பாட்னா: பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தை சேர்ந்த ஷன்னு என்ற பெண் வறுமை காரணமாக தனது குழந்தையை நூறு ரூபாய்க்கு விற்றுள்ளார். அவர் தனது ஊனமுற்ற கணவர், 3 குழந்தைகளை காப்பாற்ற நேபாளத்தை சேர்ந்தவர்களிடம் குழந்தையை விற்றதாக கூறப்படுகிறது. குழந்தையை ரயிலில் ஏற்றிவிட்டு நின்ற ஷன்னு என்ற பெண்ணிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் தகவல் வெளியானது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.