"சுப்ரமணியபுரம் துவங்கி, தற்போது நடித்துள்ள, "சுந்தரபாண்டியன் வரை, தான் நடித்த அனைத்து படங்களிலும், தாடி கெட்டப்பிலேயே நடித்துள்ளார் சசிகுமார். ஆனால், அடுத்த ஆண்டு தான் இயக்கி, நடிக்கவுள்ள ஒரு படத்திற்காக, முதன்முறையாக தாடி இல்லாமல் நடிக்கிறார். மேலும், தொடர்ந்து புதுமுக டைரக்டர்களின் படங்களிலேயே நடிக்க திட்டமிட்டிருப்பவர், தன் மூலமாக, குறைந்தது ஒரு பத்து இயக்குனர்களையாவது அறிமுகம் செய்ய, யோசித்து வருவதாக சொல்கிறார்.