ஃப்ரான்ஸ் நாட்டை க்ரனோபல் இன்ஸ்டிட்யுட் ஆஃப் பாலிடெக்னிக்கை(IPN) சேர்ந்த கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஒருவரான, பியர் லமாத்ர் ஒஜே , வீட்டு சுவர்களை அலங்கரிக்கும் புது வகையான ஒரு வால் பேப்பரை (Wall paper )கண்டு பிடித்துள்ளார். இந்த சிறப்பு வாய்ந்த வால் பேப்பரானது நம் இணைய தளத்திலும் , கை பேசியிலும் வெளியாகும் வை ஃபை (WI-FI) மற்றும் (GSM) அலைகளை , நம் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் தடுக்கிறது. இதனால் நம்முடைய வை- ஃபை மற்றவர் திருடி பயன்படுத்த முடியாமல் போகிறது.இந்த வால் பேப்பருக்கு மெட்டா பப்பியே (METAPAPIER) என்று பெயரிட்டுள்ளனர்.