உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466
Showing posts with label பொது செய்தி. Show all posts
Showing posts with label பொது செய்தி. Show all posts

05 January 2013

சோனியா 49 முறை இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பயணம்

புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, ஏழு ஆண்டுகளில், 49 முறை, இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பயணம் செய்துள்ள விவரம், தெரியவந்துள்ளது.

பிரதமர், துணை பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், ராணுவ அமைச்சர் ஆகியோர் மட்டுமே, விமானப் படை விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பயணிக்க முடியும். பிரதமருக்கு மட்டும், இதில் விலக்கு உண்டு.இந்நிலையில், அரியானா மாநிலத்தை சேர்ந்த, ரமேஷ் வர்மா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், "இந்திய விமானப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில், காங்., தலைவர் சோனியா, காங்., பொதுச் செயலர் ராகுல் ஆகியோர், பயணம் செய்ததன் விவரத்தை தெரிவிக்க வேண்டும்' என, மனு தாக்கல் செய்திருந்தார். 


ராணுவ அமைச்சகம் பதில்: சோனியா, ஏழு ஆண்டுகளில், 49 முறை, விமானப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் பயணித்துள்ளார். இவற்றில், 28 முறை, பிரதமர் மன்மோகன் சிங்குடனும், ஆறு பயணங்கள் அரசுத் துறை தொடர்பானவையும் ஆகும். காங்., பொதுச் செயலர் ராகுல், மூன்று ஆண்டுகளில், எட்டு முறை பயணித்துள்ளார். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்த நாள் ஆடம்பரமாக கொண்டாட "நித்தி' முடிவு


திருவண்ணாமலை: நித்தியானந்ததா இந்தாண்டு பிறந்த நாளை சிறப்பாக பக்தர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார். அவரது நேரடி கண்காணிப்பில் விழா ஏற்பாடு நடந்து வருவதால், திருவண்ணாமலை தியான பீடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு, 2012ம் ஆண்டு மிகவும் சோதனையான ஆண்டாக அமைந்தது. அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து, மிகுந்து மன உளைச்சலுக்கு ஆளாகினார். இதில், கடந்தாண்டு ஏப்ரல், 29ம் தேதி, 203வது மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டபோது, மிகுந்து மகிழ்ச்சியில் திளைத்த போதும், மற்றொருபுறம் ஹிந்து அமைப்புகள் , பிற ஆதீனம், பிற மடத்தை சேர்ந்தவர்களின் எதிர்ப்பு போன்றவை இவரது நிம்மதியை பறித்தது.

ஏற்கனவே நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் சர்ச்சை ஓயாத நிலையில், இளைய ஆதீன பொறுப்பு ஏற்றதும் அதற்கு வந்த எதிர்ப்பாளர்களையும் சமாளிக்க முடியாத நிலைஏற்பட்டது. பிடதி ஆசிரமத்தில் நிருபர்களுடன் மோதல் ஏற்பட்டு, கடந்த ஜூன், 12ம் தேதி பிடதி ஆஸ்ரமம் சீல் வைக்கப்பட்டு, மறுநாள் கர்நாடகா போலீஸாரால், நித்யானந்தா கைது செய்யப்பட்டதால், அடுத்த சறுக்கல் ஏற்பட்டது,
நேரடி தலையீட்டால் பரபரப்பு :

அக்டோபர், 16ம் தேதி, "மதுரை ஆதீனத்தின் இளையமடாதிபதியாக நியமித்தது செல்லாது' என, தமிழக அரசு அறிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்யானந்தாவை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நீக்கினார். இதனால், கடந்தாண்டு இவருக்கு அடிமேல் அடியாக, ஆண்டு முழுவதும் நித்யானந்தாவுக்கு சோதனையாக அமைந்தது. இவரது சீடர்கள் சிலர் விரக்திக்கு ஆளாகினர். சிலர் நித்யானந்தாவின் சீடர் என சொல்வதை தவிர்த்து அவரிடமிருந்து விலகி செல்ல துவங்கினர். அதனால், அவருக்கு கடந்த காலங்களை போல் சீடர்கள் கூட்டம் இல்லாமல் குறைந்து விட்டனர். இதனால், அவரது சீடர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்து மீண்டும் தன் பழைய இமேஜை கொண்டு வர அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அதற்காக, 2013ம் ஆண்டில் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார். அவரது பிறந்த நாள் நட்சத்திரம் நாளை வருவதால் அவரது, 36வது பிறந்தநாளை, 36வது அவதார பெருநாளாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தியான பீடத்தில் கொண்டாட முடிவு செய்துள்ளார். 
இதற்காக தியான பீடத்தில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது, அன்னதானம் வழங்க, அங்கு போதுமான இடம் இல்லாததால், அவரது தியான பீடத்தின் எதிரில் உள்ள சீனுவாசா உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
எப்போதும் தியான பீடத்தில் எந்த விழா நடந்தாலும், அவரது சீடர்களே ஏற்பாடு செய்வது வழக்கம், ஆனால், இந்த முறை விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட நித்தியானந்தா, விழா ஏற்பாடுகளை தன் நேரடி பார்வையில் செய்து வருகிறார். அவரது ஆஸ்ரமத்திற்கு வெளியூரிலிருந்து, சீடர்கள் வருகை தர துவங்கி விட்டனர். 
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் ஹிந்து அற நிலையத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் தியான பீடத்தில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.


20 December 2012

உழைப்பும், திறமையும் இருந்தால், நாமும் ஜெயிக்கலாம்: பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை

"நம்பிக்கை, நெஞ்சில் வை, தித்திக்கும் வாழ்க்கை' என்ற பாடல் வரிக்கேற்ப, உழைப்பும், திறமையும் இருந்தால், நாமும் ஜெயிக்கலாம் என, சாதித்து காட்டியிருக்கிறார், ரஞ்சனா என்ற, பார்வையற்ற பெண். தமிழக அரசு நடத்திய, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, சேலம் மாவட்டம், வலசையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்ஆசிரியையாகச் சேர்ந்துள்ளார்.

