வானத்தைப்போல, அந்நியன், தசாவதாரம் உள்பட பல படங்களை தயாரித்த ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் ஒரே சமயத்தில் 6 புதிய படங்களை தயாரிக்கிறார். அதில் ஒரு படத்தில் கமல்ஹாசன் நடித்து இயக்கவுள்ளார். இன்னொரு படம், ஐ. இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். ஷங்கர் இயக்குகிறார். அந்நியன் படத்தை அடுத்து, விக்ரம் - ