"அ.தி.மு.க., அரசின் வழக்குகளை கண்டு அஞ்சமாட்டேன்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். நெல்லையில் நடந்த பிறந்த தின விழாவில் அவர் பேசியதாவது: ஜெ., குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்டதற்கு பதில் சொன்னேன். அதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்குகளை கண்டு அஞ்சப்போவதில்லை. லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்கப்போவதில்லை. தி.மு.க., வை கஷ்டப்பட்டு ஆட்சியில் இருந்து அகற்றினோம். அ.தி.மு.க., ஆட்சியை எளிதில் அகற்றிவிடலாம். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வர முடியாது, என்றார்.
நிருபர்களிடம் கேள்வி : கேள்வி கேட்ட நிருபர்களிடம் கேப்டன் டிவி பார்ப்பதில்லையா என தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் டென்ஷனாக எதிர்கேள்வி கேட்டார். தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் பிறந்த தினத்தையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் நலத்திட்டபணிகளை மேற்கொள்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தரப்பினருக்கு நலத்திட்ட பணிகளை செய்துவருகிறார். நெல்லை மாவட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிறிஸ்துவ ஆலயங்களை தேர்வு செய்து பணிகளை மேற்கொள்கின்றனர். பாளையங்கோட்டை, புனித செபஸ்தியார் ஆலயத்தில் சீரமைப்பு பணிகளை விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் பார்வையிட வந்தனர்.
இதற்காக நிருபர்களையும் வரச்சொல்லி அழைப்பு விடுத்திருந்தனர். அங்கு வந்த விஜயகாந்திடம், நலத்திட்டம் குறித்து கூறுங்களேன் என நிருபர்கள் கேள்வியை துவக்கினர். அதற்கு விஜயகாந்த், "ஏம்பா..நீ கேப்டன் டிவி பார்க்கிறதில்லையா..அதில்தான் டீடெய்லா போடுறோமே..என்றார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படியிருக்கிறது என இன்னொரு நிருபர் கேள்வி கேட்டார். அதற்கு விஜயகாந்த், சட்டம் ஒழுங்கா அது எங்கேயிருக்கு..என்றார்.அடுத்த கேள்வி கேட்கும் முன்பாக..எல்லாத்தையும் இங்கேயே கேட்டால் எப்படி.. ராத்திரி பொதுக்கூட்டத்திற்கு வா..என கிளம்பினார். அவ்ளோதானா..பேட்டி.. என நின்றுகொண்டிருந்த நிருபர்களிடம் அவரது மனைவி பிரேமலதா நான் பேட்டியளிக்கிறேன் என ஆரம்பித்தார்.
தமிழகத்தில் தி.மு.க.,அ.தி.மு.க.,ஆகிய இரண்டு கட்சிகளுமே நலத்திட்ட பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை. நாங்கள் ஆஸ்பத்திரிக்கும் மற்ற இடங்களுக்கும் நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள முன்வந்தால், அதிகாரிகள் எங்களிடம் எழுதி கேட்கிறார்கள்.
எழுதிகேட்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கமாட்டோம் என எழுதிகொடுக்க தயாரா..நாங்கள் மேற்கொள்ளும் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் அ.தி.மு.க.,வினர் தடுக்கின்றனர் என்றார். இரவில் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நடந்த கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள "நலிந்த' கிறிஸ்துவ சர்ச்களுக்கும், நலிந்த பாதிரியார்களுக்கும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை விஜயகாந்த் வழங்கினார்.