உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466
Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

19 December 2012

கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை

அனைவருக்குமே எலுமிச்சை எவ்வளவு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தப் பொருள் என்பது நன்கு தெரியும். அதிலும் இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை சருமத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் எளிதில் நீக்கவல்லது. இதற்கு காரணம் இதில் உள்ள சிட்ரஸ் அமிலம் தான். ஆகவே அவ்வளவு நன்மையைத் தரும் எலுமிச்சையைப் பயன்படுத்தி பல அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதிலும் இந்த எலுமிச்சையால் தயாரிக்கப்படும் ப்ளீச் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்தால், சருமத்தில் அழுக்குகளால் உருவாகும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம். இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றிற்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் அவர்கள், அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல் செய்து கரும்புள்ளிகளை நீக்குகின்றனர். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகு படுத்தினாலும், அதில் உள்ள கெமிக்கல் கலந்துள்ள சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்களே சிறந்தது. அதிலும் எலுமிச்சை இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். இப்போது அந்த மாதிரியான கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!! எலுமிச்சை ஸ்கரப் இந்த ஸ்கரப் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். பின்னர் ஒரு துண்டு எலுமிச்சையை முகம் மற்றும் மூக்கின் பக்கவாட்டிலும் நன்கு தேய்க்க வேண்டும். ஏனெனில் பொதுவாக கரும்புள்ளிகளானது முக்கின் பக்கவாட்டில் தான் தங்கியிருக்கும். ஆகவே குறைந்தது 3-4 நிமிடமாவது தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை அதிக அளவில் கரும்புள்ளிகள் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை செய்வது நல்லது. எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் கரும்புள்ளிகளை நீக்க சிறந்த முறைகளில் எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு சர்க்கரையுடன் கலந்து ஸ்கரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, முகப்பருக்களும் நீங்கிவிடும். எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு இது ஒரு பொதுவான கரும்புள்ளிகளை நீக்க செய்யப்படும் இயற்கையான ஸ்கரப் மற்றும் மாஸ்க். இதற்கு எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, நன்கு கலந்து கொண்டு, பின் அதனை முகத்திற்கு தடவி, காய வைத்து, பின் மாஸ்க் செய்தால் எப்படி உரித்து எடுப்போமா, அப்படி உரித்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, காட்டனில் நனைத்து, பின் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும். மேற்கூறியவாறு எலுமிச்சையின் சாற்றை பயன்படுத்தினால், கரும்புள்ளிகளை நீக்குவதோடு, வெள்ளைப்புள்ளிகளையும் நீக்கிவிடும். அதிலும் இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனை பெறலாம். முக்கியமாக எலுமிச்சை சாறு சருமத்தை வறட்சியடையச் செய்யும். ஆகவே எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தியப் பின்னர் மறக்காமல் மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.

07 August 2012

குறட்டையை தவிர்க்க சில வழிகள்!!!

யாருக்குமே பிடிக்காத ஒலி என்றால் அது குறட்டை ஒலிதான்! குறட்டை விடும் நபருக்கே... அவர் தூங்காத போது, அடுத்தவர் விடும் குறட்டை ஒலியை கேட்க சகிக்காது. அந்த வகையில் அனைவரையும் வெறுக்க வைக்கும் குறட்டையை தவிர்க்க சில யோசனைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது. உடல் பருமன், அலர்ஜியால் சுவாச குழாயில் ஏற்படும் சளி இவற்றால் குறட்டை வரும் வாய்ப்பு உள்ளது தூங்குவதில் பல ரகம் உண்டு. சிலர் அடித்து போட்டது போல் தூங்குவர். சிலர் மலர்களை போல் உறங்குவர். சிலர் கும்பகர்ணன் போல் தூங்குவர்.

குறட்டை விட்டு தூங்குவோர் இதில் ஒரு ரகம். பொதுவாக குறட்டை விடுவோர் பார்ப்பதற்கு நிம்மதியாக உலகை மறந்து உறங்குவது போல் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் குறட்டை அவர்களை ஒரு வழி செய்துவிடும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அருகில் படுத்திருப்பவர்களுக்கு தொல்லை தரும். இதனால் வெளிநாடுகளில் பல தம்பதியர்கள் விவாகரத்து வரை கூட சென்ற சம்பவங்களும் நடந்ததுண்டு.

தூக்க மாத்திரை மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் ஒருக்களித்து அல்லது கவிழ்ந்து படுத்து உறங்கினால் குறட்டை இருக்காது.

வழக்கமாக படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அல்லது பின்பாக படுக்கப்போகலாம்.

தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும்.

தொடர்ந்து குறட்டை விடுகிறவர் டாக்டரை அணுகுவது அவசியம். குறட்டை மூச்சடைப்பிலும் கொண்டு போய்விடலாம். குறட்டையால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும். தலைவலி வரும். உயர் ரத்த அழுத்தமும் ஏற்படலாம்.

பல் செட்டுடன் தூங்குவோருக்கு குறட்டை வரும் என்பதால் அதை கழற்றிவிட்டு தூங்குவது நல்லது.

உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும்

நீங்கள் அதிக உடல் எடை கொண்டவர் என்றால் அதற்கும் குறட்டைக்கும் தொடர்பு உள்ளது. எனவே உங்கள் உடல் எடையை சிறிது குறைத்தால் அது குறட்டையை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.
மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது. குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும்.

01 August 2012

குடிகார கணவனைத் திருத்துவது எப்படி?

ஒரு கணவன் குடிக்கத் தொடங்கும் போதே அவரிடம், இது உடம்புக்கு நல்லதல்ல. இதற்கு பதிலாக சத்தான உணவு வகைகளை சாப்பிட வலியுறுத்தலாம். மது அருந்தி விட்டு வரும் கணவருடன் சண்டை போடுவதை விட்டு, விட்டு எதற்காக குடிக்கிறார் என்பதை அறிய வேண்டும்.
சில கணவர்கள் அலுவலகம், தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாகவும் மது அருந்துவதுண்டு. அப்போது நீங்கள் அவர் பிரச்சினை என்ன என்பதை கேட்டறிந்து ஆறுதல் கூறலாம்.
இதை விட்டு விட்டு அந்த நேரத்தில் உங்கள் பிரச்சினைகளை மட்டும் கூறிக்கொண்டிருந்தால் மோதல்தான் வெடிக்கும். பெரும்பாலும் நண்பர்களால்தான் கணவர் மதுப்பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்.
அதனால் அவரது நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம். நல்லவர் -கெட்டவர் யார் என்பதை அறிந்து கெட்டவர்களுடன் நட்பு வைத்திருப்பதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.
உங்கள் கணவருடன் திறந்த மனதுடன் பழகுங்கள். அவர் திருந்துவதற்கு போதுமான கால அவகாசம் கொடுங்கள் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையுடன் அணுகுங்கள்.
நீங்கள் எவ்வளவுதான் சொல்லிப் பார்த்தும் மனுஷன் மதுப்பழக்கத்தை கைவிடவில்லையா, மருத்துவர்களிடம், அழைத்துச் செல்லுங்கள். உங்கள் கணவரின் போதைப் பழக்கத்துக்கான காரணம் அறிந்து, அதை மறப்பதற்கு மனரீதியான பயிற்சி அளிப்பார்கள். இந்த பயிற்சி பெற்றால் எப்பேர்ட்ட குடிகாரரும் திருந்தி விடுவதை காண முடிகிறது.
சிலர், போதை ஊசி, போதை பாக்கு, போதை மாத்திரை, கஞ்சாஸ போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.
இவர்கள் பெரும்பாலும் மன நோயாளிகளாகவே மாறி விடுகிறார்கள். இவர்களை மனரீதியான பயிற்சியாலும், முறையான மருத்துவ சிகிச்சை மூலமும் குணப்படுத்த முடியும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதிலும் போதைக்கு அடிமையாகி வரும் ஆண்களின் எண்ணிக்கை பெருகி இருக்கிறது. இதற்கு காரணம் திருமணம், பிறந்தநாள், விழா, பண்டிகை கொண்டாட்டம்...  என்று பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளிலும் மதுபானம் அருந்துவது ஒரு ஃபேஷனாக மாறி இருப்பதுதான். இந்த நிலை மாறினால் குடிகாரர்கள் பெருகுவது குறைய வாயப்புள்ளது.

28 July 2012

ஆண்களை விட அதிகமாக பெண்களை தாக்கும் நோய்

வாழ்க்கை முறையின் காரணமாக ஆண்களை விட பெண்களையே பக்கவாத நோய் அதிகமாக தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


உணவுப் பழக்க வழக்கம், வாழ்விடம், சுகாதாரம், உடல் உழைப்பு, உணர்ச்சி, சமூகம் சார்ந்த விஷயங்களை அடிப்படையாக வைத்து வெளிப்புற நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பக்கவாதம் என்பது வெறும் உடல் சார்ந்த பிரச்சினையாக மட்டும் இல்லாமல், நினைவுத்திறன் பாதிப்பு, சிந்தனைத் திறன் குறைவு, கவனிக்கும் திறன் குறைவு ஆகியவையும் பக்கவாதத்தின் ஒரு பகுதிதான் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரவு நேரங்களில் வேலை செய்வதால் மாரடைப்பு ஏற்படும்

பெரும்பாலன மக்கள் இரவு நேரங்களில் வேலை செய்பவராக இருக்கின்றனர். இரவு நேரத்தில் வேலை செய்வதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதென்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இரவு நேரத்தில் வேலை செய்து வருகின்றனர். இதில் 25 சதவீத மக்கள் மாரடைப்பில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதற்கு காரணம், இரவில் வேலை செய்வதால் பசி அதிகமாக உண்டாகிறது. பசி காரணமாக கிடைக்கும் உணவு பொருட்களை உட்கொள்வதால் உடலில் தேவைக்கும் அதிகமான கொழுப்புகள் சேர்கிறது.  எனவே உடல் எடை அதிகரிக்க செய்கிறது. பகலில் உறங்குவதாலும், சரியான உடற்பயிற்சியை மேற்கொள்ளாததாலும் மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.

நாம் உடலை வருத்தி இரவு நேரங்களில் வேலை செய்வதால் உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் குறைவதோடு செரிமான கோளாறு ஏற்படுகின்றது. அதிக நேரம் உறங்காமல் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, சர்க்கரை போன்ற நோய்கள் அதிகமாக தாக்குகின்றன.

19 July 2012

குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை

நம்மில் பலர் காலையில் எழுந்தவுடன்செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என2 எலும்புகள் உள்ளன. இந்த 2 எலும்புகளுக்கிட ையே உள்ள சப்தேலார் என்ற இணைப்பில் ஏற்படும் பிரச்னைகளால் குதிகால் வலி ஏற்படலாம்.
பாதத்தில் பிளான்றார்பேசியா எனப்படும் மெல்லிய சவ்வு உள்ளது.இது பாதத்தின் முன் பகுதியையும் பின்பகுதியில் உள்ள கேல்கேனியம் எலும்பையும் இணைத்து பாதத்தில் உள்ள வளைவுகளை (ஆர்ச்) தாங்குகிறது.
நாம் உட்கார்ந்து அல்லது படுத்திருக்கும் நிலையில் பாத வளைவுகளும் பிளன்றார்பேசியாவும் குறுகிய நிலையில் இருக்கும். நாம் எழுந்து நிற்கும் போது, உடல் பருமனாலோ அல்லது தவறான பாதணிகளை அணிவதாலோ பாதத்தில் உள்ள வளைவுகள் இழுக்கபடுகிறது. இவ்வாறு அது இழுக்க படுவதால் அதனை தாங்கும் பிளான்றார் பேசியா என்ற சவ்வானது அது இணைக்கபட்டுள்ள கேல்கேனியம் எலும்பிலிருந்து அறுக்கபடுகிறது. இவ்வாறு அறுக்கப்பட்டசவ்வை இணைக்கும் நோக்கத்தில் நமது உடலானது கால்சியத்தை அதன்மீது படிய செய்கிறது.
இவ்வாறு அதிகமாக படிந்த கால்சியத்தால்அங்கு வீக்கம் ஏற்பட்டு நரம்புகள் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. இந்த பிரச்னையில் குதிகாலின் அடிபகுதியில் வலி உணரபடுகிறது. எக்ஸ்ரேவில் இவ்வாறு அதிகமாக படிந்த கால்சியத்தை ‘கேல்கேனியல் ஸ்பர்’ எனகுறிப்பிடுவர். சில வேளைகளில் ‘ஸ்கையாட்டிகா’ போன்ற இடுப்பு பிரச்னைகளிலும் குதிகால் நரம்புகள் அழுத்தப்பட்டு குதிகால் வலி ஏற்படுகிறது.
இதற்கு முதலில் இடுப்பு பிரச்னையை சரிசெய்தல் அவசியம். குதிகால் வலி இடுப்பு பிரச்னையால் ஏற்படுகிறதா? அல்லது குதிகால் பிரச்னையால்ஏற்படுகிறதா என்பதை சில எளிய ஆய்வுகள் மூலம் கண்டறியலாம்.
சிகிச்சை முறை:
மேற்கண்ட குதிகால் பிரச்னையில் வலியையும், ரணத்தையும் குறைப்பதற்கு சைலீசியா லைக்கோபோடியம் போன்ற ஹோமியோபதி மருந்துகள்மிகுந்த பலனளிக்கிறது. பிஸியோதெரபியில் அல்ட்ராசவுண்ட், ஷாட்வே டைய தெரபி மெழுகு போன்ற சிகிச்சை முறைகள் பயன்படுத்தபடுகி றது. உடல் எடை குதிகாலில் விழுந்து ரணமாவதை தடுக்க மைக்ரோ செல்லுலார் (எம்.சி.ஆர்) ரப்பரால் தயாரிக்கபட்ட காலணிகளை அணிதல் நல்லது. கால் பாதத்தில் உள்ள விளைவுகளை பராமரிக்க பாத தசைகளுக்கான உடற்பயிற்சி செய்வது அவசியம்.

