரமாக நடித்த படம்.

படித்தால் மட்டும் போதுமா: இதுவும் பீம்சிங் இயக்கிய படம், ரங்கநாதன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ஜோடி சாவித்ரி, விசு&ராம் இசை.

வடிவுக்கு வழைகாப்பு: புராண படங்களை இயக்கும் ஏ.பி.நாகராஜன் இயக்கிய சமூக படம். கே.வி.மகாதேவன் இசை. ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ் தயாரிப்பு. ஹீரோயின் சாவித்ரி.

(சிறப்பு குறிப்பு வடிவுக்கு வளைகாப்பு தவிர மற்ற படங்கள் அனைத்திற்கும் எம்.எஸ்.விசுநாதன் இசை அமைத்துள்ளார்)

ஜெமினி கணேசன் நடித்த படங்கள்

காத்திருந்த கண்கள்: வசுமதி பிக்சர்ஸ் தயாரிப்பு, டி.பிரகாஷ்ராவ் இயக்கம், சாவித்ரி ஜோடி. விசு&ராம் இசை.

கொஞ்சும் சலங்கை: ராமன் புரொடக்ஷன் தயாரிப்பு, எம்.வி.ராமன் இயக்கம், சுப்பையா நாயுடு இசை. சாவித்ரி ஜோடி

பாத காணிக்கை: கே.சங்கர் இயக்க சரவணா பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விசு&ராம் இசை. ஜோடி சாவித்ரி

சுமைதாங்கி: ஸ்ரீதர் இயக்க விசாலாட்சி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம். விசு&ராம் இசை. தேவிகா ஹீரோயின்

ஆடிப்பெருக்கு: கே.சங்கர் இயக்கம். ஹீரோயின் சரோஜாதேவி.

(சிறப்பு குறிப்பு 3 படங்களில் சாவித்ரி ஜோடி)

இதுதவிர டி.எம்.சவுந்தராஜன் நடிப்பில் உருவான பட்டினத்தார், முத்துராமன் நடித்த போலீஸ்காரன் மகள், எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த சாரதா ஆகிய படங்களும் பொன்விழா கண்டுள்ளன.

காலத்தை வென்று நிற்கும் இந்தப் படங்களுக்கு நம்மால் பொன்விழா கொண்டாட முடியாவிட்டாலும் மனதளவில் நினைத்துக் கொள்வோமே...

06 August 2012

நான் ஈ பார்ட்-2

தெலுங்கு, தமிழில் வெளியான நான் ஈ படம் பெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் பெரும் வசூலைக் குவித்தது. இதனால் இந்தப் படத்தின் பார்ட்-2 வரும் என்று பரவலாக பேச்சு இருந்து வந்தது. இப்போது அதற்கு படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும், நடிகர் சுதீப்பும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். படத்தின் வெற்றியை கொண்டாட சென்னை வந்த சுதீப் "இயக்குனர் ராஜமவுலி எப்போதுமே ஒரே வேலையை இரண்டாவது முறை செய்ய மாட்டார். அதனால் நான் ஈ பார்ட்-2 வுக்கு சாத்தியமே இல்லை. அதோடு நான் ஈ உருவாக்க பட்ட சிரமங்களை நினைத்துப் பார்த்தால் இனி அப்படி ஒரு படம் செய்ய எனக்கு துணிச்சல் இல்லை" என்றார். இதேபோன்று ராஜமவுலி ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் "ரீமேக், பார்ட்-1 கான்செப்டில் எனக்கு விருப்பம் இல்லை. ஒவ்வொரு படமும் புதிதாக இருக்க வேண்டும் என்ற விரும்புவேன். அதற்காக கடுமையாக உழைப்பேன். எனது அடுத்த படமும் இதுவரை இயக்கிய 9 படங்களிலிருந்து நிச்சயம் மாறுபட்டு இருக்கும். ரஜினி நடிப்பில் ஒரு படம் இயக்க வேண்டும் என்பதும், மகாபாரத்தை உலக ரசிகர்கள் பார்க்கும் வகையில் இயக்க வேண்டும் என்பதும் என் கனவு" என்றார். இதனால் நான் ஈ பார்ட்-2 ல்லை என்பது தெளிவாகிவிட்டது.

05 August 2012

ஜப்பானிய மொழி பயின்று வருகிறார் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கோச்சடையான். படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிட்டதால் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோச்சடையான் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டை  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரமாண்டமாக நடத்த தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. ஏனென்றால்  ரஜினிக்கு ஜப்பானிய ரசிகர்கள் அதிகம் என்பதால் அவர்களை உற்சாகப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் ஜப்பானிய ரசிகர்களை சந்தித்து பேசவும் இருக்கிறார். இதற்காக அவர்ஆசிரியர் ஒருவரிடம் ஜப்பானிய மொழி பயின்று வருகிறார்.

டாஸ்மாக் பாருக்குள் நடக்கும் சம்பவங்கள்


சமீபத்தில் வெளிவந்த படம் மதுபானக்கடை. ஒரு டாஸ்மாக் பாருக்குள் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பாருக்கு மது அருந்தவரும் விதவிதமான மனிதர்களின் செயல்பாடுகளை நகைச்சுவையாக காட்டி அதற்குள் ஒரு காதல் கதையை சொல்கிறார்கள். இந்தப் படத்தில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து இந்து அமைப்பு பிரமுகர் ஒருவர் கூறியதாவது: பாருக்கு மது அருந்த வரும் நபர்களில், அனுமன், ராமர் வேடமணிந்து பிச்சை எடுக்கும் இரண்டு பேரும் உண்டு. இவர்கள் அனுமன், ராமர் வேடத்திலேயே பாருக்குள் வந்து மது அருந்துவதோடு, அசைவமும் சாப்பிடுகிறார்கள். புகைபிடிக்கிறார்கள். மதுவுக்காக சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அது மட்டுமல்ல அனுமன் வேடத்தில் இருப்பவரிடம் ஒருவர் வந்து அவரை வணங்கி, "எனக்கு 40 வயதாகிறது இதுவரை திருணம் நடக்கவில்லை, பெண்ணும் கிடைக்கவில்லை. நீங்கள்தான் ஆசீர்வாதம் செய்து விரைவில் திருமணம் நடக்க உதவ வேண்டும்" என்கிறார். அதற்கு அனுமன் வேடத்தில் இருப்பவர் "நானே திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாக இருக்கிறேன். நீ இந்த கோரிக்கையை முருகன், கிருஷ்ணனிடம்தான் வைக்க வேண்டும்" என்பார். அதற்கு அந்த நபர் "அவர்கள் எல்லாம் இரண்டு மூன்று திருமணம் பண்ணினவர்கள். எனக்கு பார்த்த பெண்ணையும் தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்" என்கிறார். இதில் சில வார்த்தைகள் மவுனிக்கப்பட்டிருந்தாலும் இதுதான் வசனம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் படத்தில் அவர்கள் கடவுள் வேடத்தை கலைத்து விட்டு மது அருந்துவதாக காட்டியிருந்தால் பரவாயில்லை. ஆனால் இது திட்டமிட்டு செய்யப்பட்டிருப்பது போலவே தெரிகிறது" என்றார்
இந்து கடவுள்களை கிண்டல் செய்வதும், அவமானப்படுத்துவதும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார்கள். இந்து அமைப்பு நிர்வாகிகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT