பிரபல இயக்குனர், வசனகர்த்தா, இயக்குனர் விசு, மீண்டும் நடிக்கிறார். மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம் உள்பட பல்வேறு குடும்ப படங்களை இயக்கியவர், தில்லுமுல்லு, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர். தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்த சென்ற பிறகு விசு சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வந்தார். உடல்நல குறைவு காரணமாக நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தார். ஆரோக்கியமான காற்று, அமைதியான சூழ்நிலை இவற்றுக்காக சென்னையை விட்டு ஒதுங்கி புறநகர் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். சமீபத்தில் நடந்த பெப்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு ஒருசில ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தற்போது நல்ல உடல் ஆரோக்கியம் பெற்றுள்ள விசு, மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். லவ் டூடே, துள்ளித் திரிந்த காலம், ஆர்யா படங்களை இயக்கிய பாலசேகரன் இயக்கும் புதிய படமான ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நல்ல கேரக்டர்கள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தில் ராட்டினம் படத்தில் நடித்த லகுவரனும், சுவாதியும் ஹீரோ ஹீரோயின்களாக மீண்டும் ஜோடி சேருகிறார்கள்.