இந்தியன் பில்லர்ஸ் என்ற லாப நோக்கமற்ற அமைப்பின் சார்பில் கடந்த ஜூன்-14 ம் தேதி உலக இரத்த தான தினமன்று இந்தியாவிலேயே முதல் முறையாக இரத்த தானத்திர்க்கான 24 மணி நேர கால் சென்டர் தருமபுரியில் துவங்கப்பட்டது,
தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்ட மக்கள் பயன்பெறும் விதமாக இந்த கால் சென்டர் செயல்பட்டுவருகிறது. இந்த கால்சென்டர் துவங்கி நேற்று வரை 45 நாட்களில் 1072 பேருக்கு இரத்தம் வழங்கப்பட்டுள்ளது,
இதுகுறித்து இந்தியன் பில்லர்ஸ் அமைப்பின் இரத்த கால்சென்டருக்கான திட்ட இயக்குனர் ரேணுகாதேவி தெரிவித்தது:
ஜூன்-14 ம் தேதி உலக இரத்த தான தினமன்று இந்தியாவிலேயே முதல் முறையாக இரத்த தானத்திர்க்கான 24 மணி நேர கால் சென்டர் தருமபுரியில் துவங்கப்பட்டது, இந்த கால்சென்டர் துவங்கி நேற்று வரை 45 நாட்களில் 1072 பேருக்கு இரத்தம் வளங்கிஉள்ளோம் இது எங்களுக்கு பெருமையாக உள்ளது, இந்த பெருமைக்கு முழு காரணம் உரிய நேரத்தில், உரிய இடத்திற்கு வந்து இரத்தம் கொடுக்கும் தன்னர்வலர்களே.
தினமும் இரத்த தேவைக்காக இருபது முதல் முப்பத்தைந்து இதில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, கடலூர், பாண்டிச்சேரி ஆகிய ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து தினமும் குறைந்தது ஒரு அலைபேனும் வருகிறது, அதிகமாக இருதைய அறுவை சிகிச்சை, டெங்கு காய்ச்சல், தலசிமிய, பிரசவம் மற்றும் விபத்து போன்றவற்றிற்கான அழைப்புகள் வருகிறது.
சரியான விபரங்களை கொடுத்தால் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் எந்த பகுதியாக இருந்தாலும், பாசிடிவ் வகை இரத்தம் எனில் இரத்தம் கொடுக்க கொடையாளர் மிகஅதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்குள்ளாக அந்த இடத்தை வந்து விடுகின்றனர். இதே நெகட்டிவ் வகை இரத்தம் எனில் ஒரு அரை மணி நேரம் கூடுதல் ஆகலாம்.
தருமபுரி, ஈரோடு, மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரத்தம் கேட்ட ஐந்து நிமிடங்களில் எல்லாம் இரத்த கொடையாளர் அந்த மருத்துவமணை-ஐ அடைந்துள்ளனர் இரத்தம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறோம், இதற்காக அந்த மருத்துவமனைகள், மருத்துவர்கள், இரத்த வங்கிகள் அளித்துள்ளனர் (தங்கள் பார்வைக்க சிலவற்றை இணைத்துள்ளோம்)
கால் சென்டர் துவங்கிய அன்று எங்களிடம் மாநில அளவில் சுமார் 60,000 தன்னார்வலர்களின் விபரங்கள் தான் இருந்தது, ஆனால் இந்த 45 நாட்களில் மட்டும் புதியதாக மாநில அளவில் எஸ்.எம்.எஸ். , மின்னஞ்சல், மூலம் 42,180 பேர் பதிவு செய்துள்ளனர், மொத்தம் இன்று வரை எங்களிடம் இரத்தம் கொடுக்க எங்களிடம் 1,02,180பேர் பதிவு செய்துள்ளனர், இதில் சுமார் 80% பேர் 18 - 28 வயதுடைய இளைஞர்கள், எனினும் இதில் ஒ (O) பாசிடிவ் மற்றும் பி(B) பாசிடிவ் தான் அதிக அளவில் உள்ளனர். நெகட்டிவ் வகை இரத்தம் உடைய தன்னார்வலர்கள் மிக குறைவாகவே உள்ளனர்,
கோரிக்கை:
இனி இரத்தம் தேவைபடுபவர்கள் எங்களை அழைக்கும் பொது நோயாளி பெயர், வயது, அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை விபரங்கள், தேவையான இரத்த வகை ஆகிய விபரங்களை சரியாக கொடுக்க வேண்டுகிறோம்.
மேலும் ஒருவருக்கே இரத்தம் வேண்டி பல பேர் அழைக்கின்றனர், இதனை தவிர்க்க வேண்டுகிறோம்.
புதியதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது பெயர், வயது, இரத்த வகை, முகவரி, மாவட்டம் ஆகிய விபரங்களை 94888-48222 என்ற எண்ணுக்கு எஸ்.எம்,எஸ், அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம் அல்லதுblood@indianpillars.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
இதுகுறித்து இந்தியன் பில்லர்ஸ் அமைப்பின் தலைவர் வினோத் கூறியது:
இந்தியன் பில்லர்ஸ் அமைப்பின் சார்பில் இரத்த தானத்திற்காக துவங்கப்பட்ட கால் சென்டருக்கு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் நல்ல வரவேற்ப்பு உள்ளது,
இரத்த தானத்தினை தொடர்ந்து இந்த மாதம் (ஆகஸ்ட்) கண் தானத்திர்க்கான மாநிலம் தழுவிய கால் சென்டர் துவங்க திட்டமிட்டு உள்ளோம், இந்த எண் வெளியிடுவதோடு மட்டுமல்லாது கண் தானத்தினை அதிகபடுத்தும் விதமாக ஒரு புதிய முயற்சி மேற்கொள்ள உள்ளோம், இவை இரண்டும் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிட உள்ளோம்.