புதுடில்லி:"தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், உயரதிகாரிகள் ஆகியோர், மானிய விலையில், சமையல், "காஸ்' சிலிண்டர் பெறுவதை தவிர்க்க வேண்டும். சந்தை விலைக்கேற்ப, சிலிண்டர்களை வாங்குவதால், அவர்களுக்கு, பெரிய இழப்பு எதுவும் ஏற்பட்டு விடாது' என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
"சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், மானிய விலையில் வழங்கப்படும், சமையல், "காஸ்' சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்' என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தின.இதையடுத்து, "மானிய விலையில், குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஆறு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஒன்பதாக அதிகரித்தது.
இந்நிலையில், மானிய விலையில், "காஸ்' சிலிண்டர்களை வழங்குவதால், தங்களுக்கு, பெரும் இழப்பு ஏற்படுவதாகக் கூறும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், சில ஆலோசனைகளை முன்வைத்து உள்ளன.
இதுகுறித்து, பொதுத் துறை எண்ணெய் நிறுவனம் ஒன்றின், மூத்த அதிகாரி ஒருவர், கூறியதாவது:மானிய விலையில், ஆண்டுக்கு, ஒன்பது சிலிண்டர்கள் வழங்குவதால், ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஆண்டுக்கு, 3,000 ரூபாய் முதல், 4,500 ரூபாய் வரை, பலன் கிடைக்கும். இந்த இழப்பை, மத்திய அரசும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் தான், ஏற்க வேண்டும்.ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, இந்தத் தொகை, மிகவும் முக்கியமானது. அவர்களை பொறுத்தவரை, இது, கணிசமான தொகையே. இந்த மானியத்தை பெறுவதற்கான முழு தகுதியும், அவர்களுக்கு உண்டு.
ஆனால், முன்னணி அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், அமைச்சர்கள், உயரதிகாரிகளுக்கு, ஆண்டுக்கு, 4,500 ரூபாய் என்பது, பெரிய தொகை அல்ல. மேல்தட்டு மக்கள், குடும்பத்துடன் ஒருவேளை உணவு சாப்பிடுவதற்காக, ஓட்டலுக்குச் செல்லும்போது, இந்தத் தொகையை விட, அதிகம் செலவு செய்கின்றனர்.எனவே, மானிய விலையில், சமையல், "காஸ்' சிலிண்டர்களை பெறுவதை, அவர்கள் தவிர்க்க வேண்டும். தாங்களாகவே முன்வந்து, "மானிய விலை சிலிண்டர்கள், எங்களுக்கு வேண்டாம்' என்பதை, சம்பந்தப்பட்ட, "காஸ்' ஏஜன்சிகளிடம், அவர்கள் தெரிவிக்க வேண்டும். மானிய விலை சிலிண்டருக்கு பதிலாக, அவ்வப்போதைய சந்தை விலைக்கேற்ப, சிலிண்டர்களை அவர்கள் பெறலாம். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.