அய்.நா.சபை சார்பில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன. கடந்த 2010ஆம் ஆண்டு அய்.நா.சபை இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வில் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் 57 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் மரணத்தை தழுவியது கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் பிரசவத்தின்போது 10 நிமிடத்துக்கு ஒரு பெண் இறந்து போவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கு காரணம் கிராமப்புறங்களில் போதுமான மருத்துவ வசதி இல்லாதது தான். பல கிராம அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், நர்சுகள் இல்லை. மேலும் கர்ப்ப காலத்தில் கிராமத்து பெண்கள் பலருக்கு சத்தான உணவுகள் கிடைப்பதில்லை. மேலும் பெண்களுக்கு பிரசவ வலி இரவு நேரத்தில் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனைகளில் சேர்க்க முடியாத சூழ்நிலையும் உள்ளது. இதனால் வேறு வழியின்றி பெண்கள் பலர் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அப்போது ஏதாவது சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட பெண்கள் உயிரை இழக் கும் நிலை ஏற்பட்டு வருகிறது. அய்.நா.சபை ஆராய்ச்சி யாளர் பிரடெரிகா கூறும் போது, இந்தியாவில் நகர்ப்புறங் களில் மட்டும்தான் மருத்துவ வசதி உள்ளது. கிராமப்புறங் களில் மருத்துவ வசதியை மேம்படுத்தினால் மட்டுமே பிரசவகால உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்றார்.