"மின் உற்பத்தி, வினியோகத்துக்கான திட்டங்களை அமல்படுத்த, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, "சிட்டிசன் கார்டியன்' அமைப்பின் நிர்வாகி, ரவிச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' விசாரித்தது.மாவட்டங்களில் மின் வெட்டு நேரம் எவ்வளவு, மின்வெட்டு குறித்த தகவலை, மீடியாக்கள் மூலம், முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை என, விளக்கம் அளிக்க, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.
இம்மனுவுக்கு, டான்ஜெட்கோ இயக்குனர், ஜெயசீலன் தாக்கல் செய்த பதில் மனு:மேட்டூர், வடசென்னை அனல் மின் நிலையங்களை, விரைந்து இயக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் மாதங்களில், மின்சார நிலைமை மேம்படும். மின்வெட்டுப் பிரச்னையை குறைக்க, படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கட்டாய செயல் இழப்பு, திடீர் மின் தேவை போன்ற காரணங்களால், மின்வெட்டு குறித்து, முன்கூட்டி அறிவிப்பு செய்ய முடியவில்லை. மற்றபடி, மின் தடை பற்றி, மீடியாக்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது.மின் தேவை, வினியோகம் சீராக இருக்க வேண்டும். இல்லையெனில், மின் கட்டமைப்பில் குளறுபடி ஏற்படும். எனவே, மின் வெட்டு தவிர்க்க முடியாதது.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

"முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ள திட்டங்களை, அமல்படுத்த வேண்டும். மின் உற்பத்தி மற்றும் வினியோகத்துக்கான திட்டங்களை அமல்படுத்த, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பதில் மனுவில் கூறியுள்ளபடி, நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, இவ்வழக்கு நிலுவையில் வைக்கப்படுகிறது. விசாரணை, எட்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.