பியூனோஸ் ஏர்ஸ்:2020-ல் ஒலிம்பிக்போட்டிகளை நடத்த டோக்கியோ தேர்வாகியுள்ளது.இதற்கான ரகசிய ஓட்டெடுப்பு நேற்று மாலை அர்ஜென்டினாவில் உள்ள பியூனோஸ் ஏர்ஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் குழு நடத்தியது. இந்த ஓட்டெடுப்பில் டோக்கியோ, இஸ்தான்புல் மற்றும் மாட்ரிட் ஆகிய நகரங்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இதில் டோக்கியோ தேர்வாகியுள்ளது. இது 125 வது சீசன் ஆகும்.இதன் மூலம் ஜப்பான், 2வது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ளது. ஏற்கனவே 1964-ல் ஜப்பான் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது 93 நாடுகள் போட்டிகளில் பங்கேற்று இருந்தது.1964-ல் ஜப்பானில் நடந்தபோது ஆசிய நாடு அப்போதுதான் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.1940-ல் டோக்கியோவில் நடத்த போட்டியிட்டது ஆனால் அப்போது அங்கு புகுஷிமா அணு உலை பிரச்சினை பெரிய தடையாக இருந்தது.
ஜப்பான் பிரதம் ஷின்ஷோ அபே கூறுகையில்.புகுஷிமா அணு உலை இங்கு இருந்தாலும் டோக்கியோ நகரம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பாதுகாப்பாகவே உள்ளது. அணு உலை, டோக்கியோவிலிருந்து 150 மைல் தொலைவில் உள்ளது.2011-ல் பூகம்பம் மற்றும் சுனாமி ஜப்பானின் வட-கிழக்கு பகுதிகளை தாக்கியது.ஆனால் அது போல இங்கு நடக்காது. டோக்கியாவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் புகுஷிமா அணு உலையால் எந்தவித கதிரியக்க நீர் கசிவும் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.