கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாற்றான். ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக இப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் நாளை(09.08.12) பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. விழாவில் நடிகர், நடிகைகளின் ஆட்டம், பாட்டு என ஒரு கலை நிகழ்ச்சி போல இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இதற்காக பிரபல நடிகர், நடிகைகள் இன்று சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளனர். டைரக்டர்கள் லிங்குசாமி, கவுதம் மேனன், நடிகர்கள் கார்த்தி, பிரசன்னா, அவரது மனைவியும் நடிகையுமான சினேகா, நடிகைகள் சோனியா அகர்வால், ஹன்சிகா, அஞ்சலி, பூர்ணா, பாடலாசிரியர்கள் தாமரை, பா.விஜய், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளனர்.