காதலித்து, திருமண ஆசைகாட்டி அப்பாவி இளைஞர்களிடம் பணம் பறித்த கேரள அழகி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
அந்த மயக்கும் சாகச அழகி இதுவரை 50 வாலிபர்களை மணந்து சாதனை படைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரள அழகியிடம் ஏமாந்த மேலும் 2 இளைஞர்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக த்தில் வந்து கண்ணீர்விட்டு அழுதபடி புகார் கொடுத்தார்கள்.
புகார் கொடுத்த இளைஞர்களில் ஒருவரான மணிகண்டன் அழுதபடியே, ’’சென்னை முகலிவாக்கம் நான் பிறந்து வளர்ந்த ஊர். டிப்ள மோ என்ஜினீயரிங் முடித்துவிட்டு, மாருதி கார் சர்வீஸ் நிறுவனத் தில் வேலை பார்த்து வருகி றேன். சகானாவை கடந்த வாரம் வரை எனது மனைவி என்றே நினைத்திருந்தேன். கடந்த வாரம்தான் அவள் ஒரு மோசடி ராணி என்ற அந்த அதிர்ச்சி தகவல் எனக்கு கிடைத்தது.
புகார் கொடுத்த இளைஞர்களில் ஒருவரான மணிகண்டன் அழுதபடியே, ’’சென்னை முகலிவாக்கம் நான் பிறந்து வளர்ந்த ஊர். டிப்ள மோ என்ஜினீயரிங் முடித்துவிட்டு, மாருதி கார் சர்வீஸ் நிறுவனத் தில் வேலை பார்த்து வருகி றேன். சகானாவை கடந்த வாரம் வரை எனது மனைவி என்றே நினைத்திருந்தேன். கடந்த வாரம்தான் அவள் ஒரு மோசடி ராணி என்ற அந்த அதிர்ச்சி தகவல் எனக்கு கிடைத்தது.
சகானா செல்போன் மூலம்தான் எனக்கு முதலில் அறிமுகம் ஆனாள். எடுத்த எடுப்பிலேயே உங்கள் குரல் பிடித்திருக்கிறது. அதனால் உங்களையும் பிடித்திருக்கிறது என்றுதான் சகானா ஆரம்பித்தாள். ஆனால் நான் அவளை நேரில் பார்த்தபிறகுதான், அவளது காதலை ஏற்றேன். வக்கீலுக்கு படித்துள்ளதாகவும், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் தொழில் செய்வதாகவும் சொன்னாள்.
அடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதப்போவதாக சொன்னாள். முதலில் பெற்றோருக்கு தெரியாமல் அவளை ரகசிய திருமணம் செய்து கொண்டேன். அதன்பிறகு எனது பெற்றோர் ஆசியுடன் முறையாக அவளை, தாலி கட்டி மணந்தேன். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, காலில் மெட்டி அணிவித்து, இப்படி அத்தனை திருமண சடங்குகளையும் செய்து அவளை கைப்பிடித்தேன்.
தனது சொந்த ஊர் கேரளாவில் உள்ளது என்றும் எனது பெற்றோர் இறந்து விட்டதால் தான் ஒரு அனாதை என்றும் அவள் சொன்னாள். இதை நம்பினேன்.2 மாதம் அவள் என்னோடு நல்ல மனைவியாக வாழ்ந்தாள். அதன்பிறகு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டி இருப்பதால், படிக்க தனிமை வேண்டும் என்று சொல்லி, சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி இருந்தாள். அதன்பிறகு அவளை விடுதிக்குச் சென்று பார்த்து வந்தேன்.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து விடுதியை காலி செய்துவிட்டு போய்விட்டாள். அதன்பிறகு போனில்தான் பேசி வந்தாள். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத போய்விட்டதாக சொன்னாள். அவளால் நான் இழந்தது பல லட்சம் இருக்கும்’’ என்று கூறினார்.
இன்னொரு வாலிபர் பிரசன்னாவும், கேரள அழகியிடம் மோசம் போனது பற்றி கண்ணீருடன் விளக்கினார். நானும் டிப்ளமோ என்ஜினீயர்தான். புளியந்தோப்பில் நான் வசிக்கிறேன். கால்பந்து வீரராகவும் உள்ளேன்.
நான் சகானாவை புரசைவாக்கத்தில் ஒரு கடையில் சந்தித்தேன். முதலில் காதலை சொன்னாள். அடுத்து ரகசிய திருமணத்தில் விழவைத்தாள். கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி காஞ்சீபுரம் அருகில் உள்ள ஊத்துக்காடு எல்லை அம்மன் கோவிலில் பெற்றோர் சம்மதத்துடன் அவளை மணந்து கொண்டேன். 2 மாதம் மட்டும் என்னோடு மனைவியாக வாழ்ந்தாள். எனக்கு நல்ல மனைவியாக இன்பத்தையும் வழங்கி, சமைத்து கூட போட்டாள்.
அதன்பிறகு வக்கீலுக்கு படிக்கிறேன் என்று சொல்லி என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டாள். அதன்பிறகு போனில்தான் பேசுவாள்.
எனக்கு தெரியாமல் எங்கள் வீட்டுக்கு, பக்கத்து தெருவில் வசிக்கும் எனது உறவினர் சுரேசையும் இதுபோல் ஏமாற்றி மணந்து இருக்கிறாள். ஒரு நாள் எனது தாயாருடன் சகானா, புளியந்தோப்பு மார்க்கெட்டுக்கு சென்றாள். அங்கு சுரேசின் தாயார் சகானாவை பார்த்து, எனது தாயாரிடம், அவள் எனது மருமகள் என்று கூறி இருக்கிறாள். எனது தாயாரோ, நீங்கள் தெரியாமல் சொல்கிறீர்கள், அவள் எனது மருமகள் என்று கூறி இருக்கிறார். உடனே சகானா, சுரேசின் தாயாரை பார்த்து, மிரட்டி இருக்கிறாள். நான் பிரசன்னாவின் மனைவிதான் என்று அடித்து கூறிவிட்டு வந்துவிட்டாள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் நிலையத்திற்கும் வந்து, பிரசன்னாதான் எனது கணவர் என்று சகானா சத்தியம் செய்தாள். அவளை மாயக்காரி என்று தான் சொல்ல வேண்டும். நானும் அவளால் ரூ.5 லட்சத்தை இழந்து நிற்கிறேன் என்று கூறினார்.
மோசக்காரி சகானா சட்டையை கழற்றுவதுபோல, மாப்பிள்ளைகளை கழற்றி இருக்கிறாள். இதுவரை அவளது மாப்பிள்ளை கணக்கை பார்த்தால், 50-ஐ தொடும் என்று சொல்லுகிறார்கள். கமிஷனர் அலுவலகத்தில் மட்டும் அல்லாது வேப்பேரி, அடையாறு, திருவொற்றியூர், புளியந்தோப்பு போன்ற போலீஸ் நிலையங்களிலும் அவளது மாப்பிள்ளைகளின் புகார்கள் உள்ளன.
மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் அவளிடம் ஏமாந்த புருஷன்கள் 15 பேர் புகார் கொடுத்துள்ளனர். சம்சுதீன், திருவள்ளூர் ராஜேஷ், அடையாறு சீனிவாசன், கோவை சரவணன், திருச்சி ராகுல், அம்பத்தூர் சந்திரபாபு என்று, சகானாவின் காதல் கணவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
கேரளாவிலும் அவளிடம் ஏமாந்த கணவன்கள் உள்ளனர். இப்போது இந்த புகார்கள் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் போலீசார்தான் விசாரித்து வருகிறார்கள். மாயக்காரி சகானாவை போலீசார் தேடி வருகிறார்கள்.
- நன்றி: நக்கீரன்