லண்டன்: ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. இந்த பெருமையை பெற்று தந்தவர் ககன் நரங். இன்று நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீ., ரைபில் பிரிவில் 701.1 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார் ககன் நரங். இந்த போட்டியில் ரோமேனியாவின் அலின் ஜார்ஜ் மோல்டோவினய் தங்கப்பதக்கமும், இத்தாலியின் நிக்கோல் சாம்பிரானி வெள்ளிப்பதக்கமும் வென்றார். இந்த வெற்றி மூலம் இந்திய கொடியை ஒலிம்பிக் பறக்க விட்டுள்ளார் என அவரது தந்தை பெருமிதத்துடன் கூறியுள்ளார்.