உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

20 July 2012

திரு நங்கைகள்- ஒரு சமூகத்தின் அவலமா ?

திரு நங்கைகள்- ஒரு சமூகத்தின் அவலமா ? தயவு செய்து நண்பர்கள் இதை பொறுமையாக படித்து விட்டு செல்லுங்கள்.


தகப்பனுக்கோஅவமான சின்னமாய் உடன்பிறப்புகளுக்கோ கேலியாய் உறவினர்களுக்கோ வேடிக்கையாய் சமுதாயத்திற்கோ கேள்வி குறியாய் எங்களுக்கோ வாழ்க்கை தவிப்பாய் நாங்களும் மனிதர்கள் தானே , எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பர் எங்களை மன்னராய் மனிதராய் வேண்டாம் மனிதராய் மதியுங்கள் மனமில்லா எங்களிடம் தாயே அணைக்க மறுத்த சேய்கள் நாங்கள் வேறு யார் வந்துதான் எங்களை ஆதரிப்பார்கள்

கிராமப்புரங்கள் முதல் நகரங்கள் வரை ஒருவரை சிறுமைபடுத்தவோ
கேவலப்படுத்தவோ பயன் படுத்ப்படும் சொல் “ பொட்டை, அலி , ஒம்போது ” பலருக்கு இந்த கருத்து உண்டு. இவங்க எல்லாம் எதுக்கு உயிர் வாழராங்க ஒம்போதாயிட்டோம்னு தெரிஞ்சஉடனே நாண்டுக்கிட்டு சாக வேண்டியது தான.
ஒருவருக்கு குழந்தை இல்லை என்றால் கூட அலி என அழைப்பது வழக்கமாகிவிட்டது.
ஒரு சமுகத்தில் பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை கொன்றவனைப்பற்றியோ
தின்ணியத்தில் மனிதன் வாயில் மலத்தை திணித்த்தவனை பற்றியோ வாய் திறவாத
இச்சமூகம் பாலின வேறு பாடுள்ள ஒரு சமூகத்தையே சாகச்சொல்கின்றது. மானம் (
மனம் ) கெட்ட மனிதன் .

ஆண் பெண் என்பதனை உறுப்பின் மூலமாக அறிகின்றோம்.அதனால் திரு நங்கைகள்
சுமார் 13 வயது வாக்கில் தான் கண்டறியப்படுகிறனர் அந்த வயதில்தான் ஆணும்
பெண்ணும் பருவ மாற்றம் அடைகின்றனர்.

மேலை நாடுகளில் திரு நங்கை சமமாக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக சில மாநிலங்களில் திருநங்கைகள் நிலை மிகவும் அவமானகரமானதாக உள்ளது. இந்து மத வழக்கப்படி அரவணி என அழைக்கப்படுகிறனர். ஆனா என்னை பொறுத்தவரை திருநங்கை எனவும் திருமங்கை என்று அழைக்கலாம்,

சமுகத்தில் வெறி பிடித்த மனிதர்கள் சிலர் பெண்னை அடிமையாய் வைத்திருப்பது போல திரு நங்கை பாலியல் ரீதியிலான அடிமையாக வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சமுதாயத்தில் ஆண், பெண், விலங்குகள் வாழலாம் ஆனால் திரு நங்கை வாழக்கூடாது. பண்டைய கால இலக்கியங்கள் முதல் தற்கால ஊடகங்கள் வரை திரு நங்கைகளை கேலிப்பொருளாகவே பயன் படுத்துகிறனர்.மனித இனத்தாலேயே ஒரு பாலினம் கேவலப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வருவது கொடுமையிலும் கொடுமை.. அதாவது உன்னை மனிதனாக ஏற்க முடியாது என்று கூறுகின்றனர் கழிவறை முதல் பேருந்து வரை எல்லா இடத்திலும் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. நீ செய்ய வேண்டிய ஒரே தொழில் பாலிய்ல் தொழில் என பல்லை காட்டுகிறது சமூகம். அதற்காகவ படைக்க பட்டர்கள் அவர்கள் யோசியுங்கள் .

இரு திரு நங்கைகள் ரோட்டில் நடந்து சென்றால் ஆண்கள், பெண்களின் கேலிக்கும், நமட்டு சிரிப்புக்கும் ஆளாகாமல் இருக்க முடிகிறதா ? இப்படி செல்லும் இடங்களிலெல்லாம் உளவியல் மனோரீதியிலான கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு பெரும்பாலான் திரு நங்கைகள் வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழிலையும் பிச்சையெடுத்தலையும் செய்கின்றனர். திரு நங்கைகளில் சிலர் செய்யும் தவருதளுக்காக ஓட்டு மொத்த திரு நங்கைகளில் குறை கூறுவது தவறு.
தப்பு பண்ணுகிற நிறையபேர் ராஜவாழ்க்கை வாழும் போது இவங்க என்ன தப்பு செஞ்சாங்க..? எதுக்கு இந்த சமுகம் இவர்களுக்கு இவ்ளோ பெரிய இழிவை தந்திருக்கிறது ? இப்படி பிறந்தது இவங்க தப்பா ?
இவங்களுக்கு
மரியாதையும் அங்கீகாரமும், தராம அவங்களை இந்த நிலைக்கு கொண்டுவந்தது நம்
சமுகம்தானே சமுகத்தில் நாமும்தான் இருக்கிறோம் என்பதை மரவாதிர்கள்.

நானும் சிறு வயதில் இவர்ககளை கண்டு ஒதுங்கி இருக்கிறேன் இல்லையென்று சொல்லவில்ல, இதற்க்கு காரணம் எனது பெற்றோர்கள். அவர்களுக்கு போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை அப்போது ஆனா இப்போது அவர்களுக்கு நான் எடுத்துரைகின்றேன். மேலும் நமது குழந்தைகளுக்கு இவர்களைப்பற்றி தெளிவாக நாம் சொல்லி கொடுத்து இருக்கிறோமா ? இல்லை இனியாவது நாமும் நமது குழந்தைகளுக்கும் இவர்களை பற்றி புரியாத நபர்களுக்கும் எடுத்துரைப்போம்.
திருமங்கைகள் பற்றிய விழிப்புணர்வு அனைவரிடமும் வரவேண்டும். அவர்களுக்கு சமூகத்தில் ஒரு நல்ல இடம் அளிக்க வேண்டும் —

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT