உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

14 July 2012

காஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்


சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்கவைக்க வேண்டும். 
ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங்களையும், இர ப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 
அடுப்பை அணைக்கும்போது முதலில் ரெகுலேட்டர் வால் வை மூடி வீட்டுப்பிறகு அடுப்பி ன் வால்வை மூடுவது நல்லது.    
அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும். 
அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்போது கவனக் குறைவாக இருக்கக் கூடாது. கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற 
பொருள்கள், அடுப்பை அணைத்து வெளிவரும் எரி வாயுவினால் வாயுக் கசிவு ஏற்பட்டுத் தீ விபத்து ஏற்பட லாம். 
காஸ் ஸ்டவ் வைத்திருப்ப வர்கள் வீட்டில் உள்ளக் குழந்தைகள் காஸ் குழா யைத் திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காஸ் குழாயில் குழந்தைகள் விஷமம் செய் வதால் பல ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. 
அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு சிலி ண்டரை மாற்ற வேண்டும். 
சுய ரிப்ப்பேர் வேலை ஆபத்தானது. யாரையும் காஸ் உபகரணங்களை ப் பழுது பார்க்க அனுமதுக்கக் கூ டாது. விறபனையாளர்களிடமே இந்த பொறுப்பை விட்டுவிட வே ண்டும்.
மாற்று சிலிண்டர் இணைக்கும் போது பூஜை விளக்குகள், ஊதுவ த்தி அனைத்தையும் அணைத்துவி ட வேண்டும். மின்சார இணைப்பு கள் இயங்க கூடாது. 
ரப்பர் குழாயில் வெடிப்பு, துளை இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்துப் பார்க்க வேண்டும். 
காஸ் அடுப்பின் பர்னரை 10 நிமிடம் மண்ணெயில் ஊற வைத்துப் பிறகு பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்ய லாம். 
அடுப்பின் பர்னர்களை சல வை சோடா சேர்ந்த வெது வெ துப்பான் தண்ணீரில் 20 நிமிட ங்கள் ஊற வைத்து சுத்தப்படு த்தி உலரச் செய்த பிறகே பொருத்த வேண்டும்.
குரோமிய காஸ் அடுப்பு, ஸ்டவ் போன்றவற்றைச் சூடாக இருக்கும் போது துடைத்தால் பளிச்சென்று இருக்கும்.
பெயிண்ட் அடுப்பாக இருந்தால் சூடாக இருக்கும் போது நனைந்ததுணியால் துடைக்கக் கூடா து. திடீர் வெப்ப மாறுதலால் வண்ணம் மாறலாம்.
காஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதா க சந்தேகம் தோன்றினால் உடனடியாகக் கதவுகள், ஜன் னல்கள் அனைத் தையும் திற ந்துவிட வேண்டும். எரிந்து கொண்டிருக்கும் அடுப்பு, விளக்கு முதலியவற்றை அணைக்க வே ண்டும். சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேப்பு கேப்பினால் சிலி ண்டர் வால்வை அழுத்தி மூட வேண்டும். இது வால்விலிருந்து காஸ் கசிதைத் தடுக்கும்.
மண்ணெண்ணெய் ஸ்டவ்களைப் பயன்படுத்துபவர் அது எரிந்துக் கொ ண்டிருக்கும் போது அதற்கு எண் ணெய் ஊற்ற முயலக்கூடாது. ஸ்ட வ்வின் எல்லாப் பகுதிகளும் சூடேறி இருப்பதால் எண்ணெய் பட்டவுடன் திடீரென அது பற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு.
டாங்கில் எவ்வளவு மண்ணெண் ணெய் நிரப்ப வேண்டும் என்றா குறி யீடு எல்லா ஸ்டவ்களுலும் இருக்கு ம். அதற்கு மேல் மண்ணெ ண்ணெய் ஊற்றக்கூடாது.
இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஸ்டவ் திரிகளைச் சமன்படுத்தி உயரமாக இருக்கும் திரிகளை மட்டும் நறுக்கி விடவும்.  டாங்கில் மண்ணெண்ணெய் ஊற்றி ஒரு மணி நேரம் ஆனப் பின்பே புதிய ஸ்டவ்வை முதல் முறையாகப் பயன்படுத்த முடியும்.
நீரைத் தெளித்து அடுப்பை அணைப்பது தவறு. அப்போது வெளிப் படும் வாயு உடலுக்கு கேடு செய்யும்.


தினதகவல் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் krkinvites@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT