உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts

10 July 2012

2,000 வி.ஏ.ஓ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.

தமிழக அரசில், பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை, சத்துணவுத் துறை, போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம் என, பல்வேறு துறைகளில் வேலையில் சேர, புதிய வாய்ப்புகள் குவிகின்றன. இத்துறைகளில், 1 லட்சம் பணியிடங்களை நிரப்ப, அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி., நேற்று மாலை, 2,000 வி.ஏ.ஓ.,க்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. அனைத்து துறைகளும், போட்டி போட்டுக் கொண்டு ஆள் எடுப்பதால், அரசு வேலையில் சேர, படித்த இளைஞர்களுக்கு, பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது
.
நடவடிக்கை:முந்தைய தி.மு.க., ஆட்சியில், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பியபோதும், முழுமையான அளவில், அனைத்துத் துறைகளிலும், போதிய அளவிற்கு பணியாளர்களை நியமிக்கவில்லை. அ.தி.மு.க., அரசு பதவியேற்றதும், அரசுத் துறைகளில், அனைத்துப் பணிகளும், தேங்காமல் உடனுக்குடன் நடப்பதற்கு ஏதுவாக, அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் பணியாளர்களை நியமனம் செய்ய, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.இதன் காரணமாக, ஒவ்வொரு துறையிலும், புதிய பணி நியமனங்கள் நடந்து வருகின்றன. எனினும், கடந்த சில வாரங்களாக, பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம், சத்துணவுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள், போட்டி போட்டுக் கொண்டு, புதிய நியமன அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.ஒரு பக்கம், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலான பணி நியமனங்களும், மற்றொரு பக்கம், போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்வதற்கான அறிவிப்புகளும், நடந்து வருகின்றன. பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர் தேர்வு வாரியம், 12ம் 
தேதி நடத்த உள்ள டி.இ.டி., தேர்வு மூலம், 20 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படஉள்ளனர்.



தற்காலிகம்:போக்குவரத்துத் துறையில், 16 ஆயிரத்து 850 டிரைவர், கண்டக்டர் மற்றும் 9,000 தற்காலிக ஊழியர்கள் நியமிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சத்துணவுப் பணியாளர்கள் 16 ஆயிரம் பேர், 7ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப்-4 தேர்வு மூலம் 11 ஆயிரம் பேர், முதுகலை ஆசிரியர் 3,000 பேர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், 1 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1,623 கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்யும் அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். மேலும், 2,000 வி.ஏ.ஓ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பையும், டி.என்.பி.எஸ்.சி., நேற்று மாலை வெளியிட்டது. ஏற்கனவே, 11 ஆயிரம் பேரை தேர்வு செய்ய, 7ம் தேதி தேர்வு நடத்திய நிலையில், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில், 2,000 வி.ஏ.ஓ.,க்களை தேர்ந்தெடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.இப்படி, எல்லா துறைகளும், போட்டி போட்டுக் கொண்டு ஆள் எடுத்து வருவதால், படித்த இளைஞர்கள், அரசு வேலையில் சேர, மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், அரசு, தொடர்ந்து புதிய நியமனஅறிவிப்புகளை வெளியிட்டு வருவது, படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மத்தியில், பெரும் வரவேற்பையும், 
மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டால், அரசுத் துறைகளில், வேலைகள் வேகம் எடுக்கும் என, அரசு எதிர்பார்க்கிறது.
எவ்வளவு செலவாகும்? பல்வேறு அரசுத் துறைகளில், ஒரு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும், தொடர்ந்து புதிய வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆறாவது ஊதியக்குழு சம்பளம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சம் பேருக்கு, சம்பளம் மற்றும் இதர சலுகைகளாக, ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய் வரை செலவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, தமிழக அரசில் ஊழியர்கள் எண்ணிக்கை, 20 லட்சத்தை நெருங்கிவிட்டது.
நன்றி: தினமலர் 

08 July 2012

குரூப் 4 தேர்வு விடைகளை (Answer Keys)


Tentative Answer Keys

 Sl.No.
Post & Subject Name
(Posts included in Group-IV Services)
 (Date of Examination:07.07.2012 FN)

1
2
3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 14th July 2012 will receive no attention.
நன்றி: TNPSC

30 June 2012

DOWNLOAD TNPSC GROUP 4 2012 HALL TICKET

DOWNLOAD TNPSC GROUP 4 2012 HALL TICKET

20 June 2012

வேலைவாய்ப்பு: 27-ம் தேதி முதல் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு: திருமணமான இளைஞர்கள் பங்கேற்க அனுமதி இல்லை

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இம் மாதம் 27-ம் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரை ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில், திருமணமான இளைஞர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என ஆட்சியர் விஜய் பிங்ளே தெரிவித்துள்ளார்.


 இந்த முகாமில் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், சென்னை ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 1989 ஜூன் 27 முதல் 1994 டிசம்பர் 27-க்குள் பிறந்த திடகாத்திரமான இளைஞர்கள் பங்கேற்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 தேர்வு செய்யப்பட உள்ள பணிகள்
 சிப்பாய் (டெக்னிக்கல்), நர்சிங் உதவியாளர்: இப் பணியிடங்களுக்கு இம் மாதம் 27-ம் தேதி ஆவணங்கள் சரிபார்ப்பும், 28-ம் தேதி உடற்கட்டு தேர்வும் நடைபெறுகிறது.

 சிப்பாய் (டெக்னிக்கல்) பணியிடத்துக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நர்சிங் உதவியாளர் பணியிடத்துக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 சிப்பாய் (பொதுப்பணி): இப் பணியிடத்துக்கான ஆவணங்கள் சரிபார்ப்பு (திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு) 28-ம் தேதியும், உடற்கட்டு தேர்வு 29-ம் தேதியும் நடைபெறுகிறது. இப் பணியிடத்துக்கு 45 சதவீத மதிப்பெண்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிப்பாய் (எழுத்தர், ஸ்டோர் கீப்பர், டெக்னிக்கல் & டி.எஸ்.சி): இப் பணியிடத்துக்கான ஆவணங்கள் சரிபார்ப்பு இம் மாதம் 30-ம் தேதியும், உடற்கட்டுத் தேர்வுகள் ஜூலை 1-ம் தேதியும் நடைபெறுகிறது. இப் பணியிடத்துக்கு, கலை அறிவியல், வணிகவியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT