"கர்ணன் படம் புதுப்பொலிவுடன் வெளியிடப்பட்டதில், சக்கை போடு போட்டதால், தமிழ் சினிமா உலகத்தில் பழைய படங்களை மறுவெளியீடு செய்யும் புது, "டிரெண்ட் உருவாகியுள்ளது. எம்.ஜி.ஆரின், "மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், எங்க வீட்டுப் பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, வேட்டைக்காரன் ஆகிய படங்களும். சிவாஜியின், "பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், புதிய பறவை, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களும், தற்போதுள்ள நவீன திரையரங்குகளின் தரத்திற்கேற்ப, மெருகேற்றப்பட்டு மறுவெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.