உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466
Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

14 July 2012

காஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்


சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்கவைக்க வேண்டும். 
ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங்களையும், இர ப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 
அடுப்பை அணைக்கும்போது முதலில் ரெகுலேட்டர் வால் வை மூடி வீட்டுப்பிறகு அடுப்பி ன் வால்வை மூடுவது நல்லது.    
அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும். 
அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்போது கவனக் குறைவாக இருக்கக் கூடாது. கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற 
பொருள்கள், அடுப்பை அணைத்து வெளிவரும் எரி வாயுவினால் வாயுக் கசிவு ஏற்பட்டுத் தீ விபத்து ஏற்பட லாம். 
காஸ் ஸ்டவ் வைத்திருப்ப வர்கள் வீட்டில் உள்ளக் குழந்தைகள் காஸ் குழா யைத் திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காஸ் குழாயில் குழந்தைகள் விஷமம் செய் வதால் பல ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. 
அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு சிலி ண்டரை மாற்ற வேண்டும். 
சுய ரிப்ப்பேர் வேலை ஆபத்தானது. யாரையும் காஸ் உபகரணங்களை ப் பழுது பார்க்க அனுமதுக்கக் கூ டாது. விறபனையாளர்களிடமே இந்த பொறுப்பை விட்டுவிட வே ண்டும்.
மாற்று சிலிண்டர் இணைக்கும் போது பூஜை விளக்குகள், ஊதுவ த்தி அனைத்தையும் அணைத்துவி ட வேண்டும். மின்சார இணைப்பு கள் இயங்க கூடாது. 
ரப்பர் குழாயில் வெடிப்பு, துளை இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்துப் பார்க்க வேண்டும். 
காஸ் அடுப்பின் பர்னரை 10 நிமிடம் மண்ணெயில் ஊற வைத்துப் பிறகு பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்ய லாம். 
அடுப்பின் பர்னர்களை சல வை சோடா சேர்ந்த வெது வெ துப்பான் தண்ணீரில் 20 நிமிட ங்கள் ஊற வைத்து சுத்தப்படு த்தி உலரச் செய்த பிறகே பொருத்த வேண்டும்.
குரோமிய காஸ் அடுப்பு, ஸ்டவ் போன்றவற்றைச் சூடாக இருக்கும் போது துடைத்தால் பளிச்சென்று இருக்கும்.
பெயிண்ட் அடுப்பாக இருந்தால் சூடாக இருக்கும் போது நனைந்ததுணியால் துடைக்கக் கூடா து. திடீர் வெப்ப மாறுதலால் வண்ணம் மாறலாம்.
காஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதா க சந்தேகம் தோன்றினால் உடனடியாகக் கதவுகள், ஜன் னல்கள் அனைத் தையும் திற ந்துவிட வேண்டும். எரிந்து கொண்டிருக்கும் அடுப்பு, விளக்கு முதலியவற்றை அணைக்க வே ண்டும். சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேப்பு கேப்பினால் சிலி ண்டர் வால்வை அழுத்தி மூட வேண்டும். இது வால்விலிருந்து காஸ் கசிதைத் தடுக்கும்.
மண்ணெண்ணெய் ஸ்டவ்களைப் பயன்படுத்துபவர் அது எரிந்துக் கொ ண்டிருக்கும் போது அதற்கு எண் ணெய் ஊற்ற முயலக்கூடாது. ஸ்ட வ்வின் எல்லாப் பகுதிகளும் சூடேறி இருப்பதால் எண்ணெய் பட்டவுடன் திடீரென அது பற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு.
டாங்கில் எவ்வளவு மண்ணெண் ணெய் நிரப்ப வேண்டும் என்றா குறி யீடு எல்லா ஸ்டவ்களுலும் இருக்கு ம். அதற்கு மேல் மண்ணெ ண்ணெய் ஊற்றக்கூடாது.
இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஸ்டவ் திரிகளைச் சமன்படுத்தி உயரமாக இருக்கும் திரிகளை மட்டும் நறுக்கி விடவும்.  டாங்கில் மண்ணெண்ணெய் ஊற்றி ஒரு மணி நேரம் ஆனப் பின்பே புதிய ஸ்டவ்வை முதல் முறையாகப் பயன்படுத்த முடியும்.
நீரைத் தெளித்து அடுப்பை அணைப்பது தவறு. அப்போது வெளிப் படும் வாயு உடலுக்கு கேடு செய்யும்.


தினதகவல் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் krkinvites@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் மைசூர்பாகு, காராபூந்தி


இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில், உடல் பருமன் பெரியபிரச்னையாக உருவெடுத்து வருகிற து. உடல் உழைப்பு இல்லாமல், பிட்சா, பர்கர், சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவ ற்றை சாப்பிடும் பழக்க ம், சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதி கரித்து வருவதே, இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஆனா ல், “மைசூர்பாகு, அல்வா, அதிரசம், காரா பூந்தி, உருளை கிழங்கு சிப்ஸ் போன்ற, நம் பாரம்பரிய இனிப்பு, கார வகைகளிலும், அளவிற்கு அதிகமாக கொழுப்புச் சத்து உள்ளது’ என, “கன்சியூமர்ஸ் அசோசி யேஷன் ஆப் இந்தியா’ எனும், தன்னார்வ நுகர்வோர் அமைப்பு வெளி யிட்டுள்ள ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
இதுகுறித்து, இந்த அமைப்பின் பொதுச் செயலர் ராஜன் கூறியதாவதுஒருநாளைக்கு, நாம் உண்ணும், 100 கிராம் அளவுள்ள உணவில், 20 கிராம் வரை, கொழுப்புச் சத்து இருக்கலாம் என, உணவு ஆலோ சகர்கள் கூறுகின்றனர். நம் பராம்பரிய இனிப்பு, கார வகைக ளில், கொழுப்புச் சத்து எவ்வளவு உள்ளது என்பதை அறிய, சென் னை நகரின் பல் வேறு பகுதிகளி ல் உள்ள, “ஸ்வீட் ஸ்டால்’களில் விற்கப்படும் குறிப்பிட்ட இனிப்பு, கார வகைகளை ஆய்வுக்கு உட் படுத்தினோம் . இவற்றில் பெரும் பாலான தின்பண்டங்களில், அளவுக்கு அதிகமாக கொழுப்புச் சத்து உள்ளது, ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. எனவே, பராம்பரிய இனிப்பு, கார வகைகளையு ம், நாம் அளவோடு உண்ண வேண்டும். இல்லையெனில், உடல் பரு மன், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் சேர்க்கப்ப டும் எண்ணெய், நெய் மற்றும் கார்போ ஹைட்ரேட் சம்பந்தப்பட்ட மாவுகள், இந்த அபாயத்தை அதிகரிக்கின்றன. இவ்வாறு ராஜன் கூறி னார்.


தினதகவல் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் krkinvites@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது எப்படி செய்வது


உருளைக்கிழங்கு மசாலா குழம்பு
தேவையானவை: உருளைக்கிழங்கு – கால் கிலோ, பூண்டு – 2 பல், வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் – தலா 1, புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, குழம்பு பொடி – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறித ளவு, எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு – தே வையான அளவு,
செய்முறை: உருளைக்கிழங்கு, வெ ங்காயம், தக்காளியைப் பொடி யாக நறுக்கவும். கடாயில் எண் ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலை ப்பருப்பு போட்டு தாளி த்து… நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறி வேப் பிலை, தக்காளி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக வத க்க வும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி சேர்த்து வதக்கி, புளி யைக் கரைத்து ஊற்றி, உப்பு போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

தக்காளி குழம்பு செய்வது எப்படி செய்வது


தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங் களூர் தக்காளி – தலா 2 (மிக்ஸியில் ஒன்றி ரண்டாக அரைக்கவும் அல்லது பொடியாக நறுக்கவும்), கீறிய பச்சை மிளகாய் – 1, பூண்டு – 2 பல், பொடியாக நறுக்கிய தேங் காய் – சிறிதளவு, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூ ன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத் தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போட்டு… பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். தீயைக் குறைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரை த்த தக்காளி விழுது (அ) பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண் ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

19 June 2012

சமையல்: வாழைப்பழ அல்வா

தேவையானவை: ரவை- 200 கிராம், வாழைப்பழம்-4, பால்-200 கிராம், சர்க்கரை-200 கிராம், நெய்-50 கிராம்

 செய்முறை: ரவையை நெய்விட்டு சிவக்க வறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் பாலைவிட்டு கொதிக்கும்பொழுது வாழைப்பழத்துண்டு, ரவை, போட்டுக் கிளற வேண்டும். ரவை வெந்ததும் சர்க்கரை போட்டு நெய்விட்டு சுருளக் கிளறி இறக்க வேண்டும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து அலங்காரத்திற்கு பயன்படுத்தவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT