உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466
Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

08 September 2013

2020-ல் ஒலிம்பிக்போட்டிகளை நடத்த டோக்கியோ தேர்வாகியுள்ளது

பியூனோஸ் ஏர்ஸ்:2020-ல் ஒலிம்பிக்போட்டிகளை நடத்த டோக்கியோ தேர்வாகியுள்ளது.இதற்கான ரகசிய ஓட்டெடுப்பு நேற்று மாலை அர்ஜென்டினாவில் உள்ள பியூனோஸ் ஏர்ஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் குழு நடத்தியது. இந்த ஓட்டெடுப்பில் டோக்கியோ, இஸ்தான்புல் மற்றும் மாட்ரிட் ஆகிய நகரங்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இதில் டோக்கியோ தேர்வாகியுள்ளது. இது 125 வது சீசன் ஆகும்.இதன் மூலம் ஜப்பான், 2வது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ளது. ஏற்கனவே 1964-ல் ஜப்பான் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது 93 நாடுகள் போட்டிகளில் பங்கேற்று இருந்தது.1964-ல் ஜப்பானில் நடந்தபோது ஆசிய நாடு அப்போதுதான் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.1940-ல் டோக்கியோவில் நடத்த போட்டியிட்டது ஆனால் அப்போது அங்கு புகுஷிமா அணு உலை பிரச்சினை பெரிய தடையாக இருந்தது.

ஜப்பான் பிரதம் ஷின்‌ஷோ அபே கூறுகையில்.புகுஷிமா அணு உலை இங்கு இருந்தாலும் டோக்கியோ நகரம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பாதுகாப்பாகவே உள்ளது. அணு உலை, டோக்கியோவிலிருந்து 150 மைல் ‌தொலைவில் உள்ளது.2011-ல் பூகம்பம் மற்றும் சுனாமி ஜப்பானின் வட-கிழக்கு பகுதிகளை தாக்கியது.ஆனால் அது போல இங்கு நடக்காது. டோக்கியாவில் எந்தவித ‌பாதிப்பும் ஏற்படாது என்றும் புகுஷிமா அணு உலையால் எந்தவித கதிரியக்க நீர் கசிவும் ஏற்படாது என அவர் தெ‌ரிவித்துள்ளார்.

12 August 2012

இந்தியாவுக்கு 6வது பதக்கம்; வெள்ளிப்பதக்கம் வென்றார் சுஷில்குமார்


லண்டன்: ஒலிம்பிக்போட்டி நிறைபெறும் இன்று 66 கிலோ ஆண்கள் ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் வெள்ளி பதக்கம் வென்றார்.இறுதிப்போட்டியில் அவர் போராடி தோல்வியந்தார்.சுஷில்குமார் கடந்த 2008-ம் ஆண்டு பீய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று 66 கி..கி. எடைப்பிரிவில் நடந்த காலிறுதியில் உஸ்பெஸ்கிஸ்தான் வீரர் இக்தியோர் நூர்ஸோவை 3-1 புள்ளி கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

விறுவிறுப்பான அரையிறுதி பலப்பரீட்சையில், சுஷில்குமார் கஜகஸ்தான் வீரர் டனடரேவுடன் மோதினார். இதில் 3-0, 03, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். கடும் சவாலுடன் விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

சுஷில்குமார் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதும் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். தங்கம் வெல்ல வேண்டும் என இந்தியா முழுவதும் பிரார்த்தனை நடந்தது. தங்கப் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இறுதி போட்டியில் சுஷில் குமார், ஜப்பானின் டாட்சுகிரோ யோனேமிட்சூவை எதிர்கொண்டார். இதில் சுஷில் குமார் 2-4 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சுஷில் குமார், தற்போது வெள்ளி பதக்கம் கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்தியா பெற்ற ஐந்தாவது பதக்கம்.


லண்டன்: லண்டன் ஒலிம்பிக் 60 கிலோ, மல்யுத்த போட்டியின் ரீபேஜ் சுற்றில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் யோகேஷ்வர் தத், வட கொரியாவின் ரி ஜாங் மியாங்கை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய யோகேஷ்வர் 7-1 என்ற புள்ளிக் கணக்கில் வெண்கலம் வென்றார். இது லண்டன் ஒலிம்பிக்ல் இந்தியா பெற்ற ஐந்தாவது பதக்கமாகும்.

