புதுடில்லி : அடுத்த 15 நாட்களுக்கு பல்க் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.சிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக பரவிய வதந்திக்கு இணையதள தொழில்நுட்பமே காரணம் என மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர் ஆர் பாட்டீல் கருத்து தெரிவித்திருந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது . இந்த தடை, நாடு முழுவதும் அவசரமாக அமல்படுத்தப்படுகிறது.