கொழும்பு: டெசோ கூட்டமைப்பு மாநாட்டில் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கேற்காது என அறிவித்துள்ளது. அவ்வமைப்பை சேர்ந்த சம்மந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அனைத்து கட்சிகளும் இணைந்து நடத்தினால் பங்கேற்போம் என தமிழ் தேசியகூட்டமைப்பு மாநாடு தெரிவித்துள்ளது. மாநாட்டு முடிவை அமைப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.