10 August 2012

ஐ.சி.சி. டு்வென்டி20 : இந்திய அணி அறிவிப்பு

இலங்கையில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள உலககோப்பை டுவென்டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் இன்று சென்னையில் அறிவிக்கப்பட்டனர். தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், வீரர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டார். அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு : 
மகேந்திர சிங் தோனி (கேப்டன்), 
கவுதம் காம்பீர் (துணை கேப்டன்), 
வீரேந்திர சேவக், 
சுரேஷ் ரெய்னா, 
விராட் கோஹ்லி, 
யுவராஜ் சிங், 
இர்பான் ப‌தான், 
அஸ்வின், 
ஜாகீர் கான், 
லட்சுமிபதி பாலாஜி, 
அசோக் டிண்டா, 
ரோகித் சர்மா, 
பியூஸ் சாவ்லா, 
ஹர்பஜன் சிங், 
மனோஜ் திவாரி

30 July 2012

லண்டன் ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியா தோல்வி

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் வீழ்ந்தது.
லண்டன் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஹாக்கி "பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் தரம்வீர் சிங் (45வது நிமிடம்), ஷிவேந்திரா சிங் (48வது) தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தனர். நெதர்லாந்து அணிக்கு ராபர்ட் வான் டெர் ஹார்ஸ்ட் (20வது நிமிடம்), ரோடரிக் வியஸ்தோப் (29வது), மின்க் வான் டெர் வீர்டன் (51வது) தலா ஒரு கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர்.
மற்றொரு "பி' பிரிவு லீக் போட்டியில் தென் கொரியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய தென் கொரிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
"ஏ' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி 6-0 என்ற கோல் கணக்கில் வென்றது. மற்றொரு "ஏ' பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், ஸ்பெயின் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது.

ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வெண்கலம் வென்றார் ககன் நரங்

லண்டன்: ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. இந்த பெருமையை பெற்று தந்தவர் ககன் நரங். இன்று நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீ., ரைபில் பிரிவில் 701.1 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார் ககன் நரங். இந்த போட்டியில் ரோமேனியாவின் அலின் ஜார்ஜ் மோல்‌டோவினய் தங்கப்பதக்கமும், இத்தாலியின் நிக்கோல் சாம்பிரானி வெள்ளிப்பதக்கமும் வென்றார். இந்த வெற்றி மூலம் இந்திய கொடியை ஒலிம்பிக் பறக்க விட்டுள்ளார் என அவரது தந்தை பெருமிதத்துடன் கூறியுள்ளார். 

28 July 2012

ஒலிம்பிக் : வெற்றி தோல்வி நிலவரம்

லண்டன், ஜூலை 28 : ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற படகுப் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் சவரன் சிங் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.


டேபிள் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அங்கீடா  தாஸ் தோல்வி அடைந்தார்.

முதல் சுற்றுப் போட்டியில் ஸ்பெயினின் சாரா ரமிரஸிடம் 11-9, 11-8, 11-7, 8-11, 11-2 என்ற செட் கணக்கில் அங்கீடா தாஸ் தோல்வி அடைந்தார்.

அதேப்போல முன்னதாக நடைபெற்ற வில்வித்தைப் போட்டியிலும், பாட்மிண்டன் ஆடவர் குழு போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.

பாட்மிண்டன் ஒற்றையர் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் பருப்பள்ளி கஷ்யப் வெற்றி பெற்றுள்ளார்.

27 July 2012

லண்டன் ஒலிம்பிக் கோலாகல துவக்கம்!


லண்டன்:ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகலமாக துவங்குகிறது. இதில், பங்கேற்று மகத்தான சாதனை படைக்க உலக விளையாட்டு நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர்.பிரிட்டன் தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 27-ஆக., 12) நடக்க உள்ளது. இதில், இந்தியா உட்பட 204 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.இன்று ஒலிம்பிக் மைதானத்தில் துவக்க விழா (இந்திய நேரப்படி அதிகாலை 1.00 மணி) வண்ணமயமாக நடக்கிறது.
ஆஸ்கர் விருது வென்ற பிரிட்டனை சேர்ந்த டேனி பாய்ல், துவக்க விழாவின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கற்பனையில், மைதானமே ஒரு பசுமையான கிராமப்புறமாக மாற உள்ளது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான கலைஞர்கள், பங்வேறு சாகசங்களை நிகழ்த்திக் காட்ட உள்ளனர்.போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி, மல்யுத்த வீரர் சுஷில் குமார் வர உள்ளார். பின் ஜோதி ஏற்றப்படும். இரண்டாம் ராணி எலிசபெத், ஒலிம்பிக் போட்டியை முறைப்படி துவக்கி வைக்கிறார்.