வளைகாப்பு நடத்துவது ஏன்?

கர்ப்பிணி பெண்கள் கடைசி மூன்று மாதங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டிய தருணம் . அக்காலத்தில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேப்பிலை காப்பு அணிவித்தனர்.

எதிலும் அவசரம் இல்லாமல் நிதானமாகச் செயல்படுவதற்குக் கை நிறைய கண்ணாடி வளையல் அணிவித்து அவை உடையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறினர். மேலும், கண்ணாடி வளையல் சத்ததிற்கு குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.

15 July 2012

பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்

பாம்பு கடித்துச் சிகிச்சை செய்ய தாமதமாகி கடிப்பட்டவன் மயங்கி விழுவதுண்டு. உயிரும் போய்விட நேரிடும். இந்நிலையில் கண்கள் மேல் நோக்கி இருக்குமானால் உயிர் போக கூடிய நிலையில் இருக்கிறார்கள் என அறியவும். கண்களானவை பக்கங்கள் நோக்கி இறங்குமானால் உயிரானது பக்கங்களில் ஒடுங்கி இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் கண்கள் கீழ் நோக்கி இருக்குமானால் உயிருக்கு கொஞ்ச நேரத்திற்கு ஆபத்து இல்லை என அறியலாம்.

விஷப்பரீச்சை

விசத்தினால் பாதிக்கப்பட்டு பேச்சு - மூச்சில்லாமல் இருப்பவனை உயிர்ப்பரீட்சை செய்து பார்ப்பது எப்படி.

கடிப்பட்டவர்களின் உடலில் பிரம்பு கொண்டு அடிக்கும் போது உடல் தடித்துவிட்டால் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சை செய்யலாம். மேலும் சுத்தமான குளிர்ந்த நீரை பாம்பு கடித்தவர்களின் மேல் கொட்டும் போது உடம்பு குளிர்ச்சியடைந்து ரோமம் சிலிர்த்தால் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சையை தொடரலாம்.

தலைமயிரைப் பற்றி இழுத்தால் வலியுடன் அசைவு ஏற்பட்டாலும் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சை செய்யலாம். தும்பை இலை - 10 கிராம். அகத்தி இலை - 10 கிராம். முருங்கை இலை - 10 கிராம். பெருங்காயம் - 10 கிராம். வசம்பு - 10 கிராம். உள்ளி - 10 கிராம். மிளகு -10 கிராம். இவைகளைத் தட்டி மூக்கிலும் காதிலும் விட உணர்வு வருவதுடன் விஷம் இறங்கும்.

வெற்றிலை - 10 கிராம். தும்பை இலை - 10 கிராம். அகத்தி இலை - 10 கிராம். பெருங்காயம் - 10 கிராம். வசம்பு - 10 கிராம். மிளகு - 10 கிராம். இவற்றுடன் சிறு குழந்தை சிறுநீர் விட்டு தட்டிப்பிழிந்து சாறு எடுத்து காதிலும் மூக்கிலும் நசியம் செய்ய விஷம் நீங்கும்.

தலை ரோமத்தைக் கருக்கி பசு வெண்ணெயில் குழப்பி கடித்த இடத்தில் நன்றாகத் தடவவேண்டும்.

மேலும் அம்மாம் பச்சரிசி - 10 கிராம்
தக்காளி வேர் - 10 கிராம்
நாயுருவி வேர் - 10 கிராம்
இவைகளைச் சிறுநீர் விட்டரைத்துக் கடிவாயில் பூசி வர விஷம் அறவே நீங்கும். அவதி அகலும்.


ஆடு தீண்டாப்பாளை வேர் - 30 கிராம்
கவுதும்பை வேர் - 30 கிராம்
வெள்ளெருக்கு வேர் - 30 கிராம்
மருக்காரை வேர் - 30 கிராம்
இவற்றைச் சிறுநீரில் ஊறவைத்து அரைத்து கடிவாயில் பூசி வர விஷம் நீங்கும்.

வசம்பு, வெள்ளைப்பூண்டு, நல்லதாளி, நிலப்பனங்கிழங்கு,திப்பிலி, வெள்ளைக் காக்கண வேர்ப்பட்டை இவை சம அளவு எடுத்து, குப்பைமேனி சாற்றில் அரைத்துக் கொள்ளவும். கழற்சிக்காயளவு உள்ளுக்குக் கொடுக்கவும். அதனையே மேலே தடவவும்.

நாள்பட்ட விஷத்திற்கு மருந்து
வெள்ளெருக்கன் வேர் - 20 கிராம்
சிறியா நங்கை வேர் - 20 கிராம்
வெள்ளைக் காக்கணம் வேர் - 20 கிராம்
நன்றாக அரைத்து 50 கிராம் நல்ல வெல்லத்துடன் சேர்த்து அரைத்து, 3 பாகமாக்கி 3 வேளை தினசரி சாப்பிடவேண்டும். குருவை அரிசிச் சாதம், புளியற்ற ரசம் (மிளகு ரசம்) சாப்பிடலாம். 3 நாள் 9 வேளை மருந்தில் நாள்பட்ட விஷம் அறவே நீங்கும்.



தினதகவல் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் krkinvites@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

13 July 2012

வயிற்றுவலியில் இருந்து விடுபட

வலி என்று பொதுவாக எடுத்துக் கொண்டால் உடல் வலி, முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி, முழங்கால்வலி, வயிற்றுவலி, கண்வலி, காதுவலி என்ற எல்லா வலிகளையும் வலிகள் என்றுதான் கூறுவார்கள்.

அதில் வயிற்றுவலி என்பது வயிறு அல்லது உணவுக் குழலில் ஏற்படும் வலியைக் குறிக்கும். வயிற்றுவலி வந்தவுடன் கிராமப் புறத்தில் இருப்பவர்கள் உடனே டாக்டரிடம் ஓடமாட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்த மண்வாசனை மருத்துவத்தை செய்து பார்ப்பார்கள். சாதாரண வலி என்றால் இந்த மருத்துவத்திற்கே கட்டுப்பட்டு விடும். கிராமப்புறத்தில் வயிற்று வலிக்கு என்னென்ன மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டால் உங்களுக்கும் அவசர காலத்தில் உதவும்தானே.

அதற்கு முன் எத்தனை வகையான வயிற்றுவலி உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்:

1. வயிற்றில் குடல்புண் இருந்தால் வயிறுவலிக்கும்.
2. உணவு செரிக்கவில்லை என்றால் வயிறுவலிக்கும்
3. காரம், புளி போன்றவை அதிகரித்தாலும் வயிறுவலிக்கும்.
4. அடிக்கடி தலைவலி வருகின்றவர்கள் அனாசின், சாரிடான் போன்ற மாத்திரைகளை உட்கொள்வதால் வயிறு வலிக்கும்.
5. கெட்டுப்போன உணவை உண்டதால் சிலருக்கு வலி ஏற்படும். இவற்றில் எது சரியான காரணம் என்பதைக் கண்டுபிடித்து மருத்துவம் செய்ய வேண்டும். காரணத்தைக் கண்டு பிடித்தவுடன் வயிற்றுப் புண் என்றால் புண்ணுக்குரிய மருந்து முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

மருத்துவம்

மருந்து_1
நற்சீரகம் _ 100கிராம், ஓமம் _ 100கிராம், இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து கற்கண்டு _ 100கிராம் சேர்த்து மூன்று வேளையும் சுடுநீரில் குடித்து வரவேண்டும். வயிற்று வலி பூரண குணமாகி விடும்.

மருந்து _ 2
அதிமதுரம் _ 50கிராம், இந்துப்பு _ 50கிராம், நவாச்சாரம் _ 50கிராம் மூன்றையும் பொடியாக்கி 3கிராம் அளவு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட குணமாகும்.

மருந்து _ 3
முருங்கையிலைச்சாறு _ 50 கிராம், நற்சீரகம் _ 50 கிராம் இரண்டும் கலக்கும் வரையில் அரைத்துக் குடிக்கத் தீராத வயிற்று வலிகள் தீரும். சில நாட்கள் தொடர்ந்து கொடுத்துவந்தால் நாள்பட்ட வயற்றுவலி குணமாகும்.

மருந்து _ 4
அருகம்புல் _ 100 கிராம், முற்றிய வேப்பிலை _ 100 கிராம் எடுத்து நன்கு இடித்து ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி சாறு எÊடுத்துப் பருகினால் வயிற்றுவலி நாட்பட்டதாக இருந்தாலும் 15_20 நாட்கள் குடித்து வந்தால் கண்டிப்பாகக் குணம் ஏற்படும்.

மருந்து _ 5
சுத்தமான களிமண்ணை மாவுபோல் பிசைந்து அடையைப் போல் தட்டி அடி வயிற்றின் மேல் கட்டி வைத்து சுமார் 3 மணி நேரம் கழித்து எடுத்துப் போட்டுவிடவேண்டும். வெயிலில் வேலை செய்து திரும்பியவர்கள் வயிற்று வலி நீர் இறங்கவில்லை என்று கூறினால் மல்லாந்Êது படுக்கவைத்து வயிறு முழுவதும் விளக்கெண்ணெய் பூசி வைத்தால் வயிற்றுவலி குறையும்.

அதிகமான கவலை, மனஉளச்சல், உணர்ச்சிவேகமான செயல்பாடுகள் போன்ற காரணங்களால் வயிற்றில் அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலங்களின் தாக்கத்தால் தான் பெரும்பாலும் வயிற்றில் புண்ணுண்டாகிறது. இதனால் பசி குறைதல், வயிற்றில் வலி, செரிமானம் குறைதல் போன்றவை ஏற்படுகின்றது.

வயிற்றுவலியை நிரந்தரமாகப் போக்குவதற்கு முற்றிய அத்தியிலை _ 100 கி, வேப்பிலை _ 100 கி, கீழாநெல்லி இலை _ 100 கி, குப்பைமேனி இலை _ 100 கி, ஆகியவற்றைச் சேகரித்து, நன்கு உலர்த்தி பொடித்து வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு மூன்று வேளையும், (உணவிற்கு முன்னால்) 5 கிராம் தூளை வாயிலிட்டுத் தண்ணீர் குடித்து வந்தால் வயிற்றுப்புண் ஆறி பூரண குணம் பெறலாம்.

முதுகுவலிக்கு குட்பை சொல்ல...

இந்தியாவில் எண்பது சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தலைவலி, காய்ச்சல் போல முதுகுவலியும் இருக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது இருபது வயதிலிருந்து முப்பத்தைந்து வயது வரை உள்ளவர்கள்தான். அதுவும் குறிப்பாக பெண்கள்தான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

இதனால் இவர்களின் ஆபீஸ் வேலை கெடுவதுடன், மனதளவிலும் பல பாதிப்புகளை அடைகிறார்கள். மனச்சோர்வு, ஒருவித அச்சம் இவர்களைத் தொற்றிக்கொள்கிறது. சமயத்தில் வாழ்க்கையே வெறுத்து விட்டதாகக் கூட முதுகுவலி வந்தவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அலுவலகத்திற்கு அதிகநாட்கள் விடுமுறை எடுக்க வேண்டியிருப்பதால், வேலை தொடர்பான பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளதும் மன உளைச்சலுக்கு ஒரு காரணமாகும்.

