ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கோச்சடையான். படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிட்டதால் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோச்சடையான் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரமாண்டமாக நடத்த தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. ஏனென்றால் ரஜினிக்கு ஜப்பானிய ரசிகர்கள் அதிகம் என்பதால் அவர்களை உற்சாகப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் ஜப்பானிய ரசிகர்களை சந்தித்து பேசவும் இருக்கிறார். இதற்காக அவர்ஆசிரியர் ஒருவரிடம் ஜப்பானிய மொழி பயின்று வருகிறார்.