17 July 2012

சென்னையில் இந்தியா-பாக்., மோதல்!


புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவு 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மலர்கிறது. இவ்விரு அணிகள் 3 ஒரு நாள் போட்டி, 2 "டுவென்டி-20' போட்டிகளில் மோத உள்ளன. போட்டிகள் சென்னை, டில்லி, கோல்கட்டா, ஆமதாபாத் மற்றும் பெங்களூருவில் நடக்கும் என தெரிகிறது. 
பாகிஸ்தான் அணி கடைசியாக 2007, டிசம்பரில் இந்தியா வந்தது. 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இரு நாட்டு உறவு பாதிக்கப்பட்டது. இரு நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை. இத்தொடரை பொதுவான இடத்தில் நடத்த, பி.சி.சி.ஐ., சம்மதிக்கவில்லை. ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடரிலும், இந்தியா வர பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உலக கோப்பை உள்ளிட்ட சில பொதுவான தொடரில் மட்டும் இரு அணிகளும் மோதிக் கொண்டன. 
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) நிர்வாகிகள் இடையே, அவ்வப்போது பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து, தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில், பாகிஸ்தான் உள்ளூர் அணியான சியால்கோட் ஸ்டாலியன்சிற்கு அனுமதி தரப்பட்டது. 
திடீர் முடிவு:
தற்போது, மேலும் ஒரு திருப்பமாக இரு நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ளது. வரும் நவம்பர் மாதம் இந்தியா வரும் இங்கிலாந்து அணி, நான்கு டெஸ்ட், 2 "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்கிறது. பின், டிசம்பர் 23ல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட நாடு திரும்புகின்றனர். 
மீண்டும் 2013, ஜன., 3ல் இந்தியா வரும் இங்கிலாந்து அணி, 11ம் தேதி தான் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. இதனால் இந்திய அணி டிச., 23 முதல் ஜன., 10 (2013) வரை, 19 நாள் ஓய்வில் உள்ளது. 
அதேபோல, பாகிஸ்தான் அணிக்கும் டிசம்பரில் எவ்வித போட்டிகளும் கிடையாது. ஜனவரி 2013ல் தான் ஜிம்பாப்வே செல்லும். இருப்பினும், இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக இதில் மாற்றங்கள் செய்யவுள்ளனராம். 
போட்டி உறுதி:
இதையடுத்து, வரும் டிசம்பர் மாதம், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும், மூன்று ஒரு நாள் மற்றும் 2 "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கை:
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே, மீண்டும் கிரிக்கெட் <உறவை துவங்க முடிவு செய்துள்ளோம். இதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர்-ஜனவரி மாதம், இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க வருமாறு பாகிஸ்தானுக்கு  அழைப்பு விடுக்கப்படும். இது தொடர்பான பணிகள் விரைவில் துவங்கும். இத்தொடரை நடத்த, மத்திய அரசு கொள்கை அளவில் சம்மதித்துள்ளது. 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
போட்டிகள் எங்கே:
மூன்று ஒருநாள் போட்டிகள் சென்னை, டில்லி மற்றும் கோல்கட்டாவிலும், இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் ஆமதாபாத் மற்றும் பெங்களூருவிலும் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. 
கவாஸ்கர் எதிர்ப்பு
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடருக்கு, முன்னாள் கேப்டன் கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:
மும்பை பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு, பாகிஸ்தான் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்நிலையில், இரு அணிகள் மோதும் தொடருக்கு என்ன அவசரம் வந்தது. மும்பைக்காரர் என்ற முறையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன். 
தவிர, நவம்பர்-டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் நடக்கிறது. இதற்கு இடையில் பாகிஸ்தான் தொடரை நடத்துவதால், வீரர்கள் மூச்சுவிடக் கூட நேரமிருக்காது. காயங்களில் இருந்து மீள இந்த ஓய்வை பயன்படுத்தலாம். 
இவ்வாறு கவாஸ்கர் கூறினார். 
அபாஸ் வரவேற்பு
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் அபாஸ் கூறுகையில்,"" இரு தரப்பு உறவை மேம்படுத்த, கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது தான் சரியான வழி. இது கிரிக்கெட்டுக்கும் நல்லது. இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இதனால், மக்கள் மகிழ்ச்சியடைவர். கிரிக்கெட்டில் சக்தி வாய்ந்த இந்தியாவுடன் விளையாடுவது, பாகிஸ்தான் அணியின் முன்னேற்றத்துக்கு உதவும்,'' என்றார். 

