நியூயார்க் : செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய ரோவர் விண்கலம் கிட்டத்தட்ட 8 மாத பயணத்திற்கு பிறகு இன்று (06.08.12) வெற்றிகரமாக தரையிறங்கியது. விண்வெளி ஆய்வு மையத்தில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
பூமியில் இருந்து சுமார் 570 மில்லியன் கி.மீ., தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். இந்த கிரகத்தில் ஊயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகம் தொடர்பான படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. மேலும் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், அதற்கான படங்களையும் வெளியிட்டது நாசா. இதனையடுத்து செவ்வாய் கிரகத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும், அதில் உயிர்கள் வாழ்வதற்கு தேவையான சூழல் இருக்கிறதா...? என்பது பற்றி ஆய்வு செய்யவும் ரோவர் என்ற புதிய விண்கலம் ஒன்றை உருவாக்கியது நாசா விண்வெளி மையம். கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் கேப் கேனரவல் விண்வெளி மையத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் மூலம் ரோவர் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
வெற்றிகரமாக விண்ணில் தரையிறக்கம் : ரோவர் அனுப்பப்பட்டு சரியாக 8 மாத பயணத்திற்கு பின்னர் இன்று (6ம் தேதி) திங்கட்கிழமை, செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தின் புவிவட்ட பாதைக்குள் ரோவர் விண்கலம் நுழைந்ததும், அதிலிருந்து க்யூரியாசிட்டி வாகனம் செவ்வாயில் தரையிறங்கியது. இந்திய நேரப்படி காலை 11.12 மணியளவில்) ரோவர் தரையிறங்கியது.
2.5 பில்லியன் டாலர் செலவு : செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய ரோவர் விண்கலத்தை உருவாக்க 2.5 பில்லியன் டாலர் செலவு செய்து இருக்கிறது அமெரிக்கா. இதில் செவ்வாயை ஆய்வு செய்யும் க்யூரியாசிட்டியின் எடை மட்டும் 899 கிலோ, ரோவர் விண்கலத்தின் மொத்த எடை சுமார் 3 ஆயிரத்து 893 கிலோவாகும். ரோவர் விண்கலத்தில் க்யூரியாசிட்டி என்ற ஒரு வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த க்யூரியாசிட்டி வாகனத்தில் அதிநவீன தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 6சக்கரம் வாகனம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த க்யூரியாசிட்டியில் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளன. செவ்வாயில் இருக்கும் மண்ணை ஆய்வு செய்வதற்கு தேவையான ட்ரில்லர், மண் பரிசோதனை சாதனம் உள்ளிட்ட அனைத்து வகை அம்சங்களும் இந்த க்யூரியாசிட்டியில் உள்ளது.
30 ஆண்டு கனவு நனவானது: செவ்வாய் கிரகம் தொடர்பாக 30 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுக்கு இன்று தான் பலன் கிடைத்துள்ளது. இது நாசா விஞ்ஞானிகளை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதிய மைல்கல் : ரோவர் வெற்றிகரகமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டதன் மூலம், செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லை நாசா விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.
நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி : ரோவர் விண்கலத்தில் இருந்து க்யூரியாசிட்டி வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியதும் விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் தங்களது மகிழ்ச்சியை கட்டி தழுவி பாராட்டிக்கொண்டனர்.
நேரடி ஒளிப்பரப்பு: ரோவர் செவ்வாய் கிரகத்தில் இறங்கும் காட்சியை நேரடியாக ஒளிப்பரப்பு செய்தது நாசா விண்வெளி மையம். செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கும் காட்சியை, நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் பெரிய திரை வைத்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை ஏராளமானபேர் நேரில் பார்த்தனர்.
2 ஆண்டுகள் ஆய்வு : செவ்வாயில் தரையிறங்கிய க்யூரியாசிட்டி, செவ்வாய் கிரகம் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய இருக்கிறது. சுமார் 2 ஆண்டுகள் அங்கு ஆய்வு மேற்கொண்டு அதுதொடர்பான தகவல்களை நாசா விஞ்ஞானிகளுக்கு அனுப்ப இருக்கிறது.