திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இம் மாதம் 27-ம் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரை ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில், திருமணமான இளைஞர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என ஆட்சியர் விஜய் பிங்ளே தெரிவித்துள்ளார்.
இந்த முகாமில் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், சென்னை ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 1989 ஜூன் 27 முதல் 1994 டிசம்பர் 27-க்குள் பிறந்த திடகாத்திரமான இளைஞர்கள் பங்கேற்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்வு செய்யப்பட உள்ள பணிகள்
சிப்பாய் (டெக்னிக்கல்), நர்சிங் உதவியாளர்: இப் பணியிடங்களுக்கு இம் மாதம் 27-ம் தேதி ஆவணங்கள் சரிபார்ப்பும், 28-ம் தேதி உடற்கட்டு தேர்வும் நடைபெறுகிறது.
சிப்பாய் (டெக்னிக்கல்) பணியிடத்துக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நர்சிங் உதவியாளர் பணியிடத்துக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சிப்பாய் (பொதுப்பணி): இப் பணியிடத்துக்கான ஆவணங்கள் சரிபார்ப்பு (திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு) 28-ம் தேதியும், உடற்கட்டு தேர்வு 29-ம் தேதியும் நடைபெறுகிறது. இப் பணியிடத்துக்கு 45 சதவீத மதிப்பெண்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சிப்பாய் (எழுத்தர், ஸ்டோர் கீப்பர், டெக்னிக்கல் & டி.எஸ்.சி): இப் பணியிடத்துக்கான ஆவணங்கள் சரிபார்ப்பு இம் மாதம் 30-ம் தேதியும், உடற்கட்டுத் தேர்வுகள் ஜூலை 1-ம் தேதியும் நடைபெறுகிறது. இப் பணியிடத்துக்கு, கலை அறிவியல், வணிகவியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.