நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனன்யா. இவருக்கும், கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயலுக்கும் பிப்ரவரி 3ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிச்சயதார்த்தத்திற்குப் பிறகுதான் ஆஞ்சநேயலு ஏற்கனவே திருமணமானவர் என தெரியவந்தது. இதனால் இருவருக்கும் நடக்கவிருந்த திருமணம் ரத்தானது. இதனையடுத்து நடிகை அனன்யா மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் தன்னுடைய மகள் அனன்யா வீட்டை விட்டு வெளியேறி ஆஞ்சநேயலுவுடன் திருப்பதியில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அனன்யாவில் தந்தை கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். என் மகளுக்கு ஆஞ்சநேயலு பொருத்தமானவரில்லை. அனன்யா எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார் எனவும் கூறினார்.