சிலருக்கு ஐம்பது, அறுபது வயதில் முதுகுவலி வரும். அது வயதாவதால் இருக்கலாம். அல்லது வேறு சில பிரச்னைகளாக இருக்கலாம். எதுவாகயிருந்தாலும் ஆரம்பநிலையிலேயே மருத்துவரிடம் போவது புத்திசாலித்தனம்.

முதுகுவலி ஏன் வருகிறது?

நம் முதுகெலும்பில் உள்ள டிஸ்க் நழுவிவிட்டது (டிஸ்க் ப் ரொலாப்ஸ்) என்றால்தான் முதுகுவலி வருகிறது.

நம் முதுகெலும்பு 33 முள் எலும்புகளால் ஆனது. ஒவ்வொன்றிலும் ஒரு தட்டுப்போன்ற வட்டு உள்ளது. இந்த வட்டுக்களிடையே பசை போன்ற ஜெல் இருக்கிறது. இந்தப் பசைதான் முதுகெலும்பில் அழுத்தத்தைத் தாங்கவும் உராய்வைத் தடுக்கவும் உதவுகிறது.

சிலர் தவறாக ஒரே நிலையில் உட்காரும் போதும் நிற்கும் போதும் முதுகெலும்புக்கு ஏற்படும் அழுத்தத்தால்தான் வலி உண்டாகிறது. இதன் அறிகுறியாக சிலருக்கு ஒரு காலிலோ இரு காலிலோ வலி இருக்கும். இடுப்பிலும் வலி தெரியும்.

இந்தத் தவறான நிலை பலநாள் தொடரும்போது ஏற்படும் அழுத்தத்தால் வட்டுக்களிடையே உள்ள பசை வெளியே வந்துவிடும். வெளிவந்த பசையானது மற்ற ஆதார உறுப்புகளுக்குச் செல்லும் நரம்புகளை அழுத்துவதால் கடுமையான வலியை உண்டாக்குகின்றது. இதைத்தான் டிஸ்க் நழுவிவிட்டது என்கிறார்கள்.

யார் யாருக்கு முதுகுவலி வரும்?

நீண்டதூரம் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், அதிகநேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், ஒழுங்கற்ற படுக்கை, சிலவகை மெத்தையில் ((உ_ம்) ஃபோர்ம் மெத்தையில் படுப்பவர்கள்), சக்திக்கு மீறிய கனமான பொருட்களைத் தனியே தூக்குபவர்கள், எந்தப் பொருளை எப்படித் தூக்குவது என்ற விவரம் தெரியாதவர்கள், சரியாக, நேராக உட்காராமல் நீண்ட நேரத்திற்கு ஒரு பக்கமாகவே உட்காருபவர்கள், அல்லது நிற்பவர்கள், மெனோபாஸ் காலப்பெண்கள் ஆகியோருக்கு லேசு லேசாக ஆரம்பிக்கும் முதுகுவலி, கண்டு கொள்ளாமல் விட்டால் அதிக வலியாக மாறி விடக்கூடும். ஆண், பெண் இருவருக்கும் உடலின் எடை கூடுவதும் முதுகுவலிக்கு முக்கியக் காரணமாகும். கூடுதல் எடை முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் வலி உண்டாகிறது. இதற்கு நடைப்பயிற்சி அவசியம். நடப்பது நம் முதுகு, இடுப்புத் தசைகளை உறுதியாக்கும்.

பெண்களுக்கு முதுகுவலி அதிகம் வருவது எதனால்?

பெண்களுக்கு மெனோபாஸ் (மாதவிடாய் முற்றிலும் நிற்கும் சமயம்) காலத்தில் முதுகுவலி வருவதுண்டு. இந்தச் சமயத்தில் பெண்களுக்குத் தேவையான கால்சியத்தை அளிக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் குறையும். இதனால்தான் வலி உண்டாகிறது. இதுதான் ஆஸ்டியோ ஃபொரோசிஸ் என்ற எலும்பு முறிவு நோய்க்கும் அறிகுறி. இதைத் தடுக்க பெண்கள் மெனோபாஸ் சமயத்திற்கு முன்பே மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து பிஸிஜி (ஹார்மோன் ரீபிபோப்மெண்ட் தெரபி) சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

முதுகுவலிக்கு குட்பை சொல்ல எளிய வழிகள் :

1. படுக்கையில் கவனம் தேவை :

நாம் படுக்கும் படுக்கையும் முதுகுவலிக்கு ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. ஃபோம் மெத்தைகள் முதுகுவலிக்கு ஒரு காரணம். அதனால் ஃபோம் மெத்தையில் படுக்கவே கூடாது. இலவம் பஞ்சு மெத்தைகள், பாய், ஜமுக்காளம் மிகவும் நல்லது. உயரம் குறைந்த தலையணை முதுகுவலியைக் குறைக்கும்.

2. நீண்டதூர இரு சக்கரவாகனப் பயணத்தைத் தவிர்த்தல் :

நீண்டதூரம் இரு சக்கரவாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் மேடு பள்ளங்களில் வேகமாகச் செல்லக் கூடாது. வாகனங்களில் முன்னால் அதிகம் வளையாமல் நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்ட வேண்டும்.

3. அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் சேரோடு சேராக உட்கார்ந்து இருக்காமல், அரைமணிக்கு ஒரு முறை ஒரு நிமிடம் எழுந்து நடந்து பின்னர் வேலையைத் தொடரவேண்டும்.

4. கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் உயரம் சரியாக உள்ள நாற்காலியில் அமர வேண்டும். சேரில் உட்காரும்போது எதிரில் உள்ள மானிட்டரின் நடுவில் உங்கள் மூக்குத் தெரிந்தால் நீங்கள் உட்கார்ந்திருப்பது சரியான உயரம்.

5. சேரில் உட்காரும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படி உட்காருங்கள். உயரம் போதவில்லை என்றால் பாதம் படியும்படி உயரமாக எதையாவது உபயோகியுங்கள். பாதத்தின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.

6. சேரில் உட்காரும்போது முழங்காலை விட இடுப்பு சற்று உயரமாக இருப்பது நல்லது.

7. நாம் உட்காரும்போது 40 சதவீத எடையை பின்கழுத்துப் பகுதி எலும்புகளும் இடுப்புப் பகுதி எலும்புகளும்தான் தாங்குகின்றன. அதனால் சேரில் நன்றாக நிமிர்ந்து இடுப்புப் பகுதி நன்கு சேரில் பதியும்படி உட்கார வேண்டும். தேவைப்பட்டால் முதுக்குப் பின் குஷன் பயன்படுத்தலாம்.

8. எந்தப் பொருளை எப்படித் தூக்க வேண்டுமோ அப்படித் தூக்க வேண்டும். இரண்டாக வளைந்து குனிந்து பொருட்களை எடுக்கவோ தூக்கவோ கூடாது. கால்களை அகட்டி, முதுகெலும்பை வளைக்காமல் தூக்கிப் பழகிக் கொள்ளுங்கள். கனமான பொருட்களைக் கைகயில் வைத்துக் கொண்டு அப்படியே திரும்பிப் பார்க்கக் கூடாது.

9. நடைப்பயிற்சி: உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சியில் முதுகு, இடுப்பு தசைகள் உறுதியாகின்றன. இது முதுகுவலி வராமல் தடுக்க உதவும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிக ஹீல்ஸ் உள்ள செருப்புகளைப் பயன்படுத்தவே கூடாது.

முதுகுவலியை சுலபமாகக் குணப்படுத்தி விடலாம். அதற்கு ஆரம்பத்திலேயே கவனம் தேவை. இதனால் அதிகம் செலவு செய்யவேண்டியதில்லை. பயப்படவும் தேவையில்லை.

லேசான வலிகளைக் கவனிக்காமல் விடும்போதுதான் அவை அறுவை சிகிச்சை வரை பெரிதாகி விடுகின்றன. இப்போது முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்வது எளிது. ஒரேநாளில் கூட எழுந்து நடக்க முடியும். இந்தநிலை நமக்கு ஏன்? முன்பே எச்சரிக்கையுடன் இருந்து கொண்டால் நல்லதுதானே. மேலே சொன்ன வழிகள் முதுகுவலியை வரவிடாமல் செய்யும் எளியவழிகள்தான். முயன்று பாருங்கள்.

மனச்சோர்விலிருந்து விடுபட

மனச்சோர்வு நோய்களிலேயே மிகக் கொடுமையானது சைக்கோடிக் மனச்சோர்வுதான்.

கவிதாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்த விபரீதம் நடந்தது. அவர் தற்கொலைக்கு முயன்றார் என்று மருத்துவமனையில் சேர்த்தார்கள். ‘திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லை. மாப்பிள்ளை பிடிக்கவில்லை’ என்றெல்லாம் பல காரணங்கள் சொல்லப்பட்டன.

அவரது உடம்பில் இருந்த ரத்தக் காயங்களைப் பார்த்த மருத்துவர்கள், அவருக்கு வந்திருக்கும் பிரச்னையை ஆழமாக அலசிப் பார்க்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான் தனக்குத்தானே ரத்தக் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு, அதைப் பார்த்து ரசிப்பதில் ஒருவித சந்தோஷத்தை கவிதா அனுபவித்து வந்த உண்மை தெரியவந்தது. கத்தியாலும் பிளேடாலும் அவர் தன் கைகளில் அறுத்துக் கொண்டிருக்கிறார்.

‘‘கவிதா ஒரு வகையான சைக்கோடிக் மனச்சோர்வால் (Psychotic Depression) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். உடனே சிகிச்சைக்கு உட்படுத்தினால்தான் அவரைக் குணப்படுத்த முடியும்’’ என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.

மனச்சோர்வு நோய்களிலேயே மிகக் கொடுமையானது சைக்கோடிக் மனச்சோர்வுதான். இவர்களிடம் அடிப்படையான சில குறைகள் வெளிப்படையாகத் தென்படும். சக மனிதர்கள் மீது வெறுப்பு, மற்றவர்களால் கைவிடப்பட்டு விட்டோமோ என்ற மனநிலை, இதனால் பிரச்னைகளில் இருந்து விடுபட உயிரை மாய்த்துக் கொள்வதுதான் ஒரேவழி என்ற எண்ணம் எழும். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த எண்ணத்தில் இருந்து விடுபட்டு, சகஜநிலைக்கு வந்தவர்கள்போல் காணப்படுவார்கள்.

சைக்கோடிக் மனச்சோர்வு, லட்சத்தில் நூறு பேருக்கு இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அந்த நூறு பேரில் ஒருவராக நாம் இருக்கக்கூடாது என்றால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடனே மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

அறிகுறிகள்:

நம்பிக்கைக்குரியவர்களே கைவிட்டது போன்ற உணர்வு அடிக்கடி எழுதல், மனதை ஒரு முகப்படுத்த முடியாமை, சின்னச் சின்ன விஷயங்களில் கூட தீர்மானம் எடுக்க முடியாமை, சுற்றியிருப்பவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழகமுடியாத நிலை, பொழுது போக்குகளில் ஆர்வமின்மை, யாரோடும் ஒத்துப் போகாமல் எதையும் எதிர்க்கும் மனப்பான்மை, அமைதியின்மை, எரிந்து விழுதல், பசியின்மை, பாலியலில் ஈடுபாடின்மை, அடிக்கடி தலையில் பாரம், என்று இந்த நோய்க்கு பல அறிகுறிகள் இருக்கின்றன.

மூளையில் உள்ள செரட்டோனின் என்ற இரசாயனப் பொருளின் மாற்றத்திற்குத் தக்கவாறுதான் மனச்சோர்வு மனிதனைத் தாக்குகிறது. அந்த இரசாயனத்தை சமநிலையில் வைத்திருக்கக் கூடிய மருந்துகள், சிகிச்சைகள் இப்போது எல்லா நாடுகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

கூடியமட்டிலும் சில பயிற்சிகளை நாள்தோறும் கடைப்பிடித்துவந்தால் சைக்கோடிக் மனச்சோர்வு நோய் நம்மை அண்டாது பாதுகாக்க முடியும். அவற்றுள் சில:

1. உடற் பயிற்சிகள்:

காலையில் எழுந்ததும். பூனை தன் உடலை நீட்டி சோம்பல் முறிப்பதைப் பார்த்திருக்கிறோம். இதேபோல் நாமும் உடலை நீட்டி பயிற்சி செய்தால் மூட்டுக்களிலும் தசைகளிலும் உள்ள விரைப்புகள் நீங்கி, மூளைக்கு நிறைய ரத்தம் பாயும். சுறுசுறுப்புத் தானாக வரும்.

