பீஜிங்: தொடர் மழை காரணமாக சீன பெருஞ்சுவரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன நாட்டின்மீது எதிரி நாட்டை சேர்ந்தவர்கள் தாக்குவதை தவிர்ப்பதற்காக (1368-1644) இடைப்பட்ட கால கட்டத்தில் வடக்கு சீனாவில் ஹைபே மாகாணத்தில் இந்த பெருஞ்சுவர் கட்டப்பட்டது. தற்போது இவை உலக அதிசயங்களுள் ஒன்றாக பாதுகாப்பட்டு வருகிறது. இந்நிலையில் இம் மாகாணத்தில் தொடர்ந்து பலத்த மழைபெய்துவருதையடுத்து சுமார் 36 மீட்டர் நீள அளவிற்கு பெருஞ்சுவரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக மழையால் பெரும்பாதிப்பிற்குள்ளாகும்நாடுகளில் சீனாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.