டப்ளின்: அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்புக்கு சட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, தாயின் உயிருக்கு ஆபத்து இருக்குமேயானால் கருக்கலைப்பு செய்யலாம் என அறிவுறுத்துகிறது. கருக்கலைப்பு தொடர்பாக சில வாரங்களுக்கு முன் அயர்லாந்தில் இந்தியாவை சேர்ந்த டாக்டர் சவீதா மரணமடைந்ததை அடுத்து 7 வாரங்களுக்கு பிறகு கருக்கலைப்புக்கு சட்டம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.