இது தவிர, ஸ்கிப்பிங், ஓடுதல், அதிகாலை நடைப்பயிற்சி ஆகியவை அவசியம்.

2. யோகா, தியானம்:

ஒருவருக்குப் போதிய நேரமும் விருப்பமும் இருந்து யோகா செய்தால் போதும், உளச்சோர்வு நோய் அருகில் வரவே வராது. ஏனென்றால் உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே இணையச்செய்வது யோகா பயிற்சி மட்டுமே.

அதேபோல், குளித்து முடித்தவுடன், கண்களை மூடிக்கொண்டு, மனதில் வரும் எந்தப் பொருளின் மீதும் மனதைச் செலுத்தி ஒருமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு சில நிமிடங்கள் தியானம் செய்வதால் மனதிற்குப் புத்துணர்ச்சியும், சிந்தனைத் தெளிவும் கிட்டும்.

3. உணவில் கட்டுப்பாடு:

எடை அதிகரிப்பும், உடல் பருமனும்தான் சைக்கோடிக் மனச்சோர்வு நோய்க்கு ஆரம்பகால நுழைவாயில்கள் (நோய் தாக்கிய பின்னர் உடல் இளைத்துவிடும் என்பது வேறு விஷயம்). அதற்குக் கட்டுப்பாடான உணவுதான் சிறந்த சிகிச்சை. காய்கறிகள், பழங்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். அரிசியில் செய்யப்பட்ட உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நெய், பாலாடைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

4. புகை, மது கூடாது:

புகை பிடிப்பதால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படும். அதனால் சைக்கோடிக் மனச் சோர்வு நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். இந்நோய் தாக்கப்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையாகி பல விபரீத முடிவுகளை எடுப்பது வாடிக்கையாகிவிட்டது. அதனால் இரண்டுமே முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

5. நிம்மதியான தூக்கம்:

ஒருநாளைக்கு 6 மணி நேரமாவது நல்ல தூக்கத்தில் இருக்க வேண்டியது அவசியம். களைத்துப்போன உடலுக்கும் மனதிற்கும் நல்ல தூக்கத்தால்தான் புத்துணர்ச்சி தரமுடியும். குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குப்போவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

6. வேலையில் அக்கறை:

செய்யும் வேலையில் அதிக அக்கறை எடுத்து ஒருமனத்துடன் செயல்பட்டால் மனச்சோர்வுக்கு இடமே இருக்காது. வேலை நேரத்தைத் திட்டமிடத் தெரியாதது, அளவுக்கு அதிகமான வேலைப் பளுவை இழுத்துப் போட்டுக்கொள்வது, மனச்சோர்வை தூண்டக்கூடியவை. இவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

7. போட்டி மனப்பான்மையைத் தவிர்த்தல்:

தேவையற்ற, முறையற்ற பேராசையையும் போட்டியையும் தவிர்க்க வேண்டும். போட்டி மனப்பான்மை வளர வளர, மனம் பலவீனப்படுவதோடு, எப்போதும் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சச்சரவுகளையுமே சந்திக்க வேண்டிவரும். இவைதான் பலருக்கு மனச்சோர்வு நோய் வரக் காரணம்.

8. சமுதாயத்தோடு ஒத்துப்போதல்:

நல்ல சமூக உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் இரு தரப்பிலும் நல்ல துணையை, தோழமையை உருவாக்கும். உறவுகளுடன் சேர்ந்து பொழுதுபோக்கு அம்சங்களில் கலந்துகொள்வது, இசை, பாட்டு என்று கேட்பதும், கற்றுக்கொள்வதும் சமூக உறவோடு கலப்பதற்கு உதவும்.

சைக்கோடிக் மனச்சோர்வு அளவிற்கு அதிகமாக இருக்கும்போது, நரம்பு மண்டலம் சிதைந்து விடும். அச்சம், சோர்வு, உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமை என்று தோன்றி பல விபரீத செயல்களுக்கு இட்டுச் செல்லும். அதனால், மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டவுடன், ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று, உடலையும் மனதையும் முழு செக்கப் செய்துகொள்வது பல வழிகளிலும் உதவக்கூடும்.

தூக்கமின்மை விரட்டுவது எப்படி

நல்ல சாப்பாடு, நண்பர்களுடன் அரட்டை, குழந்தைகளுடன் விளையாட்டு, இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை இருந்தும் இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன ஆகும்? நினைத்துப் பாருங்கள். வாழ்க்கை நரகம் தான்.

உடலில் நோய்கள் இருந்து தூக்கம் இல்லை என்றால் சமாளித்து விடலாம். நோய்களுக்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம் வராது. இது ஒரு அசாதாரண சூழ்நிலை. மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டால், தூக்கம் நன்றாக வரும். இப்படி எந்தக் காரணமும் இல்லாமல், தூக்கம் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அவசியம். தூக்கம் வராததற்கு பத்து காரணங்கள் உண்டு என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது.

1. தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம் :
ஒரு மனிதனுக்கு தினமும் எத்தனை கலோரிச் சத்து உணவு தேவைப்படும் என்பதற்கு ஒப்பான கருத்து இது. இதற்குச் சரியாகப் பதில் சொல்வது கடினம். அதுபோல்தான் தூக்கமும். தூக்கம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஒருநாளில் எட்டு அல்லது குறைந்தபட்சம் ஆறுமணி நேரத் தூக்கம் அவசியம். இந்த நேரம் குறைந்தால், இதய நோய் அல்லது கான்சர் வர வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறது அமெரிக்க ஆராய்ச்சி. நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு இந்த ‘ரிஸ்க்’ அதிகம்.

தூக்கத்தால் அவதிப்படுபவர்கள் ஒரு வாரம் வரை தூங்கும் நேரத்தை ‘டயரி’யில் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளலாம். அதன்படி எழுந்திருக்கும் _ தூங்கும் நேரத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நோட் பண்ணுவது அவசியம். தூக்க ஊக்கிகள் பயன்படுத்தாமல் தூக்கம் வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்.

2. பிற்பகல் விழாவில் போர் அடிக்கும் பேச்சைக் கேட்டவுடன் தூக்கம்.
இது இயல்பாக வருவதுதான். ஆனால் ஒரு சிலருக்குத் தூக்கம் வராது. இமைகள் மூடியிருப்பது போல் தோன்றும். ஆனால், தூக்கம் கண்களைத் தழுவாது. தினமும் ஏழு மணி நேரம் மட்டுமே தூங்கும் பழக்கம் இருந்தாலும், மீதியிருக்கும் ஒருமணி நேரத்தை உடல் ஈடு செய்ய விரும்பும். சிலர் அதனை ஈடு செய்யும் விதமாகப் பகலில் குட்டித் தூக்கம் போடுவார்கள். இருப்பினும் நாள்பட்ட தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வயதானவர்களாக இருந்தால், டயாபடீஸ் உண்டாகும் வாய்ப்பும் அதிகம்.

3. தூக்கமின்மை இருந்தால், சீக்கிரம் படுக்கச் செல்ல வேண்டும்.
பொதுவாக தூக்கமின்மைக்கு நிறைய காரணங்கள். தூக்கம் வரவில்லையே என்பதற்காகப் படுக்கை அறைக்குச் செல்லவே சிலர் விரும்புவதில்லை. நமக்குத்தான் தூக்கம் வருவதில்லையே என்ற எரிச்சல். இது தவறு. மாறாக தூக்கமின்மைக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து, அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.

மது, காபி, மனஅழுத்தம், மனச்சோர்வு டென்ஷன்... உள்ளிட்டவையும் தூக்கமின்மைக்குப் பொதுவான காரணங்கள்.

என்ன செய்யலாம்?
வழக்கத்தை விட, ஒரு மணிநேரம் ‘லேட்’டாகப் படுக்கச் செல்லலாம். தூக்கம் வருவதற்கு உரிய சில எளிய பயிற்சிகள் மேற்கொள்ளலாம். உதாரணமாக எண்களை மனதிற்குள் சொல்வது, எளிதான மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவது...
சுவாரஸ்யமில்லாத புத்தகங்கள் படிப்பது..,

படுக்கச் செல்லுமுன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம். இதன்மூலம் தசைகள் இலகுவடையும். உடல்சூடு குறையும்.

தொடர்ந்து தூக்கமின்மை இருந்தால், டாக்டர் அட்வைஸ்படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.

குட்டித் தூக்கம் : தூக்கமின்மை இருப்பவர்களுக்கு அவ்வப்போது ‘குட்டித் தூக்கம்’ வரும். இதனால் ஓரளவு சமாதானம் அடையலாம். இரவு ‘ஷிஃப்’டில் வேலை செய்பவர்களுக்கு, தூங்குவதற்கு வாய்ப்பில்லை. அதனால் குட்டித் தூக்கம் போடுவதில் தவறில்லை. அதற்காக, பலமணி நேரம் ‘குட்டித் தூக்கம் போடாமல் இருப்பது நல்லது.

தூக்கமின்மை இருந்தும், பணிகள் பாதிப்பதில்லை :
இரவில் இரண்டு மணி நேரத் தூக்கம் பாதித்தால், மறுநாள் உடலில் அசதி ஏற்படும். சுறுசுறுப்பாக இயங்க முடியாது. பெரிய இயந்திரங்களை இயக்குபவர்களாக இருந்தால், முடியாமல் போகும். டூ வீலர் அல்லது கார்களை ஓட்ட முடியாது. அதனால் ஆபீஸ் போவதற்கு நண்பர்களின் உதவியைக் கேட்கலாம்.

தொடர்ந்து ஒருவாரம் வரை இப்படியே இருந்தால், உடல் சூடு அதிகரிக்கும். அதைத் தவிர்ப்பது முக்கியம்.

வாரத்தின் இறுதி நாட்களில் தான் தூக்கம் வருகிறது.
சிலர் கடுமையான வேலைகளுக்கு இடையில் அன்றாடம் ஒரு குட்டித் தூக்கம் மட்டும் போடுவது உண்டு. தூக்கமின்மை பாதிப்பு இருப்பவர்கள் தவிர, மற்றவர்களுக்கு இந்த ‘பிராக்டீஸ்’ மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

எத்தனை வேலைப்பளு இருந்தாலும் முடிந்தவரை தினமும் இரவில் தூங்குவது அவசியம். வேறு வழியில்லை என்றால், குட்டித் தூக்கம் போட்டாவது நிலைமையைச் சமாளிப்பது முக்கியம்.

படுக்கப் போகும் முன்பு உடற்பயிற்சி :
உடற்பயிற்சி காலையில் செய்யலாம். படுக்கப் போகும் முன்பு பெரும்பாலோர் உடற்பயிற்சி செய்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே இந்த ‘பிராக்டீஸ்’ செய்வதுண்டு. இருப்பினும், தூக்கத்துக்கும், ‘பெட் டைம்’, உடற்பயிற்சிக்கும் சம்பந்தமில்லை. தேவையேற்பட்டால், இரவுச் சாப்பாட்டுக்கு முன்பு எளிய உடற்பயிற்சி செய்யலாம். இருப்பினும் முடிந்தவரை காலையில் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்வதுதான் நல்லது.

தூக்கம் வருவதற்கான மாத்திரைகள் எடுப்பது :
தூக்கமின்மை நிரந்தர நோயாக மாறுவதற்கு முன்பு மாத்திரைகள் எடுப்பது நல்லது. தவறில்லை. ஆனால், டாக்டர்கள் அட்வைஸ் அவசியம். ஒருசில மாத்திரைகள் வீரியம் மிகுந்ததாக இருக்கலாம். இதன் காரணமாக பக்க விளைவுகள் (வாந்தி, தலைவலி, சோர்வு) ஏற்படும். அதனால் கவனம் தேவை.

தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாதல் :
இது ஆபத்து.

இரவில் லேட்டாகத் தூங்கி அதிகாலையில் எழுவது :
நேரமில்லை. நான்கு மணிநேரம் மட்டுமே தூங்க முடியும் என்ற நிலை இருந்தால், இரவில் லேட்டாக (இரண்டு மணி) தூங்கி, அதிகாலை ஆறு மணிக்கு எழலாம். இரண்டு மணி வரை தூக்கம் வருவதற்குரிய வழிகளில் இறங்கலாம். (போரடிக்கும் புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது இப்படி...)

தூக்கமின்மை இருப்பவர்கள் டாக்டரிடம் உங்களுக்கு இருக்கும் பாதிப்புகளை ஒளிவு மறைவின்றிச் சொல்லிவிட வேண்டும். குறிப்பாக,

ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் :
தூக்கமில்லாமல் இருந்தால், காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். கால்களில் நமைச்சல் இருக்கும். ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவை டெஸ்ட் செய்வது முக்கியம்.

மூச்சு விடுவதில் சிரமம் :
தூங்கும் போது மூச்சுவிட சிரமப்படுவார்கள். குறட்டைச் சத்தம் அதிகம் கேட்கும். உடல் எடை அதிகமிருப்பவர்களுக்கு இந்த ‘ரிஸ்க்’ அதிகம்.

மனச்சோர்வு :
இரவில் தூங்காமல் இருந்தால் மறுநாள் உடல், மன சோர்வு ஏற்படும்.

தைராய்டு சுரப்பதில் பிரச்னை :
இந்த அறிகுறி தெரிந்தால் உடனே டாக்டரிடம் செல்வது அவசியம். தைராய்டு ஸ்டுமுஹேங் ஹார்மோன் அளவு அதிகமிருந்தாலும் தூக்கம் வராது.

வழுக்கை வராமல் இருக்க சில வழிகள்

தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். ‘வந்தால் மலை, போனால் மயிர்’ என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன? முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது. முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், குய்யோ, முறையோ என்று கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருகிறது? முடி விஷயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும்? அதைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது பற்றி விளக்கமாகச் சொல்கிறார் டாக்டர் முகேஷ் பாத்ரா. மும்பை மருத்துவரான பாத்ரா, கீழ்ப்பாக்கத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஹோமியோபதி மருத்துவத்தில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். இன்டர்நெட்டிலேயே ஐந்து லட்சம் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை அளித்து லிம்கா உலக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் டாக்டர் பாத்ரா.

‘‘நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. யூமெலானின் (eumelanin) என்கிற பொருள்தான் நம் தலைமுடி கறுப்பாக இருப்பதற்குக் காரணம். பொமேலானின் (Pheomelanin) என்கிற பொருள் அதிகமாக இருந்தால், தலைமுடி செம்பட்டையாக இருக்கும். இந்தியர்களின் ரத்தத்தில் யூமெலானின் அதிகமாக இருப்பதால், நம் தலைமுடி கறுப்பாகவே இருக்கிறது.

நம் உடம்பில் எத்தனை முடி இருக்கிறதோ, அவற்றுக்கான அடித்தண்டு (follicies), தாயின் வயிற்றில் இருக்கிற போதே தோன்றி விடுகிறது. பிறப்பிற்குப்பின் புதிய முடி வளர்வதற்கான அடித்தண்டு எதுவும் தோன்றுவதில்லை. ஒவ்வொரு அடித்தண்டிலும் இருபது முதல் முப்பது முறை முடி வளரும். ஒருமுறை முடி வளர்ந்தால், மூன்றிலிருந்து ஐந்து வருடம் வரை இருக்கும்.

தலையில் வளரும் முடி ஒரு மாதத்துக்கு அரை இன்ச் என்கிற ரீதியில் வளரும். வெயில் காலத்தில் வேகமாக வளரும். தலைமுடியின் வளர்ச்சி பதினைந்திலிருந்து முப்பது வயதுக்குள் அதிவேகமாக இருக்கும்.

ஒரு மாத காலத்துக்குள் ஐம்பதிலிருந்து நூறு முடி உதிர்ந்தால், அது நார்மலான விஷயம்தான். அதனால் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை. இதேபோல தலைவாரிக் கொள்கிற நேரத்தில் 15_20 முடிகள் உதிரலாம். பெண்கள் குளிக்கும்போது முப்பது முடிவரை உதிரலாம். தலைவாரிக் கொள்ளும்போது 40 முதல் 60 முடிகள் உதிரலாம்.

தலைமுடி உதிருவதில் மூன்று முக்கியமான நிலைகள் உண்டு. முதலாவது, அனெகன் (ணீஸீணீரீமீஸீ). இந்த நேரத்தில் முடியின் அடித்தண்டு நம் உடம்பில் நன்றாகக் காலூன்றி வளரும். இரண்டாவது நிலை, கேடகன் (சிணீtணீரீமீஸீ). நன்கு வளர்ந்த முடி அதற்கு மேலும் வளராமலும், விழவும் முடியாத நிலையில் இருக்கும். மூன்றாவது, டெலகன். நன்கு வளர்ந்த முடி கீழே விழுந்த பருவம்தான் இந்த நிலை.

தலைமுடி இழப்பில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. எனினும், மூன்று முக்கியமான வகைகளை மட்டும் விளக்கமாகச் சொல்கிறேன்.

1. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை.

2. பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை.

3. அலோபேசியா ஏரியாட்டா.

ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை:
ஆன்ட்ரியோஜெனிக் அலோபேசியா என்று இதற்குப் பெயர். முப்பதிலிருந்து ஐம்பது சதவிகித ஆண்களுக்கு, முப்பது முதல் ஐம்பது வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்குப் பல காரணங்கள் உண்டு. வழுக்கை பரம்பரையாக ஏற்படுவது என்பது தவறான கருத்து. இதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி பலமிழந்து போகலாம். மனஉளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற நோய்கள் வந்தாலும் தலைமுடி உதிரும். சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான காரணம். கைகால் வலிப்பு நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளைச் சாப்பிடும்போது, சில வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும். சுடவைத்த தண்ணீரில் குளிப்பதாலும், தலையில் கண்டபடி டை அடிப்பதாலும்கூட முடிகள் உதிரலாம்.

நம் ரத்தத்தில் டிஹெச்டி என்று ஒரு பொருள் இருக்கிறது. இது ரத்தத்தில் அதிகமானால், முடி கொட்ட ஆரம்பிக்கும் என்று எல்லா மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை:
பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய கொட்டும் வாய்ப்பு உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி இழக்கலாம். பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம். நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய் நிற்கிறபோதும் தலைமுடி உதிரலாம்.

சில பெண்களுக்கு தைராய்டு சம்பந்தமான பிரச்னை உருவாகும்போதும் முடி உதிரலாம். இன்னும் சில பெண்களுக்கு ‘ஓவரி’யைச் சுற்றி ஏற்படும் நோய்களாலும், அதனால் ஏற்படும் ஹார்மோன் அதிகமாகவோ, குறைவாகவோ சுரப்பதாலும் முடி உதிரலாம்.

ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது, முடி உதிர்கிறது. உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். பெண்களுக்கு ஹேமோகுளோபின் எண்ணிக்கை பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.

கர்ப்பத் தடை மாத்திரைகளைச் சாப்பிடுகிற போதும், பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படலாம். நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட சில உணவு வகைகளையே மீண்டும் மீண்டும் சாப்பிடுவதனால், சில வகை சத்துகள் குறைந்துவிடுகின்றன. இதனாலும் முடி உதிர்கிறது.

அலோபேசியா ஏரியாட்டா:
வழுக்கைகளிலேயே மிக ஆச்சரியமான விஷயங்களை உள்ளடக்கியது அலோபேசியா ஏரியாட்டா என்கிற வழுக்கைதான். இளம் பருவம் முதல் எண்பது வயதுக்குள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தலையில் மட்டுமல்ல, உடம்பின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். தலையில் உள்ள முடி அதிவேகத்தில் உதிர ஆரம்பிக்கும். பதினைந்தே நாட்களுக்குள் தலை சொட்டை ஆகிவிடும்.

இப்படி திடீரென முடி உதிர்வதற்கான காரணம் வேடிக்கையானது. நம் உடம்பிற்குத் தேவையில்லாத, கெடுதல் தரக்கூடிய பாக்டீரியாக்கள் நம் உடம்பிற்குள் நுழைந்துவிட்டால், அதை அழித்துவிடுவது நம் உடலின் இயற்கையான அமைப்பு. உதாரணமாக, நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் நமக்குள் புகுந்தால், அதைக் கொல்வது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் வேலை. ஆனால், சில சமயங்களில் நம் உடலில் உள்ள முடிகள் தேவையில்லாதவை; அவற்றை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று நம் உடல் தவறாக நினைப்பதால், நம் உடலில் உள்ள முடிகள் எல்லாம் உதிர்ந்துவிடுகின்றன.

என்ன மருந்து?
ஹோமியோபதி மருத்துவத்தில் எல்லோருக்கும் ஒரே மருந்து என்று சொல்ல முடியாது. நோயின் தன்மை, நோயாளியின் உடல்நிலை, அறிகுறிகள் போன்ற விஷயங்களை வைத்துத்தான் மருந்து கொடுப்போம். இந்த மூன்று வகை நோய்களுக்கும் அறுவை சிகிச்சையோ, தலையில் முடிகளை நடுவதோ எல்லாம் கிடையாது. மருந்துகளின் மூலம், உடல் தன்மையை மாற்றுவதன் மூலம் தலையில் முடி முளைப்பதை நிச்சயமாக அதிகரிக்க முடியும். தலைமுடி பிரச்னை இருப்பவர்களுக்கு தனித்தனியாக நாங்கள் சிகிச்சை அளித்தாலும், என்னைத் தேடி வந்தவர்களுக்கு அந்தப் பிரச்னையிலிருந்து நிச்சயமான தீர்வைக் கண்டிருக்கிறேன்’’ என்கிறார் டாக்டர் பாத்ரா.

நன்றி - குமுதம்

இளம் வயதிலேயே தலை நரைத்துவிடாமல் இருக்க சில வழிகள்

இளநரை

இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும். பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும். வெண்ணெயுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இதே வெண்ணையைத் தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும். தலைமுடியின் வளர்ச்சிக்கும் கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் காயவைக்கவும். உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணெயில் வறுக்க வேண்டும். காய் நன்றாக கருகும்வரை வறுத்தால், எண்ணெய் நன்றாக கருநிறமாகிவிடும். இந்த எண்ணெய் தலைக்கு நல்லது. இளநரையைத் தடுக்கும். பித்தம் சமனமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓரிரவு ஊறப்போட்டு அந்தத் தண்ணீரைத் தலையில் தேய்க்கலாம். இளநரைக்கு நல்லது.

தலைக்குச் சாயம் (Hair Dye)

சுத்தமான தேங்காய் எண்ணெயில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், லோகபஸ்மம் (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) இவற்றைக் காய்ச்சி அந்த எண்ணெயை வடிகட்டித் தலைக்குப் பயன்படுத்தலாம். கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து அதன் சத்து முழுவதும் எண்ணெயில் இறங்கும்வரை காய்ச்சி இந்த எண்ணெய்யை தினசரி உபயோகிக்கலாம். இது பீஹ்மீ போலப் பயன்படும். கடுக்காய் காய்ச்சிய நீரை தலை கழுவ பயன்படுத்தலாம். மருதாணி இலையை நன்கு அரைத்து அதைத் தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது நரைமுடிக்கான சாயம்போல் பயன்படும். சிலமணி நேரம் கழித்துக் கழுவினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும். செம்பருத்திப் பூக்களை நிழலிலும் வெயிலிலுமாகக் காயவைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதனை நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம். மிகவும் எளிமையான ஒரு வழி அதிக கட்டியான தேயிலை நீரினால் தலையைக் கழுவுவதுதான். வாரத்தில் இரண்டுமுறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.

ஷாம்பூ (Shampoo)

அண்மைக்காலத்தில் வேதிப்பொருளால் உருவான ஷாம்பூகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது ஆயுர்வேத ஷாம்பூகள் அதிகமாக வருகின்றன. சோறுவடித்தெடுத்தபின் கிடைக்ளகும் கஞ்சிநீர் ஒரு நல்ல ஷாம்பூவாகும். அதைச் சீயக்காய்ப் பொடி அல்லது கடலைமாவுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். குழந்தையின் தலையில் தேய்க்க, கஞ்சியும் கடலைமாவும் சிறந்தது. தலைக்கோ உடம்பிற்கோ எரிச்சல் தராது. தாளி இலையை அரைத்தால் முட்டைக்கரு போன்று வழவழா என்று வரும். இதுவும் ஒரு நல்ல ஷாம்பூ. இதனைச் சீயக்காய்ப் பொடியுடன் கலந்து உபயோகித்தால் முடியில் அதிகமான எண்ணெய்ப் பிசுக்கு அகன்று நல்ல சக்தியை அளிக்கும். சீயக்காய் 2 பங்கு, சிறுபயறு 1 பங்கு, வெந்தயம் லு பங்கு எடுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது 1 தேக்கரண்டி பொடியைக் கஞ்சியுடன் சேர்த்து தாளி இலைச்சாறு கலந்து அல்லது முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்துப் பயன்படுத்தினால் ஷாம்பூவைப் பயன்படுத்துகின்ற பலன் கிடைக்கும்.