பி.எட்., படித்து தேர்ச்சி: 

"வேண்டாம் இந்த பிள்ளை' என, உறவுகள் கூறியபோது, "நானிருக்கிறேன்' என, அந்த குழந்தையை வளர்த்து, ஆசிரியை பணியில் அமர வைத்ததில், அவருடைய தாய்க்கு முக்கிய பங்கு உண்டு. பார்வையற்ற நிலையில், பி.எட்., வரை படித்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது பணியில் சேர்ந்துள்ளார், ரஞ்சனா.சேலம், அஸ்தம்பட்டி, மணக்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம், புஷ்பலதா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர் ரஞ்சனா, 23. இரண்டரை வயது வரை, தலை தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு, "இந்த குழந்தை தேறாது' என, உறவுகள் ஒதுக்கியபோது, "10 மாதம் சுமந்த மகளை, மண்ணுக்கு அனுப்ப மாட்டேன்' என, மருத்துவமனைக்கு அலைந்து மீட்டெடுத்தார் அவருடைய தாய். ரஞ்சனாவுக்கு பின் பிறந்தவர்கள் பிரவீணா, விஜயன்.ஒன்றாம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரை, சேலம் சாரதா வித்யா மந்திர் பள்ளியில், ஆர்வமுடன் படித்த ரஞ்சனாவால், கல்வியை தொடர முடியாதவாறு, கண்ணில் ஏற்பட்ட வலி கொடுமைப்படுத்தியது. அதன்பின், செவ்வாய்பேட்டையில் உள்ள அரசு விழியிழந்தோர் பள்ளியில், "பிரெய்லி' முறையில் தன்னுடைய படிப்பை தொடர்ந்தார்.பிளஸ் 2வில் சாதனைஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மதுரையில் உள்ள இந்திய பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பில், 338 மதிப்பெண்களும், பிளஸ் 2வில், 954 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தார். பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்று, அப்பள்ளியின் முதல் மாணவியாக வந்தார்.சிறு வயதில் இருந்தே ஆசிரியை கனவு ரஞ்சனாவை துரத்த, சேலம் சாரதா கல்லூரியில், பி.ஏ., பட்டம் பெற்று, பின், குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில், கவுன்சிலிங்கில் வெற்றி பெற்று, சேர்ந்தார். ஆங்கிலப் பாடப் பிரிவு எடுத்து படித்து, பட்டத்தையும் வாங்கினார். சாதித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து அவர், அடுத்த இலக்கை நோக்கி முன்னேறினார்.பி.ஏ., - பி.எட்., முடித்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பு, நாமும் ஆசிரியையாகி விடுவோம் என்ற நம்பிக்கையை, ரஞ்சனாவுக்கு ஏற்படுத்தியது. இதற்காக, சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் அகடமியில், பயிற்சி பெற்றார்.பார்வை பெற்றது போல் மகிழ்ச்சிமுதல் கட்டமாக நடத்தப்பட்ட தேர்வில் தோல்வியடைந்த போதும், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்வில், 150 மதிப்பெண்ணுக்கு, 95 மதிப்பெண் வாங்கி வெற்றி பெற்றார். தன்னுடைய ஆசிரியை கனவு நிறைவேறிய மகிழ்ச்சி, இழந்த கண்கள் மீண்டும் வந்தது போல், அவருக்கு புதிய தெம்பை ஏற்படுத்தியது.தற்போது, வலசையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக, மாணவியரும், சக ஆசிரியர்களும் பாராட்டு வண்ணம், பணியாற்றி வருகிறார். நேற்று வரை மாணவியாக இருந்தவர், இன்று ரஞ்சனா டீச்சர் என பெருமை பெற்றுள்ளார்!
"முடியாதது எதுவுமில்லை' ரஞ்சனா கூறியதாவது:
அம்மா இல்லை என்றால், இங்கு நான் இல்லை. சிறு வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டேன். கண் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்ற போதும், "முடியாது' என, கைவிரித்து விட்டனர்.முழுமையாக தெரியாத போதும், ஓசை வரும் திசையை வைத்து, அங்கு ஆட்கள் நிற்பதை தெரிந்து கொள்வேன். பிரெய்லி முறையில், பி.எட்., வரை படித்து, ஆடியோ மூலமாக, தகுதித் தேர்வுக்கு தயாராகி, தேர்வு எழுதினேன்.இரண்டாவது முறையாக நடந்த தகுதி தேர்வில், 95 மதிப்பெண்கள் பெற்றேன். கவுன்சிலிங்கிலும் வெற்றி பெற்று, வலசையூர் அரசு பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக உள்ளேன். என்னுடைய அம்மா, தம்பி, தங்கை, தோழிகள் அனைவருக்கும், நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நம்மால் முடியாது என்று நினைக்காமல், முடிந்தவரை முயற்சிக்கும் பழக்கத்தை, மாற்றுத்திறனாளியான ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, ரஞ்சனா கூறினார்.காலத்தையும், நேரத்தையும் வீணடித்துக் கொண்டு, சோம்பித் திரியும் இன்றைய இளைஞர் கூட்டத்துக்கு, பார்வையிழந்த நிலையிலும், ஆசிரியையாக உயர்ந்துள்ள ரஞ்சனா போன்றோர் வழிகாட்டி என்றால் மிகையாகாது.

திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி படித்தவர்கள் அரசு வேலை

பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களில், பட்டப்படிப்பு படித்தவர்கள், அரசு வேலைக்கு தகுதியானவர்களாக ஏற்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு வேலை வாய்ப்புகளை பெற, 10ம் வகுப்பு, பிளஸ் 2, அதன்பின், பட்டப்படிப்புகள் என்ற வரிசையில், கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.ஆனால், பெரும்பாலானோர், பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக, திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்புகளை முடித்து, அரசுப் பணிகளில் உள்ளனர்; அதேபோல் பலர், அரசுப் பணிக்காக, காத்திருக்கின்றனர். நிர்ணயித்த கல்வி வரிசையில் இல்லாமல், மாறி, மாறி, பல்வேறு கல்வித்தகுதிகளை பெற்றவர்களும், அதிகளவில் இருக்கின்றனர்.பத்தாம் வகுப்பிற்குப் பின், பிளஸ் 2 படிக்காமல், இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பெற்றவர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியில்லாதவர்களாக உள்ளனர்.இதுபோன்ற நிலையில், மேற்கண்ட வரிசையில், கல்வி தகுதிகளை பெற்றவர்களை, முறையான வரிசையில், கல்வி தகுதி பெற்றவர்களுக்கு இணையாக ஏற்று, அரசு வேலை வாய்ப்பு பெறவும், பதவி உயர்வு பெறவும் வழிவகை செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம், உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு:
* பத்தாம் வகுப்பிற்குப் பின், மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு படித்து, பின், திறந்தவெளி பல்கலை, தொலைதூர கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் மூலம் பட்டப் படிப்பு படித்தவர்கள்...
* பழைய எஸ்.எஸ்.எல்.சி., (11ம் வகுப்பு) படித்து, அதன்பின், இரண்டு ஆண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி படித்து, பின், தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்...
* பத்தாம் வகுப்பு - ஐ.டி.ஐ., - தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்...
* பத்தாம் வகுப்பு, மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு, பின், இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள்...
மேற்கண்ட படிப்பை படித்தவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பின், 3 ஆண்டு பட்டப்படிப்பு பெற்றவர்களுடன் இணையாக கருதி, அரசு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு அங்கீகரித்து, தமிழக அரசு உத்தரவிடுகிறது.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவின் மூலம், அரசுப் பணிகளில் ஏற்கனவே இருப்பவர்கள், பதவி உயர்வு பெற, பெரிதும் வழிவகுக்கும். மேலும், பிளஸ் 2 படிக்காமல், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வில் பங்கேற்று, இடைநிலை ஆசிரியர் வேலை பெறவும் வழி பிறந்துள்ளது.

19 December 2012

மக்களை அச்சுறுத்தும் மாயன் உலக அழிவு


கடந்த சில வருடங்களாக, மாயன் நாள்காட்டி 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் முடிவுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழிவை நெருங்குகின்றது என்று ஊடகங்களும் காணொளிகளும் மக்களை பயமுறுத்தி வருகின்றன. பத்தில் ஒரு அமரிக்கர் உலகம் அழியப் போவதாக நம்புவதாகக் கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. மாயா 2012 என்ற குறிச் சொல்லைப் பயன்படுத்தி கூகுள் தேடலில் மட்டும் 700 மில்லியன் பேர் தேடியிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
அமரிக்காவின் நாசா ஆராச்சி நிலையம் இதனால் இளைஞர்கள் தற்கொலை மனோ நிலைக்குத் தள்ளப்பட்டிருப்தாகவும் பல குழந்தைகளின் ஆழ்மனதில் பய உணர்வும் விரக்தியும் அதிகரித்திருப்பதாகவும் கூறுகின்றது.
மத்தியதர வர்க்கத்தின் குப்பை மேடு போன்ற சமூக வலைத் தளங்களான பேஸ் புக் போன்றவை இதற்கான பிரச்சாரத்தை முன்னிலைப் படுத்தியது. சரிந்து விழுந்துகொண்டிருக்கும் அமரிக்க ஐரோப்பிட பொருளாதாரத்திற்கு எதிரான போராட்டங்களை ஒத்திவைக்கும் நோக்குடன் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுகின்றதா என்ற சந்தேகங்களும் எழுகின்றன.
சீனாவில் உலக அழிவு நாளில் தங்கியிருப்பதற்கு என பாதுகாப்பு உருண்டைகளை புதிய பணக்காரர்கள் வாங்கி வருகிறார்கள்.
மாயன் கலண்டரின் அடிப்படையில் புதிய சூரியன் இன்னும் 5200 வருடங்களுக்கு உலகைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்று கூறுவதாக மத்திய அமரிக்காவில் இன்னும் மாயனை பின்பற்றும் குழுவின் தலைவர் கூறுகிறார். அதில் எப்போதும் உலகம் அழிவதாகக் கூறப்படவில்லை என்கிறார்.

1000 இடங்களில் போலீசார் சார்பில் புகார் பெட்டிகள்

மும்பை : டில்லியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக மும்பையில் 1000 இடங்களில் போலீசார் சார்பில் புகார் பெட்டிகள் அமைக்கப்பட உள்ளன. பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பெண்களுக்கு எதிராக கொடுமைகள் குறித்த புகார்களை பெண்களும், பொதுமக்களும் அதில் பதிவு செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் இந்த புகார் பெட்டிகள் அமைக்கப்பட உள்ளதாக மகாராஷ்டி போலீசார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் இருந்து 7 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.


மும்பை :கடந்த 2001 முதல் 2010 வரையிலான, 10 ஆண்டுகளில், இந்தியாவில் இருந்து, 12,300 கோடி டாலர் (7 லட்சம் கோடி ரூபாய்) கறுப்பு பணம், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

வளரும் நாடுகள்:


இதுகுறித்து, அமெரிக்காவை சேர்ந்த குளோபல் பைனான்ஸ் இன்டெக்ரிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் விவரம்:வளரும் நாடுகளில் உள்ள கறுப்பு பணம், சட்டவிரோதமாக வளர்ந்த நாடுகளில் பதுக்கி வைக்கப்படுகிறது. இதனால், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.இந்நாடுகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு, இத்தகைய செயல்பாடு தடையாக உள்ளது.இந்த வகையில், இந்தியாவில் இருந்து, 10 ஆண்டுகளில், 12,300 கோடி டாலர் கறுப்பு பணம், வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது. 
கட்டமைப்பு துறை:


இதில், 10 ஆயிரம் கோடி டாலருக்கும் அதிகமான தொகை, கல்வி, ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறையின் மேம்பாட்டிற்கு பயன்பட்டிருக்க வேண்டும்.மேலும், குறிப்பிட்ட தொகை இந்தியாவிலேயே இருந்திருந்தால், தேசிய மின் தொகுப்பு துறையில் முதலீடு செய்யப்பட்டிருக்கும். இதனால், கடந்த ஆண்டு தேசிய அளவில் ஏற்பட்ட மின்தடை பிரச்னைகள், இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்காது.அண்மை காலங்களில், இந்தியா முன்னேற்றம் கண்டு உள்ளது. எனினும், சட்டவிரோதமாக வெளியேறும் நிதியால், இந்தியா தொடர்ந்து மிகப் பெரிய அளவிலான செல்வத்தை இழந்து வருகிறது.இந்தியாவில் இருந்து, ஏற்கனவே வெளியேறி விட்ட கறுப்பு பணத்தை மீட்பதற்கு தான், ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. கறுப்பு பணம் உள்ளவரை இது தொடரும். அரசியல் கொள்கைகளை உருவாக்குவோரும், விமர்சிப்போரும், நாட்டில் இருந்து வெளியேறும் கறுப்பு பணத்தை தடுப்பதற்கு முன்னுரிமை தர வேண்டும்.


சுணக்க நிலை:
கடந்த 2010ம் ஆண்டு, அனைத்து வளரும் நாடுகளில் இருந்தும், 85,880 கோடி டாலர் கறுப்பு பணம், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது.இது, 2008ம் ஆண்டில், அமெரிக்க பொருளாதார சுணக்க நிலைக்கு, முன்பான, மிக உயர்ந்த பட்ச தொகையை (87,130 கோடி டாலர்) விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.வளரும் நாடுகளை பொறுத்தவரை, அதிக அளவில் கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் இழந்ததில், சீனா முதலிடத்தில் உள்ளது. இந்நாடு, மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 10 ஆண்டுகளில், 27.4 லட்சம் கோடி டாலரை இழந்துள்ளது. 


பிலிப்பைன்ஸ்:
அடுத்த இடங்களில், மெக்சிகோ (47,600 கோடி டாலர்), சவுதி அரேபியா (20,100 கோடி டாலர்), ரஷ்யா (15,200 கோடி டாலர்), பிலிப்பைன்ஸ் (13,800 கோடி ரூபாய்), நைஜீரியா (12,900 கோடி ரூபாய்) ஆகியவை உள்ளன.இந்த பட்டியலில், இந்தியா (12,300 கோடி டாலர்) எட்டாவது இடத்தில் உள்ளது.

மானிய விலையில் "காஸ்' சிலிண்டர் வாங்குவதை கைவிடுங்கள்: 4,500 ரூபாய் என்பது, பெரிய தொகை அல்ல

புதுடில்லி:"தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், உயரதிகாரிகள் ஆகியோர், மானிய விலையில், சமையல், "காஸ்' சிலிண்டர் பெறுவதை தவிர்க்க வேண்டும். சந்தை விலைக்கேற்ப, சிலிண்டர்களை வாங்குவதால், அவர்களுக்கு, பெரிய இழப்பு எதுவும் ஏற்பட்டு விடாது' என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

"சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், மானிய விலையில் வழங்கப்படும், சமையல், "காஸ்' சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்' என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தின.இதையடுத்து, "மானிய விலையில், குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஆறு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஒன்பதாக அதிகரித்தது.

இந்நிலையில், மானிய விலையில், "காஸ்' சிலிண்டர்களை வழங்குவதால், தங்களுக்கு, பெரும் இழப்பு ஏற்படுவதாகக் கூறும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், சில ஆலோசனைகளை முன்வைத்து உள்ளன. 

இதுகுறித்து, பொதுத் துறை எண்ணெய் நிறுவனம் ஒன்றின், மூத்த அதிகாரி ஒருவர், கூறியதாவது:மானிய விலையில், ஆண்டுக்கு, ஒன்பது சிலிண்டர்கள் வழங்குவதால், ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஆண்டுக்கு, 3,000 ரூபாய் முதல், 4,500 ரூபாய் வரை, பலன் கிடைக்கும். இந்த இழப்பை, மத்திய அரசும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் தான், ஏற்க வேண்டும்.ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, இந்தத் தொகை, மிகவும் முக்கியமானது. அவர்களை பொறுத்தவரை, இது, கணிசமான தொகையே. இந்த மானியத்தை பெறுவதற்கான முழு தகுதியும், அவர்களுக்கு உண்டு.

ஆனால், முன்னணி அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், அமைச்சர்கள், உயரதிகாரிகளுக்கு, ஆண்டுக்கு, 4,500 ரூபாய் என்பது, பெரிய தொகை அல்ல. மேல்தட்டு மக்கள், குடும்பத்துடன் ஒருவேளை உணவு சாப்பிடுவதற்காக, ஓட்டலுக்குச் செல்லும்போது, இந்தத் தொகையை விட, அதிகம் செலவு செய்கின்றனர்.எனவே, மானிய விலையில், சமையல், "காஸ்' சிலிண்டர்களை பெறுவதை, அவர்கள் தவிர்க்க வேண்டும். தாங்களாகவே முன்வந்து, "மானிய விலை சிலிண்டர்கள், எங்களுக்கு வேண்டாம்' என்பதை, சம்பந்தப்பட்ட, "காஸ்' ஏஜன்சிகளிடம், அவர்கள் தெரிவிக்க வேண்டும். மானிய விலை சிலிண்டருக்கு பதிலாக, அவ்வப்போதைய சந்தை விலைக்கேற்ப, சிலிண்டர்களை அவர்கள் பெறலாம். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்


அதிகரித்து வரும் புவி வெப்பத்தால் இன்னும் 50 ஆண்டுகளில் தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா கடந்த இரண்டு நாட்களாக சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தி்ல் நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான அறிவியல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2 டிரி்ல்லியன் டன் ஐஸ் கட்டிகள் உருகிவிட்டதாகவும், எதிர்காலத்தில் சென்னை உட்பட ஏராளமான பகுதிகள் கடலுக்குள் மூழ்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்தனர்.
இம்மாநாட்டின் தீர்மானங்களையும், முக்கியமான பரிந்துரைகளையும் வரும் 22 ஆம் தேதி அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பினர் பிரதமரிடம் வழங்கவுள்ளனர்.

மின் தேவை, வினியோகம் சீராக இருக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு


"மின் உற்பத்தி, வினியோகத்துக்கான திட்டங்களை அமல்படுத்த, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த, "சிட்டிசன் கார்டியன்' அமைப்பின் நிர்வாகி, ரவிச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' விசாரித்தது.மாவட்டங்களில் மின் வெட்டு நேரம் எவ்வளவு, மின்வெட்டு குறித்த தகவலை, மீடியாக்கள் மூலம், முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை என, விளக்கம் அளிக்க, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.

இம்மனுவுக்கு, டான்ஜெட்கோ இயக்குனர், ஜெயசீலன் தாக்கல் செய்த பதில் மனு:
மேட்டூர், வடசென்னை அனல் மின் நிலையங்களை, விரைந்து இயக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் மாதங்களில், மின்சார நிலைமை மேம்படும். மின்வெட்டுப் பிரச்னையை குறைக்க, படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கட்டாய செயல் இழப்பு, திடீர் மின் தேவை போன்ற காரணங்களால், மின்வெட்டு குறித்து, முன்கூட்டி அறிவிப்பு செய்ய முடியவில்லை. மற்றபடி, மின் தடை பற்றி, மீடியாக்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது.மின் தேவை, வினியோகம் சீராக இருக்க வேண்டும். இல்லையெனில், மின் கட்டமைப்பில் குளறுபடி ஏற்படும். எனவே, மின் வெட்டு தவிர்க்க முடியாதது.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

"முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ள திட்டங்களை, அமல்படுத்த வேண்டும். மின் உற்பத்தி மற்றும் வினியோகத்துக்கான திட்டங்களை அமல்படுத்த, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பதில் மனுவில் கூறியுள்ளபடி, நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, இவ்வழக்கு நிலுவையில் வைக்கப்படுகிறது. விசாரணை, எட்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

01 September 2012

வரதட்சணை கேட்டால் ஏழு ஆண்டு சிறை தண்டனை

புதுடில்லி:வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை ஒழிப்பு சட்டத்தில், சில திருத்தங்களைக் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, திருமணத்தின் போது, அன்பளிப்பாக கொடுக்கப்படும், தங்க நகைகள் மற்றும் பிற பொருட்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, இரு தரப்பினரும் கையெழுத்திட்டு, இதற்கென நியமிக்கப்படும் வரதட்சணை ஒழிப்பு அதிகாரியிடம், ஒப்படைக்க வேண்டும்.இதைச் செய்யத் தவறும்பட்சத்தில், ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டு வரை, சிறைத் தண்டனை வழங்கப்படும். அதே நேரத்தில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் குற்றத்துக்கான சிறைத் தண்டனை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்தப்படும். ஆனால், வரதட்சணை தருவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஒரு ஆண்டாக குறைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

பெண்ணின் பெற்றோரே அதிகம் பாதிக்கப்படுவோராக இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் புகார் செய்யும் பெண், அதற்கான நிவாரணம் பெறவும், வழிவகை செய்யப்படும். இச்சட்டத்தின் கீழ், குற்றம் நடந்த இடம் மட்டுமல்லாது, வேறு இடத்தில் இருந்தும் புகார் செய்யலாம்.பாதிக்கப்பட்ட பெண், தன் சொந்த அல்லது தற்காலிக வீட்டில் இருந்து, புகார் செய்ய அனுமதிக்கப்படும் போது, அப்பெண், தன் பெற்றோரின் வீட்டில் இருந்து கொண்டும், சுதந்திரமாக புகார் செய்யலாம். அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களை, பாதிக்கப்பட்ட நபர்கள் என, வகைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

17 August 2012

15 நாட்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.சிற்கு தடை: மத்திய அரசு

புதுடில்லி : அடுத்த 15 நாட்களுக்கு பல்க் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.சிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வ‌டகிழக்கு மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக பரவிய வதந்திக்கு இணையதள தொழில்நுட்பமே காரணம் என மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர் ஆர் பாட்டீல் கருத்து தெரிவித்திருந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது . இந்த தடை, நாடு முழுவதும் அவசரமாக அமல்படுத்தப்படுகிறது.

10 August 2012

எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு


"அரசுப் பதவிகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு, பதவி உயர்வுகளில், இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சட்டத் திருத்த மசோதா, வரும், 22ம் தேதி பார்லிமென்டில் கொண்டு வரப்படும்,'' என, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, நேற்று ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

ராஜ்யசபா நேற்று துவங்கியதும், கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்ள, சபைத் தலைவர் ஹமீது அன்சாரி முயன்றபோது, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள் எழுந்தனர். அப்போது மாயாவதி பேசியதாவது: அரசுப் பதவிகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு, பதவி உயர்வு அளிப்பதில், பாரபட்சம் காட்டப்படுகிறது. அவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். பதவி உயர்வு அளிப்பதில், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், அதை மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது. "இது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும்' என, கடந்த கூட்டத்தொடரின் போதே, அரசு உறுதியளித்தது. அதன் பின், எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்விஷயத்தில், காலம் தாழ்த்தும் தந்திரத்தை அரசு கையாள்கிறது; இதை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே பார்லிமென்டில், முழு அளவில் விவாதம் நடந்து முடிந்து விட்டது. ஏறத்தாழ எல்லா கட்சிகளுமே, ஆதரவும் தெரிவித்து விட்டன. இனியும் காலம் தாழ்த்தப் பார்த்து, சட்டத் திருத்தம் கொண்டு வரவில்லை எனில், சபையை நடத்த விட மாட்டோம். இவ்வாறு மாயாவதி பேசினார்.

அமளி: இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள் ரகளையில் இறங்கினர். அப்போது, அரசு தரப்பில் பதிலளித்த அமைச்சர் நாராயணசாமி, ""இந்தக் கூட்டத்தொடரிலேயே அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு, உரிய முடிவு எடுக்கப்படும்,'' என்றார். இந்தப் பதிலால் திருப்தி அடையாத, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள், அமளியில் இறங்கினர். இந்த நேரத்தில், "கறுப்புப் பண விவகாரம் குறித்து பேச வேண்டும் எனக் கூறி, பா.ஜ., - எம்.பி.,க்களும் கோஷங்கள் எழுப்பினர். இதனால், பகுஜன் சமாஜ் மற்றும் பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சபை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

அமைச்சர் உறுதி: மீண்டும் சபை கூடிய போதும், இதே போல் அமளி தொடரவே, அரசு சார்பில் பேசிய, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது: பதவி உயர்வுகளில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து விவாதிக்க, வரும், 21ம் தேதி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, பிரதமர் மன்மோகன் சிங் கூட்டுவார். மறுநாள் இந்த கோரிக்கை தொடர்பான, அரசியல் சட்டத் திருத்த மசோதா, பார்லிமென்டில் கொண்டு வரப்படும். இவ்வாறு நாராயணசாமி கூறினார். இதையடுத்து, பிரச்னை முடிவுக்கு வந்து, சபையில் அமைதி திரும்பியது.

லோக்சபா நிலவரம்: லோக்சபா நேற்று காலை கூடியதும், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள், சபையின் மையத்திற்கு வந்து, இதே கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். உறுப்பினர்கள் தங்களின் இருக்கைக்கு திரும்ப மறுக்கவே, இந்த விவகாரம் தொடர்பாக, சிலர் பேச, சபாநாயகர் மீராகுமார் அனுமதித்தார். இதையடுத்து, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சைலேந்திர குமார், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தாராசிங் சவுகான், காங்கிரசைச் சேர்ந்த பன்னா லால் புனியா ஆகியோர் பேசினர்.

09 August 2012

இலவச மொபைல் போன் வழங்கும் திட்டம்: மத்திய அரசு


புதுடில்லி: வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று கோடி பேருக்கு, 7,000 கோடி ரூபாய் செலவில், இலவச மொபைல் போன் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, சுதந்திர தினத்தன்று பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. 90 கோடி பேருக்கு மேல், மொபைல் போன் வைத்துள்ளனர். தினமும் மொபைல் போன் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களில், மொபைல் போன் என்பது இன்னமும், "பகல் கனவாக'வே உள்ளது.

புதிய திட்டம்: இந்நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு, மொபைல் போனை இலவசமாக வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்தப் புதிய திட்டத்திற்கு, "ஒவ்வொரு கையிலும் ஒரு மொபைல் போன்' என, பெயரிடவும் தீர்மானித்துள்ளது. நாட்டில், 60 லட்சம் குடும்பங்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு குடும்பத்தில் நான்கு முதல் ஐந்து பேர் இருப்பதாக கணக்கிட்டால், மூன்று கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் இலவசமாக மொபைல் போன் வழங்கப்படும். வெறுமனே மொபைல் போனை மட்டும் வழங்காமல், ஒவ்வொரு மாதமும் 200 உள்ளூர் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும்.

திட்ட செலவு: இந்தத் திட்டத்திற்கு 7,000 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க, மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் திட்டக் கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனேகமாக வரும் 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று இது தொடர்பான அறிவிப்பை, பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், பிரதமரின் சுதந்திர தின உரையில் இடம் பெறும் திட்டங்கள் குறித்து, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் இன்னமும் உறுதி செய்யவில்லை.

07 August 2012

கோயில்களில் விஐபி பாஸ் ரத்து

சென்னை : விழாக்காலங்களில் தமிழக கோயில்களில் வழங்கப்பட்டு வந்த விஐபி பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பெயர், பதவி ஆகியவற்றை கொண்டு பேட்ஜ் வழங்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டவர்கள் மட்டுமே விஐபி முறையில் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர், கவர்னர், முதல்வர்கள் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரை அனுமதிக்கப்படுவர் என இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தமிழக கோயில்களில் விஐபி தரிசன முறையை ரத்து செய்க்கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கு விசாரணையின் போது, இந்து சமய அறநிலையத்துறை இதனை தெரிவித்துள்ளது. 

06 August 2012

செவ்வாயில் வெற்றிகரமாக விண்கலம் தரையிறங்கியது!

நியூயார்க் : செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய ரோவர் விண்கலம் கிட்டத்தட்ட 8 மாத பயணத்திற்கு பிறகு இன்று (06.08.12) வெற்றிகரமாக தரையிறங்கியது. விண்வெளி ஆய்வு மையத்தில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக கருதப்படுகிறது. 

பூமியில் இருந்து சுமார் 570 மில்லியன் கி.மீ., தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். இந்த கிரகத்தில் ஊயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகம் தொடர்பான படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. மேலும் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், அதற்கான படங்களையும் வெளியிட்டது நாசா. இதனையடுத்து செவ்வாய் கிரகத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும், அதில் உயிர்கள் வாழ்வதற்கு தேவையான சூழல் இருக்கிறதா...? என்பது பற்றி ஆய்வு செய்யவும் ரோவர் என்ற புதிய விண்கலம் ஒன்றை உருவாக்கியது நாசா விண்வெளி மையம். கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் கேப் கேனரவல் விண்வெளி ‌மையத்தில் இருந்து அட்லஸ் ராக்‌கெட் மூலம் ரோவர் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

வெற்றிகரமாக விண்ணில் தரையிறக்கம் : ரோவர் அனுப்பப்பட்டு சரியாக 8 மாத பயணத்திற்கு பின்னர் இன்று (6ம் தேதி) திங்கட்கிழமை, செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தின் புவிவட்ட பாதைக்குள் ரோவர் விண்கலம் நுழைந்ததும், அதிலிருந்து க்யூரியாசிட்டி வாகனம் செவ்வாயில் தரையிறங்கியது. இந்திய நேரப்படி காலை 11.12 மணியளவில்) ரோவர் தரையிறங்கியது. 

2.5 பில்லியன் டாலர் செலவு : 
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய ரோவர் விண்கலத்தை உருவாக்க 2.5 பில்லியன் டாலர் செலவு செய்து இருக்கிறது அமெரிக்கா. இதில் செவ்வாயை ஆய்வு செய்யும் க்யூரியாசிட்டியின் எடை மட்டும் 899 கிலோ, ரோவர் விண்கலத்தின் மொத்த எடை சுமார் 3 ஆயிரத்து 893 கிலோவாகும். ரோவர் விண்கலத்தில் க்யூரியாசிட்டி என்ற ஒரு வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த க்யூரியாசிட்டி வாகனத்தில் அதிநவீன தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 6சக்கரம் வாகனம் ‌போன்று வடிவ‌மைக்கப்பட்டுள்ள இந்த க்யூரியாசிட்டியில் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளன. செவ்வாயில் இருக்கும் மண்ணை ஆய்வு செய்வதற்கு தேவையான ட்ரில்லர், மண் பரிசோதனை சாதனம் உள்ளிட்ட அனைத்து வகை அம்சங்களும் இந்த க்யூரியாசிட்டியில் உள்ளது. 

30 ஆண்டு கனவு நனவானது: செவ்வாய் கிரகம் தொடர்பாக 30 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுக்கு இன்று தான் பலன் கிடைத்துள்ளது. இது நாசா விஞ்ஞானிகளை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதிய மைல்கல் :
 ரோவர் வெற்றிகரகமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டதன் மூலம், செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லை நாசா விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.

நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி : ரோவர் விண்கலத்தில் இருந்து க்யூரியாசிட்டி வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியதும் விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் தங்களது மகிழ்ச்சியை கட்டி தழுவி பாராட்டிக்கொண்டனர்.

நேரடி ஒளிப்பரப்பு:
 ரோவர் செவ்வாய் கிரகத்தில் இறங்கும் காட்சியை நேரடியாக ஒளிப்பரப்பு செய்தது நாசா விண்வெளி மையம். செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கும் காட்சியை, நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் பெரிய திரை வைத்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை ஏராளமானபேர் நேரில் பார்த்தனர்.

2 ஆண்டுகள் ஆய்வு : செவ்வாயில் தரையிறங்கிய க்யூரியாசிட்டி, செவ்வாய் கிரகம் ‌குறித்து மு‌ழுமையாக ஆய்வு செய்ய இருக்கிறது. சுமார் 2 ஆண்டுகள் அங்கு ஆய்வு மேற்கொண்டு அதுதொடர்பான தகவல்களை நாசா விஞ்ஞானிகளுக்கு அனுப்ப இருக்கிறது. 

20 July 2012

திரு நங்கைகள்- ஒரு சமூகத்தின் அவலமா ?

திரு நங்கைகள்- ஒரு சமூகத்தின் அவலமா ? தயவு செய்து நண்பர்கள் இதை பொறுமையாக படித்து விட்டு செல்லுங்கள்.


தகப்பனுக்கோஅவமான சின்னமாய் உடன்பிறப்புகளுக்கோ கேலியாய் உறவினர்களுக்கோ வேடிக்கையாய் சமுதாயத்திற்கோ கேள்வி குறியாய் எங்களுக்கோ வாழ்க்கை தவிப்பாய் நாங்களும் மனிதர்கள் தானே , எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பர் எங்களை மன்னராய் மனிதராய் வேண்டாம் மனிதராய் மதியுங்கள் மனமில்லா எங்களிடம் தாயே அணைக்க மறுத்த சேய்கள் நாங்கள் வேறு யார் வந்துதான் எங்களை ஆதரிப்பார்கள்

கிராமப்புரங்கள் முதல் நகரங்கள் வரை ஒருவரை சிறுமைபடுத்தவோ
கேவலப்படுத்தவோ பயன் படுத்ப்படும் சொல் “ பொட்டை, அலி , ஒம்போது ” பலருக்கு இந்த கருத்து உண்டு. இவங்க எல்லாம் எதுக்கு உயிர் வாழராங்க ஒம்போதாயிட்டோம்னு தெரிஞ்சஉடனே நாண்டுக்கிட்டு சாக வேண்டியது தான.
ஒருவருக்கு குழந்தை இல்லை என்றால் கூட அலி என அழைப்பது வழக்கமாகிவிட்டது.
ஒரு சமுகத்தில் பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை கொன்றவனைப்பற்றியோ
தின்ணியத்தில் மனிதன் வாயில் மலத்தை திணித்த்தவனை பற்றியோ வாய் திறவாத
இச்சமூகம் பாலின வேறு பாடுள்ள ஒரு சமூகத்தையே சாகச்சொல்கின்றது. மானம் (
மனம் ) கெட்ட மனிதன் .

ஆண் பெண் என்பதனை உறுப்பின் மூலமாக அறிகின்றோம்.அதனால் திரு நங்கைகள்
சுமார் 13 வயது வாக்கில் தான் கண்டறியப்படுகிறனர் அந்த வயதில்தான் ஆணும்
பெண்ணும் பருவ மாற்றம் அடைகின்றனர்.

மேலை நாடுகளில் திரு நங்கை சமமாக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக சில மாநிலங்களில் திருநங்கைகள் நிலை மிகவும் அவமானகரமானதாக உள்ளது. இந்து மத வழக்கப்படி அரவணி என அழைக்கப்படுகிறனர். ஆனா என்னை பொறுத்தவரை திருநங்கை எனவும் திருமங்கை என்று அழைக்கலாம்,

சமுகத்தில் வெறி பிடித்த மனிதர்கள் சிலர் பெண்னை அடிமையாய் வைத்திருப்பது போல திரு நங்கை பாலியல் ரீதியிலான அடிமையாக வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சமுதாயத்தில் ஆண், பெண், விலங்குகள் வாழலாம் ஆனால் திரு நங்கை வாழக்கூடாது. பண்டைய கால இலக்கியங்கள் முதல் தற்கால ஊடகங்கள் வரை திரு நங்கைகளை கேலிப்பொருளாகவே பயன் படுத்துகிறனர்.மனித இனத்தாலேயே ஒரு பாலினம் கேவலப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வருவது கொடுமையிலும் கொடுமை.. அதாவது உன்னை மனிதனாக ஏற்க முடியாது என்று கூறுகின்றனர் கழிவறை முதல் பேருந்து வரை எல்லா இடத்திலும் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. நீ செய்ய வேண்டிய ஒரே தொழில் பாலிய்ல் தொழில் என பல்லை காட்டுகிறது சமூகம். அதற்காகவ படைக்க பட்டர்கள் அவர்கள் யோசியுங்கள் .

இரு திரு நங்கைகள் ரோட்டில் நடந்து சென்றால் ஆண்கள், பெண்களின் கேலிக்கும், நமட்டு சிரிப்புக்கும் ஆளாகாமல் இருக்க முடிகிறதா ? இப்படி செல்லும் இடங்களிலெல்லாம் உளவியல் மனோரீதியிலான கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு பெரும்பாலான் திரு நங்கைகள் வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழிலையும் பிச்சையெடுத்தலையும் செய்கின்றனர். திரு நங்கைகளில் சிலர் செய்யும் தவருதளுக்காக ஓட்டு மொத்த திரு நங்கைகளில் குறை கூறுவது தவறு.
தப்பு பண்ணுகிற நிறையபேர் ராஜவாழ்க்கை வாழும் போது இவங்க என்ன தப்பு செஞ்சாங்க..? எதுக்கு இந்த சமுகம் இவர்களுக்கு இவ்ளோ பெரிய இழிவை தந்திருக்கிறது ? இப்படி பிறந்தது இவங்க தப்பா ?
இவங்களுக்கு
மரியாதையும் அங்கீகாரமும், தராம அவங்களை இந்த நிலைக்கு கொண்டுவந்தது நம்
சமுகம்தானே சமுகத்தில் நாமும்தான் இருக்கிறோம் என்பதை மரவாதிர்கள்.

நானும் சிறு வயதில் இவர்ககளை கண்டு ஒதுங்கி இருக்கிறேன் இல்லையென்று சொல்லவில்ல, இதற்க்கு காரணம் எனது பெற்றோர்கள். அவர்களுக்கு போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை அப்போது ஆனா இப்போது அவர்களுக்கு நான் எடுத்துரைகின்றேன். மேலும் நமது குழந்தைகளுக்கு இவர்களைப்பற்றி தெளிவாக நாம் சொல்லி கொடுத்து இருக்கிறோமா ? இல்லை இனியாவது நாமும் நமது குழந்தைகளுக்கும் இவர்களை பற்றி புரியாத நபர்களுக்கும் எடுத்துரைப்போம்.
திருமங்கைகள் பற்றிய விழிப்புணர்வு அனைவரிடமும் வரவேண்டும். அவர்களுக்கு சமூகத்தில் ஒரு நல்ல இடம் அளிக்க வேண்டும் —

19 July 2012

கற்பழித்தால் இனி ஆயுள் சிறை உறுதி: புதிய சட்டம்


புதுடில்லி: கற்பழிப்பு குற்றத்திற்கு எதிராக புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சர‌ை ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டத்தின்படிஇனி கற்பழிப்பு குற்றவாளிக்கு அதிகபட்சமாக ஆயுள் சிறையும், மேலும் பாலியல் குற்றம் இழைத்தால் 10 ஆண்டுகள் தண்டனை உறுதி.
பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக மத்திய அமைச்சரவைக்கூட்டம் இன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் டில்லியில் நடந்தது.இக்கூட்டத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த கடுமையான சட்டம் கொண்டுவர திட்டமிடபட்டிருந்தது. 

இதன்படி கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இச்சட்டத்தின்படி கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு அதிகபட்சமா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்க இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மீது ஆசிட் வீசினாலும் அதற்கு 10 ஆண்டுகளும். அதே நேரத்தில் பணியில் இருக்கும் பெண்களுக்கு எதிராக மேலதிகாரிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தால் 3 ஆண்டுகளும் தண்டனை உறுதி.

இலவசம் இலவசம் அனைவர்க்கும் இலவசம்

1) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
2) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புறசூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
4) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்கள் இதயத்தை எரித்துக்கரியாக ்கி கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
5) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்களேவைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
6) நீங்கள் பொது இடங்களில் பிடிக்கும்புகையின் நெடி ஆறுமணி நேரம் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்பாவி மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
7) நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பார்வையில் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் அந்த இழம்பிஞ்சுகளுக் கு ஆரம்ப பாடமாக அமைகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
8) நீங்கள் புகைப்பிடிப்பதை உங்கள் மனைவியர்கள் கூட விரும்பாமல் மனம் குமுறுவதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
9) நீங்கள் புகைப்பிடிக்கும ்போது உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட உங்களை வேண்டா வெருப்போடு பார்ப்பதைபற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா..?
10) நீங்கள் புகைப்பிடித்து விட்டு வீசி எறியும் சிகரட் துண்டினால் எத்தனை குடிசைகளும், கிராமங்களும் எரிந்துசாம்பலாகியுள்ளத ு என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
11) நீங்கள் புகைத்துக்கொண்ட ே உங்கள் செல்வக் குழந்தைகளுடன் கொஞ்சிவிளையாடி மகிழும் போது அந்த புகையின் நெடியால் உங்கள் பிஞ்சு மழலைகள் நஞ்சை உட்கொள்கிறார்கள ் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
12) நீங்கள் புகைப்பதால் உங்களை நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர ்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
13) புகைப்பிடித்து பாதிப்புக்கு உள்ளாகிஆண்டுதோறும் லட்சக்கணக்காண மக்கள்மரணத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
14) நீங்கள் புகைக்கும் புகையிலுள்ள நச்சுப்பொருள்கள ் உங்கள் இரத்தத்தோடு கலந்து இரத்த நாளங்களை அடைக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
15) இளமையில் புகைத்து, புகைத்து தள்ளிவிட்டுமுதுமையில் குரைத்து, குரைத்து அவஸ்தைபடுபவர்கள ை பார்த்து நீங்கள் சிந்தித்தது உண்டா..?
16) புகைப்பதை நிறுத்த முடியவில்லையே என்று நொண்டிக்காரணங்க ளை கூறுபவர்களால் இந்த உலகத்தில் வேற என்னதான் சாதிக்க முடியும்..? என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
17) புகைப்பிடிப்பது ஆபத்து என்று விளம்பரம் செய்துகொண்டே வளர்ந்து கொண்டிருக்கும் சிகரட் உற்பத்தியாளர்கள ையும், அதை புகைத்து, புகைத்து வீழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் நீங்கள் சிந்தித்தது உண்டா..?
18) புகைப்பிடிப்பது நாகரீகம் என்ற நிலை மாறி, புகைப்பிடிப்பது அநாகரீகம் என்ற உணர்வுக்கு இளைஞர்கள்மாறி வருவதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?
19) உலகில் முன்னேறிக்கொண்ட ிருக்கும் நாடுகள் பலவும் புகைப்பிடிப்பதற ்கு தடைபோட்டு சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார ்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா...?
20) புகைப்பிடிப்பதற ்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இப்போதாவது நீங்கள் சிந்தித்து பார்ப்பீர்களா.. ?

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன
அவைகளில் சில.........

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான்

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT