மக்களிடையே மனிதநேய உணர்வு மறைந்து வருவதை மெய்ப்பிக்கும் வகையில், மருத்துவமனை இன்குபேட்டரில் வைப்பதற்கான தொகையான ரூ. 200யை, பெற்றோர்கள் தர முடியாததால் பச்சிளங்குழந்தை பலியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். தினக்கூலி தொழிலாளரான இவர், பிரசவத்திற்காக தனது மனைவி சுனிதாவை, ஜலந்தர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்திருந்தார். இந்நிலையில், இம்மாதம் 20ம் தேதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குறைந்த எடையுடனும் மற்றும் உடலநலக்குறைவுடன் குழந்தை பிறந்ததால், மருத்துவமனை டாக்டர்கள், குழந்தையை இன்குபேட்டரில் வைத்திருக்க அறிவுறுத்தினர். இன்குபேட்டர் இயங்க நாள் ஒன்றிற்கு மின்கட்டணமாக ரூ. 25 செலவாவதால், இன்குபேட்டரில் குழந்தையை வைக்க ரூ. 200 செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களிடம் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.
யாரும் உதவவில்லை : பெயிண்டர் பணி செய்து வரும் சஞ்சீவ் குமாரால், உடனடியாக அந்த பணத்தை புரட்ட இயலவில்லை. தான் பலரிடம் கேட்டுப் பார்த்தும் தனக்கு யாரும் உதவவில்லை என்றும், தயவுசெய்து மருத்துவமனை டாக்டர்கள் உதவிசெய்ய வேண்டும் என்று அவர்களிடம் சஞ்சீவ் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு மருத்துவமனை செவிசாய்க்கவில்லை.
குழந்தை அகற்றம் : இன்குபேட்டருக்கான பணம் தராததையடுத்து, மருத்துவமனை குழந்தையை புதன்கிழமை இரவு இன்குபேட்டரிலிருந்து அகற்றியது இந்த விளைவே குழந்தை பலியாக காரணமானது.
பெற்றோர்கள் குமுறல் : பணம் தராத காரணத்தினால், இன்குபேட்டரிலிருந்து குழந்தையை அகற்றிய மருத்துவமனை நிர்வாகம், குழந்தைக்கு ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த குளுகோஸ் பாட்டிலையும் அகற்றிவிட்டதாக சஞ்சீவ் குமாரும், தங்கள் குழந்தையை பணத்திற்காக அவர்கள் கொன்றுவிட்டதாக தாய் சுனிதாவும் கூறினர்.
இதுகுறி்த்து, மருத்துவமனை தலைமை டாக்டர் கூறியதாவது, இச்சம்பவம் குறித்து, சஞ்சீவ் குமார் புகாராக அளித்தால், உரிய விசாரணை நடத்தப்பபடும் என்று அவர் கூறினார்.