புதுடில்லி: வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியா கொண்டுவர வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் யோகாகுரு பாபா ராம்தேவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வாழ்த்தி பேசினர்.
பார்லி., முன்பு தொண்டர்களுடன் தர்ணா போர் நடத்தப்போவதாக அறிவித்ததையடுத்து இங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து பார்லி., நோக்கி புறப்பட்ட அவரை ஆதரவாளர்களுடன் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பார்லி., முன்பு தொண்டர்களுடன் தர்ணா போர் நடத்தப்போவதாக அறிவித்ததையடுத்து இங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து பார்லி., நோக்கி புறப்பட்ட அவரை ஆதரவாளர்களுடன் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கடந்த 9ம் தேதி முதல் 3 நாள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி மத்திய அரசிடம் இருந்து முடிவை கேட்டார். ஆனால் அரசு தரப்பில் எவ்வித பதில் அறிக்கையும் இல்லை. இதனால் கோபமுற்ற ராம்தேவ் பார்லி.,யை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளார்.
பா.ஜ.,- ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் ஆதரவு:இன்று போராட்ட மேடைக்கு பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், ஜனதாகட்சி தலைவர் சு.சாமி, தெலுங்குதேசம், சிவசேனா, சி.பி.ஐ.,, நிர்வாகிகள், ஆகியோர் பங்கேற்றனர்.
மேடையில் நிதின் கட்காரி பேசுகையில்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைளே, நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணமாக அமைந்து விட்டது. கறுப்புப் பணம் குறித்து பேசுபவர்கள் மீது, சி.பி.ஐ. மூலம் அச்சுறுத்தப்படுகிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக, கறுப்புப்பணம் குறித்துப் பேசிய ராம்தேவின் உதவியாளர் பால்கிருஷ்ணா மீது போலி பாஸ்போர்ட் வழக்கில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராம்தேவ் போராட்டத்திற்கு பா.ஜ.,முழு ஆதரவு அளிக்கும் .இவ்வாறு கட்காரி பேசினார்.