உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466
Showing posts with label இன்றைய தகவல்கள். Show all posts
Showing posts with label இன்றைய தகவல்கள். Show all posts

06 August 2012

WI-FI நம் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் தடுக்க புதிய கண்டுபிடிப்பு


ஃப்ரான்ஸ் நாட்டை க்ரனோபல் இன்ஸ்டிட்யுட் ஆஃப்  பாலிடெக்னிக்கை(IPN) சேர்ந்த கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஒருவரான, பியர் லமாத்ர் ஒஜே , வீட்டு சுவர்களை அலங்கரிக்கும் புது வகையான ஒரு வால் பேப்பரை (Wall paper )கண்டு பிடித்துள்ளார். இந்த சிறப்பு வாய்ந்த வால் பேப்பரானது  நம் இணைய தளத்திலும் , கை பேசியிலும் வெளியாகும் வை ஃபை (WI-FI) மற்றும்  (GSM) அலைகளை , நம் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் தடுக்கிறது. இதனால் நம்முடைய வை- ஃபை மற்றவர் திருடி பயன்படுத்த முடியாமல் போகிறது.இந்த வால் பேப்பருக்கு மெட்டா பப்பியே (METAPAPIER) என்று பெயரிட்டுள்ளனர்.

22 July 2012

உலகம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும்?

2012 ஆம் ஆண்டு உலகம் பேரழிவைச் சந்திக்கும் என்ற அச்சமும் எதிர்பார்ப்புக்களும் பல வருடங்களுக்கு முன்னமே ஏற்பட்டு விட்டன. உலகம் இயற்கை அழிவுகளை எதிர் நோக்கி மனித இனம் பூமியில் உயிர்வாழும் சூழல் சிக்கலாகுவதை ஏற்கனவே வெளியான சில ஹாலிவுட் திரைப் படங்களிலும் சித்தரிக்கப் பட்டுள்ளன.
இதற்கு உதாரணமாக 'தி டீப் இம்பாக்ட்' மற்றும் '2012' ஆகிய திரைப்படங்களைக் கூறலாம். இத்திரைப் படங்களின் கதைப் படி 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21 உடன் மாயன் கலெண்டர் முடிவடைவதால் ஒரு யுகப் பிரளயம் நடந்தே புதிய யுகம் தோன்றும் என்று கூறப்படுகின்றது. இப் பிரளயம் நிகழக் கூடிய வழி வகைகள் பற்றிப் பின்வருமாறு கூறப்படுகின்றது.

1.விண்கற்கள்
சுமார் 6 மைல் விட்டமுடைய விண்கல் ஒன்று மிக வேகமாக பூமியில் மோதியதாலேயே 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த இராட்சத உயிரினங்களான டைனசோர்கள் முற்றாக அழிக்கப்பட்டன எனும் கருதுகோள் ஒன்று விஞ்ஞானிகளுக்கிடையே நிலவுகின்றது. கிட்டத்தட்ட அதே போன்ற சம்பவம் ஒன்று பூமியில் நிகழ்ந்தால் மனித இனத்துக்கும் அதே கதிதான் என இவர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் அதாவது 1908 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சைபீரியாக் காட்டில் மோதிய விண்கல்லினால் டோக்கியோ நகருக்கு ஒப்பான வெளி ஒன்று உருவான ஆதாரங்களும் உள்ளன.


2. தி ரப்ஜுர் (பேரானந்தம்)
இது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரு சாராரின் நம்பிக்கைப் படி 2011 மே 21 அல்லது ஆக்டோபர் 21 இல் உயிரிழக்காதவர்கள் அனைவரும் திவ்விய உடலைப் பெற்று வானத்தில் உறையும் கிறிஸ்துவுடன் இணைவர். அதன் பின் பூமி முழுதும் அழிந்து புது வாழ்க்கைக்குத் தயாராகி விடும்.

3. மாயன் தீர்க்கதரிசனம்
உலகின் மிகவும் புராதன அதே நேரம் பரிணாமத்தில் உச்சக் கட்டத்தை அடைந்து அழிந்து போன நாகரிங்களில் ஒன்றான மாயன் இனத்தவரின் சூரிய நாட்காட்டி டிசம்பர் 21 2012 உடன் முடிவடைகின்றது. இதன் போது சுமார் 25 800 வருடங்களுக்கு ஒருமுறையே ஏற்படும் நிகழ்வாக பால்வெளி அண்டத்தின் (Milky way galaxy) மையத்திற்கு பூமியும் சூரியனும் வரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வரும் பட்சத்தில் பூமியின் ஈர்ப்பு விசையில் குளறுபடி ஏற்பட்டு மிகப் பெரியளவு இயற்கை அனர்த்தங்கள் அதாவது சுனாமி, பூகம்பம், எரிமலை வெடிப்பு, டோர்னிடோ, என்பன ஏற்பட்டு உலகம் அழிவடையும் என மும்மொழியப் பட்டுள்ளது.

4. மனித இனத்தை கூண்டோடு அழிக்கவல்ல வைரஸ் (Zombies)
மனித இனம் கூண்டோடு அழியத்தக்க விதத்தில் மாற்று மருந்து இல்லாத வைரஸ் கிருமிகள் மனித உடலில் செலுத்தப்பட்டு அம்மனிதர்கள் மூளைச்சாவடைந்து ஒருவரை ஒருவர் மூர்க்கமாக அழித்துக் கொள்வர். இவர்கள் Zombies எனப்படுவர்.

தற்போது கற்பனையிலும் திரைப்படங்களிலும் மட்டுமே நிகழ்ந்து வரும் Zombies பற்றிய கருதுகோள் சாத்தியப் படாவிட்டாலும் மனித இனத்தை ஏற்கனவே பாதித்து வரும் மாற்று மருந்து இல்லாத தொற்று நோய்கள் இவர்கள் மத்தியில் காணப்படுகின்றன. இவையாவன 'SARS', 'avian flu',swine flu, birds flu and AIDS

5. விசேட உயிர் எரிமலை - (Super Volcano)
ICE AGE எனும் அண்மைய கடும் பனிக்காலத்தின் இறுதியில் அதாவது சுமார் 75 000 வருடங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள டோபா விசேட உயிர் எரிமலை வெடித்து அதன் புகை மண்டலம் பூமியின் முக்கால்வாசி வான் பரப்பை மறைத்தது. இதனால் பல நாட்களுக்கு சூரிய ஒளி மறைக்கப்பட்டு கடும் பனியில் வாடி தாவரங்களும் பல்கிப் பெருகியிருந்த விலங்குகளையும் அழித்துத் துடைத்தது.

இதே போன்ற ஒரு ஆபத்து 21 ஆம் நூற்றாண்டிலும் நேரிடலாம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். அதாவது அமெரிக்காவின் வியோமிங் மாநிலத்திலுள்ள மிகப் பெரிய பரப்பளவை உடைய விசேட உயிர் எரிமலையான 'யெல்லோ ஸ்டோன்' (Yellow stonee) வெடித்த்தால் அமெரிக்காவின் மூன்றில் இரண்டு பங்கு பகுதி புகை மண்டலத்தால் சூழப்பட்டு அழிவினைச் சந்திக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

21 July 2012

மொழிகளின் தோற்றம்



பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுக்கு எழுத தெரியாது. ஏனென்றால் அப்பொழுது எழுத்துக்களோ, மொழிகளோ உருவாகவில்லை.
தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த செய்கைகளை பயன்படுத்தினார்கள். பின்னர் படங்களை காட்டினர். உந்தாரனமாக ஒரு புலியை பற்றிய தகவலை தெரிவிக்க, புலியின் உருவத்தை காட்டினர்.

          ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திலும், மேசப்போடோமியாவிலும் வாழ்ந்து வந்த மக்கள் இப்படிதான் செய்து வந்தனர். அவர்கள் வரைந்த இந்த உருவங்களுக்கு " பட எழுத்துக்கள் " என்று பெயர்.  எகிப்தில் உள்ள பிரமீடுகளிலும் பட எழுத்துக்களை இன்றும் காணலாம். காலப்போக்கில் பட எழுத்துக்களில் இருந்து "குறி எழுத்துக்கள்" பிறந்தன. மரம் என்ற சொல்லைக் குறிப்பதற்கு மரம் போல படத்தை வரையாமல், ஏதேனும் குறி ஒன்றை எழுதும் வழக்கம் வந்தது. பேச்சில் வரும் ஆயிரக்கணக்கான சொற்களுக்கு ஆயிரக்கணகான குறிகள் எழுதப்பட்டன. பழங்காலத்தில் வாழ்ந்த பாபிலோனியர்களும், ஆசாரியரும் எழுதிய குறி எழுத்துக்கள், உளி வெட்டுக்கள்போல காணப்பட்டன.

    சீன மொழிகள் எழுத்துக்கள் குறிஎலுத்துக்கலாகும் அம்மொழியில் 5000 திற்கும் மேற்பட்ட குறி எழுத்துக்கள் உள்ளன. குறி எழுத்துக்களை கற்பதும், எழுதுவதும் எளிதல்ல. மேல்நாட்டில் முதன் முதலாக எழுத்துக்களை எழுத கற்றுக் கொண்டவர்கள் பெணீசியர்கள். இவர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் வாழ்ந்தவர்கள். இவர்களிடம் இருந்து கிரேகர்கள்  எழுத்துக்களை கற்றுக்கொண்டார்கள். கிரேகர்கள் அந்த எழுத்துக்களை ரோமானியர்களுக்கு கற்றுத்தந்தனர். 

இந்திய மொழிகள் 

     இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எழுத்துக்கள் யாவும் இரு மொழி குடும்பங்களில் அடங்கும். ஒன்று ஆரிய மொழி குடும்பம், இதன் ஆதி மொழி சமஸ்கிரதம். மற்றொன்று திராவிட மொழி குடும்பம். இதன் ஆதி மொழி தமிழ்.

      தமிழுக்கும், சமஸ்கிரததிர்க்கும் தனிதனி எழுத்துக்கள் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்  "வட்டெலுதுக்கள்" என்ற தமிழ் எழுத்துக்கள் புழக்கத்தில் இருந்தன. இந்த எழுத்துக்கள் வட்ட வடிவத்தில் இருக்கும்.
சமஸ்கிரதம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழில்களில் கூட்டெலுதுக்கள் உண்டு. இவை இரண்டு மூன்று எழுத்துக்கள் சேர்ந்து ஒலிக்கும். ஆனால் தமிழில் கூட்டெலுதுக்கள் கிடையாது. தமிழ் எழுத்துக்களின் ஒலிகள் எவ்வாறு பிறக்கின்றன, இந்த எழுத்துக்கள் சொல்லில் எவ்வாறு சேருகின்றன என்பதற்கு, "தொல்காப்பியம்" என்னும் பழம்தமிழ் இலக்கணத்தில் விதிகள் உண்டு.

காகிதம் 


       பழங்கால மக்கள் கருங்கற்கள் மீதும் சுவர்களின் மீதும் எழுத்துக்களை செதுக்கினர். பிறகு பதபடுத்தபட்ட தோலின் மீதும், மரப்பட்டைகளின் மீதும், பானை ஓடுகளின் மீதும், பனை ஓலைகளிலும் எழுதும் வழக்கம் வந்தது. இந்தியாவில் மக்கள் எப்போது எழுத்துக்கள் கட்டரு கொண்டனர் என்று திட்டவட்டமாக கூறமுடியாது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிந்துசமவெளி மக்கள் களிமண் பலகைகளில் எழுதி வந்தனர். 

    தமிழ் மிக பழமையான மொழிகளில் ஒன்று. அதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிக சிறந்த இலக்கியங்கள் தோன்றியுள்ளன. எனவே தமிழ் மக்கள் அதற்க்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துக் கலையை நன்கு அறிந்திருக்க வேண்டும். பழங்காலத்தில் தமிழ் நூல்கள், பனை ஓலையில் எழுதப்பட்டன. எழுதும் ஓலையை தேர்ந்தெடுத்து, அதை ஒழுங்காக வாரிக் கட்டுவதே ஒரு கலையாக இருந்தது.

     மன்னர்கள் கட்டிய அணைகள், சுட்ருசுவர்கள் மீதும் செப்பேடுகளிலும் எழுதப்பட்டன. அயல் மொழியின் கருத்துக்களும், சொற்களும் தமிழில் கலந்தன. இதனால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ் எழுத்துக்களை எழுதும் முறையில் பல மாறுபாடுகள் ஏற்பட்டன. அச்சு எந்திரங்கள் வந்த பிறகு தமிழ் மொழியின் வடிவங்கள் மாறாமல் இருந்து வருகிறது.

         தமிழ், ஆங்கிலம் உட்பட பெரும்பாலான மொழிகள் இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றன. உருது எழுத்துக்களையும், அரேபிய எழுத்துக்களையும் வலமிருந்து இடமாக எழுதுகிறார்கள். சீனர்கள் மேலிருந்து கீழாக எழுதுகின்றனர்.

மனிதன் தோன்றியது எப்போது?


    இறைவன் படைத்த ஆதாம் ஏவாள் மூலம் மனித இனம் தோன்றி வளர்ந்ததாக கிறிஸ்துவர்களின் மறை நூல் கூறுகிறது. மனிதனை முழு மனிதனாகவே இறைவன் படைந்தான் என்பது இஸ்லாமிய   மறை மொழி.

         மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி, ஆங்கில விஞ்ஞானியான டார்வின் பல ஆராய்சிகள் செய்து, 1859 ஆம் ஆண்டில் தன் முடிவுகளை வெளியிட்டார்.  அவருடைய ஆராய்ச்சியின் படி , சுமார் 45 கோடி ஆண்டுகளுக்கு முன், பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கியது. முதுகெலும்பு உள்ள சில பிராணிகளும், இலை இல்லாத சில தாவரங்களும் அப்போது உருவாகின. இறகில்லாத சில பூச்சிகளும் உண்டாகின. இதை தொடர்ந்து நிலத்தில் ஊர்ந்து வாழும் முதலை, பல்லி, பாம்பு, ஆமை போன்ற ( ஊர்வன இனத்தை சேர்ந்த பிராணிகள் ) உண்டாகின. விலங்குகள் இனமும், தாவர இனமும் பெருகின. மாமிசம் தின்னும் பிராணிகள் தோன்றின. ஊர்ந்து செல்லும் பிராணிகளில் இருந்து சில பாலுடிகள் உண்டாகின.

          ஊர்ந்து செல்லும் பிராணிகள் சிலவற்றுக்கு இறகுகள் முளைத்து, சில வகை பறவைகள் உண்டாகின. யானை, காண்டபிருகம், பன்றி போன்ற மிருகங்களின் முன்னோடிகள் தோன்றின. வால் இல்லாத குரங்குகள் உருவாகியது. தோற்றத்தில் மனிதனை போல உள்ள குரங்குகள் பெருகின. மேலும் வளர்ச்சி அடைந்து சட்ட்று பெரிய மூளையும், கூர்மையான கண்களும், திறமையான கைகளும் உடையனவாக உருமாறியது.
இந்த குரங்குகளில் இருந்து தோன்றியவர்களே மனிதர்கள். இதுவே டார்வின் சித்தாந்தம். 


         குரங்கில் இருந்து மனிதன் நேரடியாக தோன்றி இருக்க முடியாது என்றும், இக்குரங்குகளும் ஒரு பொதுவான மூதாதையில் இருந்து தோன்றி இருக்க வேண்டும் என்றும் வேறு சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

     பொதுவாக  " குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் "  என்ற கொள்கை உலகம் முழுவதும் பரவலாக ஒப்புகொள்ளபடுகிறது. மனிதனை போல தோற்றம் கொண்ட குரங்குகள் தோன்றி ஒரு கோடி ஆண்டுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குரங்கில் இருந்து மனிதன் தோன்றி சுமார் 10 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன.

        ஆரம்பத்தில் மனிதன் காட்டுமிராண்டி போலவே வாழ்ந்து வந்தான். உணவு தேடுவதே அவன் வேலையாக இருந்தது. பிறகு கொடிய மிருகங்களிடம் இருந்து தன்னை பாது காத்துக்கொள்ள வேட்டையாடினான். இறைச்சியை சுடவும், குளிரில் இருந்து தன்னை காத்துகொள்ளவும் நெருப்பை பயன் படுத்தினான். மெதுவாக மனிதனில் நாகரிகம் வளர்ந்தது. உலோக காலம் உலகின் போக்கையே மாற்றியது என்று கூறலாம். மனித வாழ்க்கை, நாகரிகம் ஆகிய அனைத்தும் மாறின, நாகரிகம் வெகு வேகமாக வளர தொடங்கியது என்றும் கூறலாம்.

பூமி போல் இன்னொரு பூமி


நட்சத்திரமொன்றிலிருந்து உயிரினங்கள் வாழக்கூடிய வலயத்திலுள்ள, பூமி போன்ற கிரகமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா இன்று தெரிவித்துள்ளது.
கெப்ளர் விண்வெளித் தொலைக்காட்டி மூலம் கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்ட இந்த கிரகத்திற்கு கெப்ளர் 22-பி (Kepler 22-b) என பெயரிடப்பட்டுள்ளது.
எமது சூரியனைப் போல் அல்லாத நட்சத்திரமொன்றை கெப்ளர் 22-பி கிரகம் சுற்றி வருகிறது. ஒரு தடவை அதன் சொந்தச் சூரியனை சுற்றுவதற்கு 290 நாட்கள் செல்கிறது.
நட்சத்திரங்களின் அளவு, வெப்பநிலை முதலான விடயங்களை கருத்திற்கொண்டு அந்த நட்சத்திரத்திலிருந்து எவ்வளவு தூர எல்லையில் உயிரினங்கள் இருக்கக்கூடிய கிரகங்கள் காணப்படலாம் என்பது தீர்மானிக்கப்படுகிறது. இத்தகைய பிரதேசமானது உயிரினங்கள் ‘வசிக்கத்தக்க வலயம்’  (habitable zone) என அழைக்கப்படுகிறது.
இதன்படி  எமது சூரிய தொகுதிக்கு அப்பால் ‘வசிக்கத்தக்க வலயத்திற்குள்’ கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் கெப்ளர் 22- பி ஆகும்.
600 ஒளி ஆண்டுகள் தூரத்திலுள்ள இந்த கிரகம் பூமியைவிட 2.4 மடங்கு பெரிதானதாகும். ஆதன் வெப்பநிலை சுமார் 22 பாகை செல்சியஸ் ஆகும்.
இவ்வருட ஆரம்பத்தில் பிரெஞ்சு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் உயிர் வாழத் தேவையான அம்சங்களைக் கொண்டிருக்கக்கூடிய கிரகமொன்றை கண்டறிந்ததாக அறிவித்தனர். எனினும் நாசாவினால் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட இத்தகைய முதல் கிரகம்  கெப்ளர் 22- பி என்பது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கு கிடைப்பதைவிட 25 சதவீதம் சூரியஒளி குறைவாகவே அதற்கு கிடைப்பதால்  மென்மையான வெப்பநிலை நிலவுகிறது. இது திரவ நிலையில் தண்ணீர் காணப்படுவதற்கான வாய்ப்பை வழங்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
2005 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு ஏவப்பட்ட கெப்ளர் தொலைக்காட்டி சுமார் 155,000 நட்சத்திரங்களை அவதானித்து வருகிறது. இதுவரை இத்தொலைக்காட்டி மூலம் கிரகங்கள் என்ற அங்கீகாரம் பெறத்தக்கவை எனக் கருதப்படும் 2326 விண்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 207 கிரகங்கள் பூமி அளவிலானவையாகும்.

விஞ்ஞான உண்மைகள்!


ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.
வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன.
மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும்.
உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கரியமில வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த ஒரு வாசனை மட்டுமே தெரியும்.
ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.
சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து, தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன.
தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.

12 July 2012

இன்றைய தகவல்கள்

* ஒரு அணுகுண்டு தயாரிக்க சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும்.

* 1984-ல் ஓசோனில் துளை இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

* அமெரிக்க டாலர் நோட்டுக்கு `கீரின்பைக்' என்று பெயர்.

* மதுரை மீனாட்சி கோவில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

* இந்தியாவுக்கு இந்தியா என்று பெயரிட்டது, கிரேக்கர்கள்.

* காந்தியடிகள் சிறையில் 2 ஆயிரத்து 338 நாட்கள் இருந்தார்.

* உலகில் உள்ள அணுஉலைகளின் எண்ணிக்கை 529.

* முதன் முதலில் அணுஉலையை உருவாக்கியவர் எண்ரிக்கோ பெர்மி.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT