கவுகாத்தி : கடந்த சில நாட்களாக அமைதி திரும்பியிருந்த அசாம் மாநிலத்தில் இன்று மீண்டும் வன்முறை வெடித்தது. இன்று நடந்த வன்முறையில் சிக்கி 5 பேர் பலியாயினர். இதனையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
அச்சத்தில் அசாம்: அசாம் மாநிலத்தில் இருபிரிவினருக்கிடையே நடைபெற்ற மோதல், பெரும் வன்முறையாக வெடித்தது. சிறிய அளவில் பரவிய வன்முறை, சிராங், கோக்ராஜ்ஹர் உள்ளிட்ட 3 மாவட்டங்களையே புரட்டிப் போட்டது. இந்த வன்முறையில் சிக்கி 56 பேர் பலியாயினர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். அவர்கள் பாதுகாப்பிற்காக மாற்று இடத்திற்கு புலம்பெயர்ந்தனர்.
நாட்டின் களங்கம் - பிரதமர் : அசாம் மாநிலத்தில் நிலவிய வன்முறை, நாட்டின் களங்கம் என, அசாம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அசாம் மாநில மறுசீரமைப்பிற்கு ரூ. 300 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. அதில் முதற்கட்டமாக, கோக்ராஜ்ஹர் மாவட்ட மறுசீரமைப்பு பணிக்காக ரூ. 100 கோடியும், வன்முறையில் பலியானவர்களுக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சமும் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.
மீண்டும் வன்முறை : இந்நிலையில், அமைதி திரும்பிய நிலையில், இன்று மீண்டும் அங்கு வன்முறை வெடித்தது. கோக்ராஜ்ஹர் மாவட்டத்தில் நிலவிய வன்முறையில் 2 பேரும், சிராங் மாவட்டத்தில் 3 பேரும் கொல்லப்பட்டனர்.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு : இன்று நிகழ்ந்த வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.