டி.டி.எச்.,-ல் வெளியிடப்படும் எந்த திரைப்படத்தையும் நாங்கள் தியேட்டரில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் கமலின் விஸ்வரூபம் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவது சிக்கலாகியுள்ளது. கமல் நடித்து, இயக்கி, ஹாலிவுட் பாணியில் பிரம்மாண்டமாய் தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். இப்படம் பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பாக டி.டி.எச்.,ல் வெளியிட கமல் முடிவு செய்துள்ளார். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு தெரிவித்தபோதும், தியேட்டர் உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கமல் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக கமல் தரப்பிலும், தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பிலும் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் கமல் தமது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. அதேபோல் தியேட்டர் உரிமையாளர் தங்களது முடிவில் பின்வாங்கவில்லை. இதனிடையே விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.-ல் வெளியிட் ஏர்டெல், வீடியோகான் போன்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தின் அவசரக்கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்டவர்களுடன் 80க்கும் மேற்பட்ட தியேட்டர் உரிமையாளர்களும் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் டி.டி.எச்.சில் வெளியிடப்படும் எந்த திரைப்படத்தையும் தியேட்டரில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் விஸ்வரூபத்தை ஒளிபரப்பினால் தியேட்டர்களில் அப்படத்தை திரையிடக்கூடாது என்றும், விஸ்வரூபம் மட்டுமல்லாது எதிர்காலத்தில் எந்த படமும் இதுபோன்று டி.டி.எச்.ல் ஒளிப்பரப்பபட்டால் அந்த படங்களையும் தியேட்டரில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தியேட்டர் உரிமையாளர்களின் இந்த முடிவால் விஸ்வரூபம் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.