வழுக்கை (Baldness)

வழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள். அந்த இடத்தில் ஊருவதுபோல் தோன்றும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர் வளருவதை ஊக்கப்படுத்தும். ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி கருமை நிறம் அடைவதுவரை காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மசாஜ் செய்துவந்தால் முடிவளரும். ராஜவைத்தியம் ஒன்றும் இருக்கிறது. ஆனைத் தந்தத்தைப் பொடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம். ஆனைத் தந்தத்தைப் பஸ்மம் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்துப் புரட்டுவதும் உண்டு. இதற்கு ஹஸ்திதந்த மஷி என்று பெயர்.

அதிமதுரத்தைப் பொடித்து குங்குமப்பூ சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். முடி முளைத்துவிடும். இது முடி உதிர்தலையும் தவிர்க்கும். பொடுகை நீக்கும். நவீனமருத்துவத்தில் ஹைட்ரோ கார்ட்டிஸனான் மற்றும் ஸ்டீராய்டு ஊசிகள் தரப்படுகின்றன. அதிமதுரச் செடியில் கார்டிஸோனின் குணம் இருப்பதால் இவ்விளைவு ஏற்படுகிறதோ என்னவோ. ஊமத்தை விதைகள், அதிமதுரம், குங்குமப்பூ, பாலாடை இவற்றைத் தேங்காயெண்ணெயில் காய்ச்சி கருகும் வரைப் பயன்படுத்தவேண்டும். இந்தத் தைலமும் வழுக்கைப் பகுதிகளில் முடிவளரச் செய்கிறது. தத்தூர என்ற ஊமத்தை விஷத்தன்மை கொண்டது. எனவே விரல் நுனிகளால் எண்ணெயைத் தொட்டுத் தடவிய பிறகு கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும். குழந்தைகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம். த்ரிபலா க்ஷ£ரம் என்ற மருந்துண்டு. அதாவது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றை வாணலியில் போட்டு வறுத்து, நல்ல கருநிறம் அடைந்தவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்க்கலாம்.

முடி உதிர்தல் (Hair loss)

முடி உதிர்வதைத் தடுப்பதற்கு யஷ்டிமதுலேபம் என்ற மருந்து பயன்படுகிறது. அதிமதுரம் கடையில் கிடைக்கும். இதை மென்மையான தூளாக்கிக்கொள்ளவும். ஒரு பீங்கான் தட்டில் 100 கிராம் அளவு போட்டு தினமும் 100 மிலி பால் ஊற்றி வெயிலில் வைக்கவும். முதல்நாள் ஊற்றிய பால் காய்ந்த பிறகே மறுநாள் பால் ஊற்ற வேண்டும். ஈரமிருந்தால் மீண்டும் ஒருநாள் காய வைத்தபிறகு பால் விடவேண்டும். காலை வேளைகளில்தான் பால் ஊற்றவேண்டும். இரவில் பால் ஊற்றி காயாதிருந்தால் துர்வாடை வரும். இவ்விதம் ஏழு தடவை பால் ஊற்றிக் காய்ந்த தூளை அரை லிட்டர் நீலிபிருங்காமலக தைலத்தில் குழப்பி வைத்துக்கொண்டு தினமும் மயிர்க்கால்களில் தடவித் தேய்த்துவர கேசம் உதிர்தல் நிற்கும். கேசம் நீண்டு கறுத்து வளரும். மயிர்க்கால் வெடிப்பு, பொடுகு இவை நீங்கும்.

பிருங்காமல தைலம்

நல்லெண்ணெய் 1 லிட்டர்

கரிசலாங்கண்ணிச் சாறு 1 லிட்டர்

நெல்லிக்காய்ச் சாறு 1 லிட்டர்

பசுவின்பால் 4 லிட்டர்

அதிமதுரத்தூள் 60 கிராம்

கரிசலாங்கண்ணியைக் கையாந்தலை (கரியாகும் தலை) என்றும் கூறுவர். இதைக் கொண்டுவந்து அதிலுள்ள இதர புல் பூண்டுகளை அகற்ற தண்ணீ'ரில் நன்கு அலசி அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்கும் காலத்தில் அதையும் அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்காத காலத்தில் நல்ல நெல்லிமுள்ளியை வாங்கி விதை அகற்றிய பின் 250 கிராம் எடுத்துப் பெருந்தூளாக இடித்து 1லு லிட்டர் வென்னீரில் முதல் நாளிரவு ஊறவைத்து மறுநாள் நன்கு கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். அல்லது 1 கிலோ நெல்லி முள்ளியை (விதையுடனுள்ளது) 4 லிட்டர் தண்ணீரிலிட்டு 1 லிட்டர் மிகுதியாக கஷாயமாக்கிக்கொள்ளவும். அதிமதுரத்தை நன்கு இடித்து மெல்லிய தூளாக்கிக்கொண்டு பசுவின் பாலில் 4 மணிநேரம் வைத்து அம்மியிலிட்டு மிருதுவான கல்கமாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

நல்லெண்ணெய்யை இரும்புக் கடாயிலிட்டு நன்கு சூடேறும்வரை காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். பிறகு அதில் அதிமதுரக் கல்க்கத்தையும் சாறுகளையும் பாலையும் கிரமமாகப் போட்டுத் திரவாம்சம் சுண்டும்வரை அடி பிடிக்காமலும் கருகாமலும் கவனத்துடன் பிரட்டி விட்டுக்கொண்டு கல்க்கத்திலுள்ள ஈரம் (ஜலாம்சம்) அகன்று கல்க்கம் மொற மொற என்றானதும் இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.

கண், காது, மூக்கு முதலிய புலன்களை இயக்கும் நரம்புகளுக்குப் பலமும் குளிர்ச்சியும் அளிக்கக்கூடிய அப்யங்கத் தைலம், தினமும் தலைக்குத் தேய்த்து ஸ்நானம் செய்யச் சிறந்த ஸ்நான தைலம். அதிக மூளை வேலையுள்ளவர்கள் இதனால் அப்யங்கம் செய்து மூளைக் கொதிப்பு, ரத்தக் கொதிப்பு முதலிய நோய்களிலிருந்தும் பாதுகாப்பு பெறலாம். கேசங்கள் அடர்த்தியாகவும் அழகாகவும் கருமையுடனும் வளரும். மயிர் உதிர்தல், பொடுகு இவைகளைப் போக்கும்.

பேன் (Tics)

சில வீடுகளில் பெண் குழந்தைகளின் தலையில் உள்ள பேனை ஒழிப்பதற்குத் தாயார் படாத பாடுபடுவாள். பேனைக் கொல்ல ஏதாவது மருந்திருக்கிறதா என்று கேட்பாள். தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துத் தடவினால் பேன் அகலும். வெந்தயத்தை அரைத்து தேய்த்துக் குளித்தாலும் கற்பூரம் கலந்த நீரில் குளித்தாலும் பேன் மாறும். கேரளாவில் சில இடங்களில் மூக்குப் பொடியைத் தலையில் தேய்த்து விடுவார்கள். இரண்டு மணி நேரம் சென்ற பின் தலைக்குச் சீயக்காய் தேய்த்துக் குளித்து விடுவார்கள். பேன் அகன்றுவிடும். வெங்காயத்தை அரைத்து எலுமிச்சம் பழச்சாறு கலந்து மயிர்க்கால்களில் அழுத்தித் தடவி ஒரு மணிநேரம் கழிந்தபிறகு குளிப்பாட்டினால் பேன் இருந்த இடம் தெரியாமலே ஓடிவிடும். எந்தத் தீவிரமான மணமும் பூச்சிகளை விரட்டிவிடும். அதனால்தானோ என்னமோ பெண்கள் தலைக்குப் பூக்கள் சூடிக்கொள்கிறார்கள். இந்தப் பூக்கள் தலையில் இருக்கும்போது பேன் தொந்தரவு வருவதில்லை. சீதாப்பழ விதைகளை நசுக்கித் தலையில் தேய்த்துக்கொண்டால் பேன் வராது. சீதாப்பழ கஷாயம், ஊமத்தைஇலை கஷாயம் பயன்படுத்தலாம். கடலைமாவும் சேர்த்துக் குளிக்கலாம்.

பொடுகு (Dandruff)

இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறப் போடவும். காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரைமணிநேரம் வைக்கவும். பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவிவிடவும். கடைசியாகத் தண்ணீர்விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளித்துவிடவும். பொடுகு மறைந்துவிடும். பொடுகு மேற்கொண்டு வராமலிருக்க ஊமத்தையிலையால் காய்ச்சப்பட்ட துர்தூர பத்ராதித் தைலத்தைப் பயன்படுத்தவும். கேரளத்தில் சில பெண்கள் தேங்காய்ப்பாலைத் தலையில் தேய்த்துக் குளிக்கிறார்கள். இதனால் முடி நன்றாக வளருகிறது. எலுமிச்சம்பழத்தை உலரவைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். ஆலமரத்தின் விழுதையும் இதுபோல் பொடியாக்கிக்கொள்ளவும். இந்தப் பொடிகளை சம அளவு தேங்காய் எண்ணெயில் காய்ச்சவேண்டும். இந்த எண்ணெயை வடிகட்டி தலைக்கு உபயோகிக்கலாம். அருகம்புல், கடுக்காய், கரிசலாங்கண்ணி, மருதாணி, அதிமதுரம், கறிவேப்பிலை போன்றவற்றை தேங்காயெண்ணெயில் காய்ச்சினால் அது நல்லதொரு முடிவளரும் தைலம் ஆகும். வேப்பிலைப் பொடியைத் தலைக்குத் தேய்த்தும் குளிக்கலாம்.

தேவையற்ற முடியை அகற்றுவது (Removing unwanted hairs)

பழைய காலத்தில் வயதான பெண்கள் தேவையற்ற முடியை உடம்பிலிருந்து அகற்றுவதற்குச் சாம்பலையும் சர்க்கரையையும் பயன்படுத்துவார்களாம். என் பாட்டி சொன்ன விஷயம் இது. சர்க்கரையைக் காய்ச்சி அந்தப் பாகில் சாம்பலைக் கலப்பார்கள். இதனை முடியுள்ள பகுதியில் தடவி முடியைப் பிய்த்து எடுப்பார்கள். காஷ்மீரில் பெண்கள் வேறொரு வகையில் முடியை அகற்றுவார்கள். சாம்பலை களிமண் அல்லது உளுந்தமாவுடன் கலந்து கக்கம் மற்றும் மறைவிடங்களில் உள்ள முடியை அகற்றுவார்கள். இவ்வாறு எடுத்தபின் அந்த இடத்தில் முடி முளைக்காது என்கிறார்கள். குழந்தைகளுக்கு உள்ள மெல்லிய மயிர்களை எடுக்கவேண்டுமென்றால் கோதுமை மாவை உபயோகிக்கலாம். கோதுமை மாவைப் பிசைந்து அழுத்தமாகத் தேய்த்தால் மெல்லிய மயிர்கள் வந்துவிடும். மஞ்சளை அரைத்துத் தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் அது மயிர்களை அகற்றும் என்று சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் பலன் கிடைப்பதில்லை. Waxing மற்றும் Electrolysis சில நேரங்களில் நன்றாகப் பயன்படுகிறது.

சர்க்கரை நோயை தடுக்க வழிகள்

சர்க்கரை நோய் என்பது எது?

இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையில் உள்ள கணையம் (Pancreas) என்ற உறுப்புதான் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இந்த இன்சுலின்தான். ஒருவேளை, இன்சுலின் சுரப்பது குறைந்துபோனாலோ அல்லது நின்றுபோனாலோ சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதைத்தான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு என்கிறார்கள்.

புதிய ஆய்வுகள்!

மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சர்க்கரை நோய்க்கும் இதயம் தொடர்பான நோய்க்கும் (Cardiovascular disease CVD) உள்ள நெருக்கம் பற்றி புதிது புதிதாக ஆராய்ந்து வருகிறார்கள். பொதுவாக, இரத்தத்திற்கு வெளியே இன்சுலின் குளுக்கோஸாக மாறிய பின்னர்தான் ரத்த செல்களுக்குள் செல்லும். ஆனால், குளுக்கோஸின் அளவு கூடினால், ரத்த ஓட்டத்தில் உள்ள இன்சுலினை பயன்படுத்த முடியாமல் உடலானது பம்ப் பண்ணுவதால், சர்க்கரை நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால்தான் இதயநோய் (CVD) மாதிரியான நோய்கள் வருகின்றன. இன்சுலின் அளவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அநியாயத்திற்கு உயரும்போது ரத்த நாளங்களில் கொழுப்புகள் அதிகப்படியாக படிவதாலும் இதய நோய் வரலாம் என்கிறார்கள்.

