"பிளஸ் 2 முடிக்கும் வரை மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் பேன்ட் அணிவதில்லை' என, உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவியர் முடிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் பாக்பத் அசாரா கிராமத்தில், சமீபத்தில் கிராம பஞ்சாயத்தார், பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்தனர். அதில், "பெண்கள் காதல் திருமணம் செய்யக்கூடாது; 40 வயதுக்குட்பட்ட பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது; மொபைல் போன் பேசக்கூடாது' என, தெரிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக, தலிபான்கள் பல்வேறு தடைகளை விதித்ததைப் போல, இந்தத் தடைகளும் விதிக்கப்பட்டதாக, பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இதே முசாபர் நகர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, பள்ளி மாணவியர் பங்கேற்ற சமுதாயக் கூட்டம் நடைபெற்றது. பாரதிய கிசான் பெண்கள் சங்கத்தின் தலைவர் சோஹன்விரி தலைமையில் நடந்த அந்தக் கூட்டம், தியூதி என்ற கிராமத்தில் நடைபெற்றது.
பல்வேறு கிராமங்கள் மற்றும் ஜாதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், "பிளஸ் 2 படித்து முடிக்கும் வரை மொபைல் போன் பயன்படுத்துவதில்லை; ஜீன்ஸ் பேன்ட் அணிவதில்லை' என, உறுதி மொழி எடுத்தனர். "கிராம முதியவர்கள் யாரும் தங்களின் முடிவுகளை எங்கள் மீது திணிக்கக் கூடாது. எங்களின் நலனுக்கான முடிவுகளை நாங்களே எடுக்க தகுதியுடையவர்கள்' என்றும் கூறினர்.
மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் கூட்டத்தில் விவாதித்தனர். முதியவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில், ஜீன்ஸ் அணிவதை கைவிடுவது என்றும் தீர்மானித்தனர்.