புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, ஏழு ஆண்டுகளில், 49 முறை, இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பயணம் செய்துள்ள விவரம், தெரியவந்துள்ளது.
பிரதமர், துணை பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், ராணுவ அமைச்சர் ஆகியோர் மட்டுமே, விமானப் படை விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பயணிக்க முடியும். பிரதமருக்கு மட்டும், இதில் விலக்கு உண்டு.இந்நிலையில், அரியானா மாநிலத்தை சேர்ந்த, ரமேஷ் வர்மா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், "இந்திய விமானப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில், காங்., தலைவர் சோனியா, காங்., பொதுச் செயலர் ராகுல் ஆகியோர், பயணம் செய்ததன் விவரத்தை தெரிவிக்க வேண்டும்' என, மனு தாக்கல் செய்திருந்தார்.
ராணுவ அமைச்சகம் பதில்: சோனியா, ஏழு ஆண்டுகளில், 49 முறை, விமானப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் பயணித்துள்ளார். இவற்றில், 28 முறை, பிரதமர் மன்மோகன் சிங்குடனும், ஆறு பயணங்கள் அரசுத் துறை தொடர்பானவையும் ஆகும். காங்., பொதுச் செயலர் ராகுல், மூன்று ஆண்டுகளில், எட்டு முறை பயணித்துள்ளார். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.