மருத்துவ ஆய்வாளர்களின் ஆய்வுப்படி, நடுத்தர வயதுடையவர்களில் அதிக எடையுள்ளவர்களுக்குத்தான் (over weight) இன்சுலின் சுரப்பதில் தடையும் ரத்தத்தில் அதிகளவு குளுக்கோஸ§ம் இருப்பது தெரிய வந்துள்ளது.

இவர்களுக்குத்தான் ‘ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ராலும் (unhealthy cholesterol) உயர் ரத்த அழுத்தப் பிரச்னையும் இருக்கும். இதனால்தான் சர்க்கரை நோய் (diabetes), இதயநோய் (Heart disease), இதயத்தாக்கம் (stroke) போன்றவற்றிற்கான நோய் அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

கீழே உள்ள சில வழிமுறைகள், உடலில் இன்சுலின் சுரப்பதில் பிரச்னை இருந்தாலோ, மற்ற நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அவற்றை எதிர்த்துப் போராடி, சரிசெய்ய உதவும்.

1. நடவுங்கள்... டயாபடீஸை விரட்டலாம் :

அதிக எடை உள்ளவர்களுக்கும் உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலில் உள்ள உள்ளுறுப்புகளைச் சுற்றிலும் கொழுப்பு மறைந்திருக்கும். அதோடு இன்சுலின் சுரப்பதில் தடையும், இதயநோய் சம்பந்தப்பட்டதும் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி மிகமிக உயர்ந்த வழி.

முறையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எட்டு மாதத்திற்குப் பிறகு 8 சதவீத கொழுப்பு கரைந்து விட்டதாகவும், அடிவயிற்றில் உள்ள கொழுப்பு குறைந்து தொப்பையின் அளவு குறைந்ததையும் கண்டுபிடித்தார்கள். ஒரு நாளைக்கு 30 நிமிடம் என்று வாரத்திற்கு ஐந்து நாட்கள் நடப்பவர்கள் ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை உடல் எடையைக் குறைக்கமுடியும். 58 சதவீதம் சர்க்கரை நோய் அபாயத்தைத் தடுக்கமுடியும்.

ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி மிகமிக அவசியம். அதிகம் டைப்_2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு நான்கு மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்தால், மற்றவர்களைவிட இவர்களுக்கு இதயநோய் அபாயம் மிகமிகக் குறைவு.

2. காலை உணவைச் சாப்பிட மறக்காதீர்கள்!

காலையில் எழுந்ததும் காலை உணவை ஒழுங்காகச் சாப்பிடாதவர்கள் மற்றும் அடிக்கடி காலை உணவைத் தவிர்ப்பவர்களைவிட, ஒழுங்காகச் சாப்பிடுபவர்களுக்கு உடற்பருமனும் இன்சுலின் சுரப்பதில் தடையும் 35 முதல் 50 சதவீதம் வரை குறையும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால், காலை உணவை யாரும் தவறவிடாதீர்கள். குறிப்பாக நவதானிய உணவுகள் சேர்ப்பது நல்லது.

3. மகிழ்வான சூழல் : (Laugh it up)

பொதுவாக நன்றாகச் சிரிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் வர வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தியும், நல்ல மூடும் உருவாகும் என்றெல்லாம் முன்பே சொல்லப்பட்டன.

இப்போது, டைப்_2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் நன்றாக வாய்விட்டுச் சிரித்தால், சாப்பாட்டிற்குப் பிறகு Êஏறும் குளுக்கோஸின் அளவு மிகமிக குறைவு என்கிறார்கள்.

இந்நோய் உள்ளவர்களை இரண்டு தனித்தனி நாட்களில் பரிசோதித்துப் பார்த்து இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஒருநாள் சீரியஸான விரிவுரையைக் கேட்க வைத்திருக்கிறார்கள். இன்னொரு நாள் நன்றாக வாய்விட்டுச் சிரிக்கும் காமெடி நிகழ்ச்சியில் பங்குகொள்ள வைத்திருக்கிறார்கள். சீரியஸான விரிவுரையைக் கேட்ட நாளைவிட, காமெடி நிகழ்ச்சியில் கலந்து வாய்விட்டுச் சிரித்த நாளில் அவர்களின் குளுக்கோஸ் அளவு குறிப்பிட்ட அளவு குறைந்திருந்ததைக் காட்டியதாம்.

4. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்:

உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் அடிக்கடி மாறி மாறி, இதய நோய், இதயத் தாக்கம் என்று கொண்டுபோய் விடுகின்றன. ஆனால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் 44 சதவீத சர்க்கரை நோய் தொடர்பான தாக்கம் வராது என்கிறார்கள்.

சர்க்கரை நோய் வந்த பின்னர், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடுத்துக்கொள்ளும் சிரத்தையில் கொஞ்சமாவது அந்நோய் வரும்முன் காட்டினால் போதும். சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கலாம். சர்க்கரை நோயைத் தடுப்பது என்பது, அதனுடன் தொடர்புடைய இதய நோய்கள், கிட்னி பிரச்னைகள் வராமல் காப்பதற்குச் சமமானதாகும்.

நன்றி - குமுதம்

09 July 2012

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்


இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவித மான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண் டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய் களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்த மானசூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத் தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த் தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்த னைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்த கைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன.மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல் லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க் கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து கொள்ளல் இல்லாத சூழலில் உரு வாகும் மன அழுத்தம், சாதீய, மத, இன ரீதி யாக அழுத்தமானசூழலுக்கு உள்ளாகும் பொது மக்கள். என எந்த ஒரு துறையை எடுத் துக் கொண்டாலும், அல்லது எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதி யற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம் களையப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாக வும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள், எதிர்பார்ப்புகள் அதிகம் இல் லாதவர்கள், அவர்கள் எதையும் ஆனந்தத்து டன் பெற்றுக் கொள்ளும் தன்மையுடையவர் கள் எனவே அவர்களால் மன அழுத்தம் இல் லாமல் வாழ முடிகிறது. ஆனால் பெரியவர்கள் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதும், கிடைப்பதில் திருப்தி பெறாத நிலையையும் கொண்டிருப்பதால் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார் கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவை யெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். பிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாகரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, பரீட்சை, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும். புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதைமருத்துப் பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டி னுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.முதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம் அன்புடன் உரையாடி மன இறுக்கத்தைத் தணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவை யெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய் வறிக்கை. எல்லா பாதைகளையும் மெத்தைகளால் அலங்கரிப்பது இயலாது என்பதால் செருப்பு அணிகிறோம். அது போலவே மன அழுத் தத்தை உண்டாக்கும் காரணிகளை ஒழிப்பது என்பது இயலாத காரியம் ஆனால் நம்முடைய மனதை திறமையாகக் கையாள்வதன் மூலமாக மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும். மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு நம் முடைய மனதின் சிந்தனைகளை தூய்மைப் படுத்த வேண்டும். எதிர்மறைச் சிந்தனைகள் பெரும்பாலும் மன அழுத்தத்தையே அளிக் கின்றன. எனவே நல்ல சிந்தனைகளை வளர்த் துக் கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் கையாள முடியும்.

தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன. அமைதியான குடும்பச் சூழல் பெரும் பாலான மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல் களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றை அழிக்கும் இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குடும்பத்தின ரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும் முக்கியம்.

ஆவேசம், கோபம் இவை மன அழுத் தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதி யான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும். மன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வரும். குறிப்பாக மைக்ரேன் எனப்படும் ஒற் றத் தலைவலி, ஸ்ட்ரோக், எஸீமா உட்பட பல நோய்களை மன அழுத்தம் கொண்டு வருகிறது.தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் மிகப்பெரிய எதிரி. அது தாயை யும், கருவில் இருக்கும் குழந்தையையும் நேரடியாகப் பாதிக்கிறது என்கிறார் அமெரிக் காவின் மாயோ கிளினிக்ஸ் எனும் மருத்துவர் , எனவே தான் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல இசை கேட்பது என மனதை இலகுவாக வைத் துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படு பவர்களை இந்த மன அழுத்தம் எளிதில் பிடித்துக் கொள்கிறது. எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துபவர்கள் மன அழுத்தம் உருவாகும் சூழலை பெரும்பாலும் விலக்கி விடுகிறார்கள். செய்ய முடியாத வேலைகளை "முடியாது' என்று மறுத்து விடும் உள்ள உரம் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க மிகவும் அவசி யம். எல்லா வேலைகளையும் இழுத்துப் போடுபவர்கள் பிரச்சினையிலிருந்து தப்ப முடியாது. உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அழுத்தம் மனிதனுக்கு பல இன்னல்களைத் தருகிறது. சிறு சிறு அழுத்தமான சூழல்களைத் தவிர்க் காத போதோ, அல்லது தீர்க்காத போதோ அழுத்தம் அதிகரித்து பெரிய இன்னலுக்கு ஆளாக்கி விடுகிறது.

அழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல் பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறை, சிந்தனைகளினால் வருவது.நேர் சிந்தனை உள்ளவர்கள் எல்லாவற்றையும் நல்ல விதமாகப் பார்க்கிறார்கள். அதிக நேரப் பயணிக்க வேண்டியிருந்தால் அதிக நேரம் இசை கேட்க முடியுமே என்று நினைக்கக் கூடிய அளவுக்கு மனதை இலகுவாக வைத்திருக்க வேண்டும்."இந்த வேலை எனக்குப் பிடிக்கவேயில்லை..' அல்லது "என்னை யாருக்கும் பிடிக்கவில்லை' இது போன்ற சிந்தனைகள் பரிதவிக்க வைத்து மன அழுத்தத்துக்குள் இட்டுச் செல்கிறது.

கனக் குறைவு, முடிவுகள் எடுப்பதில் சிக்கல், ஞாபக மறதி, குழப்பம், எதிர் மறை சிந்தனைகள், தெளிவற்ற சிந்தனைகள், தவறான முடிவுகள், தப்பித்தல் முயற்சிகள் என மன அழுத்தம் மனதைப் பாதிக்கும் செயல்களைப் பட்டியலிடலாம்.தலைவலி, அஜீரணக் குறைபாடுகள், தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, உடல் வலி, நெஞ்சு வலி, சீரற்ற இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல், குறைதல், ஆஸ்த்மா, மூச்சுத் திணறல், தோல் நோய்கள், தாம்பத்தியக் குறைபாடுகள், புற்று நோய், அல்சர், சர்க்கரை நோய், என மன அழுத்தம் தரும் உடல் நோய்களும் ஏராளம்.இந்த மனம் உடல் சார்ந்த பாதிப்புகளினால் தன்னம்பிக்கைக் குறைபாடு, கோபம், எரிச்சல், சீரற்ற உணவு உண்தல், சீரற்ற தூக்கம், தனிமை விரும்புதல், கடமைகளைத் தவிர்த்தல், பதட்டம் உட்பட ஏராளமான செயல்களுக்கும் நம்மை அறியாமலேயே தள்ளப்பட்டு விடுகிறோம்.மன அழுத்தத்தை மருத்துவம் பல விதமாகப் பிரிக்கிறது. திடீரென நிகழும் ஒரு நிகழ்வினால் ஏற்படும் ஒரு மன அழுத்தத்தை அக்கியூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். இதன் காரணம் நமக்கு தெரிந்ததாகவே இருக்கும். இது விரைவிலேயே காணாமல் போய் விடுகிறது.தொடர் நிகழ்வுகளினால் ஏற்படும் மன அழுத்தத்தை எபிசாடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். அதிகப்படியான வேலை. ஏராளமான பணிகள், தினமும் தாமதாய் வருவதால் வரும் பிரச்சனை, அவசரம் போன்ற தொடர் காரணிகளால் வருவது இது.இயல்பிலேயே வறுமை, நீண்டகால வேலையின்மை, குடும்பசூழல், அவஸ்தையில் மாட்டிக் கொண்டது போன்ற சூழல் இவையெல்லாம் தரும் மன அழுத்தத்தை குரோனிக் ஸ்ட்ரெஸ் என்று அழைக்கிறார்கள்.ட்ராமிக் ஸ்டெரெஸ் என்பது இன்னொரு வகை. ஏதோ ஒரு அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வராமல் இருக்கும் நிலையே இப்படி அழைக்கப்படுகிறது. கணினித் துறையில் இந்த மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான அலுவலகங்கள் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இறுக்கமற்ற சூழலை குடும்பங்களில் குழந்தைகளிடம் உருவாக்க அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வறிக்கையில் கீழ்க்கண்டவை பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. தினமும் குழந்தைகளுடன் உரையாடுங்கள். அவர்களுடைய தினம் எப்படி செலவழிந்தது. என்னென்ன செயல்கள் நடந்தன என்றெல்லாம் உரையாடுங்கள். அழுத்தமான சு??ழல் இருப்பது போல உணர்ந்தால் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். உங்கள் பிரச்சனைகளை குழந்தைகள் மேல் எக்காரணம் கொண்டும் திணிக்காதீர்கள். அவர்களுக்கு குடும்பத்தின் தேவை மற்றும் அமைதியான வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்துங்கள்.குழந்தைகள் எதையாவது செய்யும் போது மனம் விட்டுப் பாராட்டுங்கள். அவர்களை அரவணைத்துச் செல்ல மறக்காதீர்கள். அவர்கள் இசை, பெயிண்டிங், நடனம் போன்றவற்றில் ஈடுபட தூண்டுங்கள்.நகைச்சுவை உணர்வுள்ள குழந்தையாக உங்கள் குழந்தையை வளர்க்க முயலுங்கள். அது இறுக்கமான சு??ழல்களை குழந்தைகள் சமாளிக்க பிற்காலத்தில் பயன்படும்.