08 July 2012

"கேல் ரத்னா' விருது பெறுகிறார் டிராவிட்


மும்பை:விளையாட்டு துறையின் <உயரிய "ராஜிவ் கேல் ரத்னா' விருதுக்கு, டிராவிட் பெயரை பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்யவுள்ளது. உலக கோப்பை தொடர் நாயகன் யுவராஜ் சிங் பெயரை, அர்ஜுனா விருதுக்கு அனுப்புகிறது.
இந்திய விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல விருதுகள் வழங்கப்படும். ஒவ்வொரு விளையாட்டு அமைப்புகளும், தங்கள் வீரர்கள் பெயரை பரிந்துரை செய்து, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டிய கடைசி தேதி கடந்த ஏப்., 30. "தங்களுக்கு விண்ணப்பம் எதுவும் வராததால், கிரிக்கெட் வீரர்கள் பெயரை பரிந்துரை செய்யவில்லை,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கூறியது. இது தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கும், பி.சி.சி.ஐ.,க்கும் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், விருதுக்கு வீரர்கள் பெயரை விண்ணப்பிக்கும் தேதியை வரும் 20ம் தேதி நீட்டித்து, மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது. 
இதையடுத்து, விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய "ராஜிவ் கேல் ரத்னா' விருதுக்கு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டிராவிட், 39, பெயரை, பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது. 1996ல் கிரிக்கெட்டுக்கு வந்த டிராவிட், டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் மொத்தம் 24,208 ரன்கள் எடுத்துள்ளார். 
1991-92 முதல் வழங்கப்பட்டு வரும் "ராஜிவ் கேல் ரத்னா' விருது, டிராவிட்டுக்கு வழங்கப்படும் பட்சத்தில், சச்சின் (1997-98), தோனிக்கு (2007-08) அடுத்து, இதைப் பெறும் மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமை பெறலாம். 
"அர்ஜுனா' யுவராஜ்:
2011 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது வென்றவர் யுவராஜ் சிங். சமீபத்தில் "கேன்சர்' பாதிப்பில் இருந்து மீண்ட இவர், தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார். 
விரைவில், இந்திய அணியில் இடம் பெற முயற்சிக்கும் இவரது பெயரை, விளையாட்டுத் துறையில், வியக்கத்தக்க சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும், "அர்ஜுனா' விருதுக்கு பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்யவுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் இவ்விருது பெறும் 45 வது வீரர் யுவராஜ் சிங். 

23 June 2012

ராஜ்யசபாவில் சத்தமின்றி சாதிப்பேன்: சச்சின்


புதுடில்லி:""ராஜ்யசபாவில் சத்தமிட்டு பேச வேண்டிய அவசியம் இருக்காது. அடக்கமாக பேசி காரியம் சாதிப்பேன்,'' என, சச்சின் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவரது சாதனைகளுக்கு அங்கீகாரமாக ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். பொதுவாக பார்லிமென்ட் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி, பிரச்னை கிளப்புவர். ஆனால், சச்சினை பொறுத்தவரை அமைதியாக பேசி மிகவும் நாகரிகமாக நடந்து கொள்ள விரும்புகிறார்.
இது குறித்து சச்சின் கூறியது:
ராஜ்யசபாவில் நான் சத்தமிட்டு கோஷம் எழுப்ப வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன். என்னை யாரும் சத்தமாக பேச வைக்க மாட்டார்கள். எதற்காக கத்த வேண்டும்? சொல்ல வேண்டிய விஷயத்தை அடக்கமாக சொல்லலாம். அதற்கு பின் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு நட்சத்திரங்களுக்கு எனது வாழ்த்துகள். இவர்கள் சிறப்பாக செயல்பட இறைவனை பிரார்த்திக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக கடினமாக பயிற்சி மேற்கொண்டுள்ளனர். பதக்கம் வெல்ல தவறினாலும் கூட, அவர்களது முயற்சிகளை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.
பகலிரவு டெஸ்ட் போட்டியை உடனடியாக சர்வதேச அளவில் அமல்படுத்தக் கூடாது. முதல் தர போட்டிகளில் சோதனை ரீதியாக அமல்படுத்தி, வீரர்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.
இவ்வாறு சச்சின் கூறினார்.

22 June 2012

டென்னிஸ் இரண்டு ஜோடிக்கு "ஓ.கே ஓ.கே'' *


புதுடில்லி: ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்னைக்கு முடிவு கிடைத்துள்ளது. "லண்டன் ஒலிம்பிக்கில் பயஸ்-விஷ்ணு வர்தன், பூபதி-போபண்ணா என, இரண்டு ஜோடி பங்கேற்கும்,' என, அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) முடிவு செய்துள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய டென்னிஸ் வீரர்கள் தேர்வு, இம்முறை பிரச்னையாக போனது. லியாண்டர் பயசுடன் இணைந்து மகேஷ் பூபதி விளையாடுவார் என, ஏ.ஐ.டி.ஏ., முதலில் அறிவித்தது. இதை ஏற்க முடியாது என, பூபதி முதலில் அறிவித்தார்.
"பூபதி வேண்டாம் என்றால் ரோகன் போபண்ணாவுடன் விளையாடத் தயார்,' என பயஸ் தெரிவிக்க, போபண்ணாவும் மறுத்தார். பின், மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகனை தலையிடுமாறு கேட்டுக்கொண்டார் பூபதி. "வீரர்கள் தேர்வு விஷயத்தில் தலையிட முடியாது,' என, அஜய் மேகனும் ஒதுங்கினார். 
"தரவரிசையில் பின்தங்கிய விஷ்ணு வர்தன், யூகி பாம்ப்ரி போன்ற ஜூனியர் வீரர்களுடன் விளையாட முடியாது. தொடர்ந்து வற்புறுத்தினால் ஒலிம்பிக்கில் இருந்து விலகுவேன்,' என, தன் பங்கிற்கு திடீரென மிரட்டினார் பயஸ். 
நேற்று டென்னிஸ் வீரர்களை தேர்வு செய்ய கடைசி நாள். பூபதி, போபண்ணாவை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. வேறு வழியின்றி இரண்டு ஜோடி செல்லலாம் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து ஏ.ஐ.டி.ஏ., தலைவர் அனில் கண்ணா கூறியது:
அனைத்து சூழ்நிலைகளையும் ஆராய்ந்த பின், வேறு வழியின்றி லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இரு ஜோடிகளை அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. இதன் படி பயஸ்-விஷ்ணு வர்தன் (207வது இடம்), பூபதி-போபண்ணா என இரு ஜோடி ஒலிம்பிக் செல்கிறது. சோம்தேவ் தேவ்வர்மன் தோள்பட்டை காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை என்பதால் அவரை தேர்வு செய்யவில்லை. 
மதிப்பு உள்ளது:
பயஸ் மீது நாங்கள் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளோம். இவரது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க மாட்டோம். பூபதி, போபண்ணா பேசியதை, பயஸ் மன்னித்து விட வேண்டும். இவர், தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். தவிர, முதன் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள போபண்ணா, விஷ்ணு வர்தனின் வெற்றிக்கு உதவுமாறும் கேட்டுள்ளோம். 
நம்பிக்கை உள்ளது:
இந்தியாவின் "நம்பர்-1' வீரர் பயஸ். இந்தியாவுக்காக டேவிஸ் கோப்பை போட்டிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கேற்றுள்ள இவருக்கு, இது ஏற்றுக் கொள்ள முடியாத முடிவு என்பதில் சந்தேகம் இல்லை. இதனால், பயஸ் ஏமாற்றம் அடைய மாட்டார் என்று உறுதியாக நம்புகிறோம். 
அதேநேரம், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபனில் பூபதியுடன் சேர்ந்து விளையாடிய சானியா மிர்சாவுக்கு, ஒலிம்பிக்கில் பங்கேற்க சிறப்பு அனுமதி ("வைல்டு கார்டு') கிடைத்தால், கலப்பு இரட்டையரில் பயசுடன் தான் பங்கேற்பார். இதில் மாற்றமில்லை. 
இவ்வாறு அனில் கண்ணா தெரிவித்தார்.
பாம்ப்ரி பாய்ச்சல்
ஜூனியர் வீரர்களுடன் விளையாட முடியாது என்ற லியாண்டர் பயஸ் முடிவு குறித்து இந்திய இளம் வீரர் யூகி பாம்ப்ரி கூறுகையில்,""1992ல் பயஸ் வயது 19. அப்போதைய சீனியர் வீரர் ரமேஷ் கிருஷ்ணன், பயசை சேர்த்துக் கொண்டு தான், பார்சிலோனா ஒலிம்பிக் இரட்டையர் போட்டியில் பங்கேற்றார். அப்படியென்றால் ரமேஷ் கிருஷ்ணன் செய்தது தவறா. இப்போது பயஸ் இப்படி கூறுவது துரதிர்ஷ்டவசமானது,'' என்றார்.
வரவேற்பும், எதிர்ப்பும்
வேஸ் பயஸ் ( லியாண்டர் பயஸ் தந்தை)
ஏ.ஐ.டி.ஏ., முடிவு பயசுக்கு ஏமாற்றமாக இருக்கும். அதிக உணர்ச்சி வசப்படக் கூடிய பயஸ், அடுத்து என்ன செய்வார் என, கணிப்பது கடினம். நாட்டுக்காக விளையாடுவதில் பயஸ் எப்போதுமே சமரசம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இருவரது மிரட்டல் காரணமாக இம்முடிவை எடுத்திருப்பது, மற்றவர்களுக்கும் மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும். 
கிருஷ்ணா பூபதி (மகேஷ் பூபதியின் தந்தை)
இரண்டு அணி செல்வது என்ற ஏ.ஐ.டி.ஏ., முடிவால் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. பூபதி, போபண்ணா ஜோடி எப்படியும் லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும். அதேநேரம், கலப்பு இரட்டையரில் பயசுடன், சானியா ஜோடி சேர்வார் என்று அறிவித்து இருப்பது ஏமாற்றம் தருகிறது.
"கிருஷ்ணா, கிருஷ்ணா'
ஏ.ஐ.டி.ஏ., பொதுச்செயலர் பரத் ஓஜா கூறுகையில்,"" நேற்று காலை மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பயசுடன் பேசினார். நாட்டுக்காக சில தியாகத்தை செய்யும் படி அவரிடம் கேட்டுக்கொண்டார். இவரது தலையீட்டுக்குப் பின் தான் இம்முடிவு எடுத்தோம். இதை பயஸ் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறோம்,'' என்றார். 
உற்சாகமாக உள்ளது
பூபதி-போபண்ணா ஜோடி இணைந்து வெளியிட்ட அறிக்கை:
கடந்த நான்கு ஒலிம்பிக்கில் பயசுடன் சேர்ந்து விளையாடியும், பதக்கம் வெல்ல முடியவில்லை. புதிதாக ஜோடி சேர்ந்தால் ஒருவேளை சாதிக்கலாம் என்று தான் போபண்ணாவுடன் இணைந்தேன். எங்களது முடிவில் உறுதியாக இருந்தோம். கடைசியில், 30வது ஒலிம்பிக் போட்டியில் எங்களையும் ஒரு ஜோடியாக தேர்வு செய்தது மகிழ்ச்சி. இனி, எங்களது கவனம் முழுவதும் பயிற்சியில் தான் இருக்கும். கலப்பு இரட்டையரில் சானியாவுடன் பயஸ் விளையாடுவார் என்ற அறிவிப்பு குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
லியாண்டர் பயஸ் விலகல்
இரண்டு ஜோடி முடிவுக்கு பயஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏ.ஐ.டி.ஏ., க்கு எழுதிய கடிதத்தில்," ஜூனியர் வீரருடன் தான் பங்கேற்க வேண்டும் என்ற முடிவு ஏமாற்றம் தருகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாது,' என, பயஸ் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. 

17 June 2012

இந்தோனேசிய ஓபன்: சாய்னா சாம்பியன்

ஜகார்த்தா, ஜூன்.17: இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

ஜகார்த்தாவில் இன்று நடைபெற்ற சூப்பர் சீரிஸ் இறுதிப் போட்டியில் சீனாவின் ஸியூரூய் லீயை 13-21, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் பாங்காங்கில் நடைபெற்ற தாய்லாந்து ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை சாய்னா கைப்பற்றியிருந்தார். தொடர்ந்து இந்தோனேசிய ஓபன் பட்டத்தைக் கைப்பற்றி தனது வலிமையை நிரூபித்துள்ளார். 
 -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT