புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். தலைநகர் டில்லியில், தனியார் டிவி சேனலுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது, அன்னா குழுவினர் மேற்கொண்ட போராட்டம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. இப்போராட்டம், தங்களை மேலும் வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்க ஏதுவாக இருந்தது. 2014ம் ஆண்டில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.