குழந்தைகள் எப்போதும் எதிலும் முதன்மையாக வரவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கி விடும். எல்லோரும் முதலாவதாக வருவது நடப்பதில்லையே. விடுமுறைகள், மாலை வேளைகளை சற்று இலகுவாகவே வைத்திருங்கள். அதிகப்படியான கல்வியும் மன அழுத்தத்தை நல்கும் என்பதை மறவாதீர்கள். தோல்வியும் வெற்றியும் சகஜம் என்னும் மனநிலையைக் கொண்டிருங்கள் அல்லது எதிர்காலத்தில் குழந்தை தோல்விகளைச் சந்திக்கும் போது உடைந்து போகும் வாய்ப்பு உண்டு.உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக இருங்கள். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் தந்தை குழந்தை குடிக்கக் கூடாது என அறிவுரை சொல்வது பாதிப்பை ஏற்படுத்தாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதும், அவர்கள் பதின் வயது எட்டுகையில் நல்ல நண்பர்கள், உறவினர்களுடன் ஆரோக்கியமான நட்பு வைத்துக்கொள்ள தூண்டுவதும், உடற்பயிற்சிகள் செய்யத் தூண்டுவதும் மன அழுத்தத்தைக் குறைக்கும். மன அழுத்தம் சிலவேளைகளில் நாமாகவே கர்ப்பித்துக் கொள்ளும் தவறான சிந்தனைகளின் மூலமாகவும் வரும் என்பது கண்கூடு. தேர்வை நன்றாக எழுதிய மாணாக்கர் கூட மன அழுத்தத்துடன் திரிவது இதனால் தான்.எத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொண்டால் பிரச்சனைகள் பல காணாமல் போய்விடும். நல்ல நகைச்சுவை உரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். தசைகளை இறுக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நுரையீரலுக்கு சுத்தமான காற்றை கொண்டு செல்லும் எனவே மன அழுத்தத்தைக் குறைக்க சிரியுங்கள் என்கிறார் மனோ தத்துவ நிபுணர் லீ பெர்க். குடும்பங்களில் பிரச்சனைகள் வருவது சகஜம். கணவன் மனைவியரிடையே பிரச்சனை வரும்போது "உன்னால் தான் வந்தது' என்று பழியை மாறி மாறி சுமத்தாமல் "நமக்கு பிரச்சனை இருக்கிறது' எப்படி தீர்வு காண்பது எனும் கண்ணோட்டத்தில் பேச வேண்டும் என்கிறான் பிரபல அமெரிக்க உளவியலாளர் வில்லார்ட் எஃப் ஹார்லே. மன அழுத்தத்தை சூழ்நிலைகள் பத்து விழுக்காடும் நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம் என்பது தொன்னூறு விழுக்காடும் நிர்ணயிக்கின்றன என்கிறார் சார்லஸ் ஸ்விண்டால். எதையும் எதிர்கொள்ளும் மனநிலை கொண்டவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும் காரணம் இது தான்.பெண்களுக்கு வேலை, குடும்பம் என இரட்டை அழுத்தமான சூழல்கள் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதை சரியான முறையில் கையாள குடும்ப சூழல் அமைதல் அவசியம்.

அலுவலகத்தில் இறுக்கத்தைத் தளர்த்த சரியான திட்டமிடுதல், காலத்தை சரியாக அட்டவணையிட்டு பயன்படுத்துதல், அவ்வப்போது மூச்சை இழுத்து விடுதல், இடையிடையே ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், நேர் சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தல், முக்கியமான பணிகளை முதலில் முடித்தல், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனைக் கொண்டிருத்தல், அவ்வப்போது விடுப்பு எடுத்தல் இவை பயன்படும். மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.
* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

*கோப்பி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்?? என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.
* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
*சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.
* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் "மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது' என்று சொல்லப் பழகுங்கள்.
* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.
* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.
* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.
* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.
* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இந்தியாவில் 10 நிமிடத்துக்கு ஒரு பெண் மரணம்


அய்.நா.சபை சார்பில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன. கடந்த 2010ஆம் ஆண்டு அய்.நா.சபை இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வில் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் 57 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் மரணத்தை தழுவியது கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் பிரசவத்தின்போது 10 நிமிடத்துக்கு ஒரு பெண் இறந்து போவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கு காரணம் கிராமப்புறங்களில் போதுமான மருத்துவ வசதி இல்லாதது தான். பல கிராம அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், நர்சுகள் இல்லை. மேலும் கர்ப்ப காலத்தில் கிராமத்து பெண்கள் பலருக்கு சத்தான உணவுகள் கிடைப்பதில்லை. மேலும் பெண்களுக்கு பிரசவ வலி இரவு நேரத்தில் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனைகளில் சேர்க்க முடியாத சூழ்நிலையும் உள்ளது. இதனால் வேறு வழியின்றி பெண்கள் பலர் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அப்போது ஏதாவது சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட பெண்கள் உயிரை இழக் கும் நிலை ஏற்பட்டு வருகிறது. அய்.நா.சபை ஆராய்ச்சி யாளர் பிரடெரிகா கூறும் போது, இந்தியாவில் நகர்ப்புறங் களில் மட்டும்தான் மருத்துவ வசதி உள்ளது. கிராமப்புறங் களில் மருத்துவ வசதியை மேம்படுத்தினால் மட்டுமே பிரசவகால உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்றார்.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? அறிந்துகொள்ள

கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான்.  கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் ஒரு சிலருக்கு பெண் குழந்தையின் மீது விருப்பம் அதிகம். பெண் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்க்கிறீர்களா? உங்களின் உடல் அமைப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் கருவில்  உள்ள குழந்தை ஆணா, பெண்ணா?  என்பதை அறிந்து கொள்ளலாம்.
பளபளப்பான தோற்றம்
 கர்ப்பிணிகளின் சருமமும் முகமும் பளபளப்பாக இருந்தாலே கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தை தான் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட கேட்கலாம். கர்ப்பிணிகளின் கன்னக் கறுப்பு ரோஸ், அல்லது இளஞ் சிவப்பு நிறத்தில் பூரிப்பாய் இருக்குமாம். அதே போல் கர்ப்பிணிகளின் எடையும் சற்று அதிகமாக இருக்கும்.
வாந்தி, மயக்கம்
 கர்ப்பிணிகள் அனைவருக்குமே வாந்தி, மயக்கம் ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் கருவில் உள்ளது பெண் குழுந்தை என்றால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாம். ஆம் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது குறைவாக இருக்குமாம்.
இனிப்பு உணவுகள்
 பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு புளிப்பு தான் விருப்பமான உணவாக இருக்கும். ஆனால் பெண் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கு இனிப்பு உணவு என்றால் மிகவும் பிடிக்குமாம். கர்ப்பத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு இனிப்பு அதிக விருப்பம் என்பதால் தாய்க்கும் அது விருப்பமான உணவாக உள்ளதாக பிரசவம் பார்க்கும் பெண்கள் கூறுகின்றனர்.
இதயத்துடிப்பு அதிகம்
 கருவில் உள்ள குழந்தைகளுக்கு இதயத் துடிப்பு அதிகம் இருக்கும். ஒரு நிமிடத்துக்கு 140 முறை துடிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்கள் குழுந்தையின் இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 140 ஆக உள்ளதா சந்தேகமே வேண்டாம் அது பெண் குழந்தைதான் என்று அவர்கள் கூறுகின்றனர். 

05 July 2012

இந்தியாவில் 10 நிமிடத்துக்கு ஒரு தாய் இறக்கிறார்

மருத்துவ ரீதியாக நாம் பெரும் முன்னேற்றத்தை அடைந்து வருகிறோம் என்று பெருமைப் பேசிக் கொள்ளும் வேளையில், இந்தியாவில் பிரசவ கால மரணங்கள் அதிகமாகவே உள்ளன என்ற ஒரு ஆய்வு முடிவு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.


அதன்படி, ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு பெண் அல்லது ஒரு மணிநேரத்துக்கு 6 பெண்கள் என்ற விகிதத்தில் பிரசவத்தின்போது மரணமடைகிறார். உலகிலேயே பிரசவ கால மரணங்களில் முதல் இடத்தை இந்தியா தான் வகிக்கிறது.

கடந்த 2010ம் ஆண்டு மட்டும் 56,000 பெண்கள் பிரசவத்தின்போது உயிரிழந்துள்ளதாக ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் பின்தங்கியுள்ள சூடான், எத்தியோப்பியா, பங்களாதேஷ் நாடுகளை விடவும் இந்தியா பிரசவ கால மரணத்தில் முன்னணியில் இருப்பது கவலை கொள்ள வைக்கிறது.

23 June 2012

சரும நோய்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் பூண்டு

இந்திய சமையலறையில் முக்கிய இடம் வகிக்கும் பூண்டிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது என்பது எல்லோருமே அறிந்ததுதான். மருந்தும் மாத்திரையும் செய்யாத பல விஷயங்களை பூண்டு  எளிதாக செய்து விடும்.


தாய்மார்களுக்கு பால் சுரப்பது முதல், வயிறு உபாதைகள், சரும பிரச்சினைகள் என பலவற்றுக்கு பூண்டு மருந்தாக அமைகிறது.

சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு பூண்டு தீர்வை தருகிறது. பரு, படர்தாமரை, தேமல் போன்ற சரும பிரச்சினைகளுக்கு வெறும் பூண்டை பாதிப்பு உள்ள இடத்தின் மீது தேய்த்தால் விரைவில் சரும பிரச்சினை குணமாகும்.

கால் ஆணி எனப்படும் கால் பாதத்தில் ஏற்படும் புண்கள் பல்வேறு பிரச்சினைகளால் ஏற்படும். இதனால் பலர் நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள். ஆனால் இதற்கு எளிதான வைத்தியமே பூண்டுதான். இரவில் தூங்கும் போது புண்டை நசுக்கி கால் ஆணி மீது வைத்து கட்டிவிடுங்கள். ஒரு வாரம் இப்படி செய்தால் போதும். எங்கு ஆணி இருந்தது என்றேத் தெரியாமல் போய்விடும்.

வயிற்று உபாதை, கிருமி தொற்று போன்ற காரணங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு பூண்டை பால் அல்லது தண்ணீரில் வேக வைத்து சாப்பிடலாம். தீர்வு கிட்டும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் பூண்டுக்கு உள்ளது.

ரத்த அழுத்தத்தை உடனடியாக சீராக்கும் ஆற்றல் பூண்டுக்கு இருப்பதால் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுவர்கள் உணவில் பூண்டை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

உடலில் நோயை எதிர்த்துப் போராடும் ஆற்றல் நமது வெள்ளை அணுக்களுக்குத்தான் உள்ளது. ஒருவர் தினமும் 2 அல்லது 3 பூண்டுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதய நோய் உள்ளவர்களும், கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்களும் பூண்டை உணவில் அதிகமாக சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறைந்து மாரடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

பொதுவாக உணவில் பூண்டை அதிகம் சேர்த்து சமைப்பது வீட்டில் உள்ள அனைவருக்குமே நன்மை தரும். குழந்தைகளையும் பூண்டை சாப்பிட ஊக்கப்படுத்துங்கள். பூண்டு என்றாலே பிடிக்காது என்று கூறுபவர்கள், அதனை அரைத்து சமையலில் சேர்க்கலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT