லண்டன்: லண்டன் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் வீழ்ந்தது.
லண்டன் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஹாக்கி "பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் தரம்வீர் சிங் (45வது நிமிடம்), ஷிவேந்திரா சிங் (48வது) தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தனர். நெதர்லாந்து அணிக்கு ராபர்ட் வான் டெர் ஹார்ஸ்ட் (20வது நிமிடம்), ரோடரிக் வியஸ்தோப் (29வது), மின்க் வான் டெர் வீர்டன் (51வது) தலா ஒரு கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர்.
மற்றொரு "பி' பிரிவு லீக் போட்டியில் தென் கொரியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய தென் கொரிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
"ஏ' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி 6-0 என்ற கோல் கணக்கில் வென்றது. மற்றொரு "ஏ' பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், ஸ்பெயின் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது.