யுவன் சங்கர் ராஜா விரைவில் சதம் அடிக்க உள்ளார். அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் யுவன். இவர் தன்னுடைய இளமை துள்ளல் இசையால் இளைஞர்களின் மனதை கவர்ந்து இழுக்கக் கூடியவர். மேலும் தன்னுடைய இசை மூலம் தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களை தந்துள்ளார். இசையமைப்பதோடு இல்லாமல் பல்வேறு பாடல்களும் பாடியுள்ளார். இப்படி பன்முக திறமையுடைய யுவன் விரைவில் சதம் அடிக்க உள்ளார். பிரியாணி திரைப்படம் இவர் இசையமைக்க இருக்கும் 100வது திரைப்படமாகும். இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். கார்த்தி, ரிச்சா ஆகியோர் நடிகிறார்கள்.
தினதகவல் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் krkinvites@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.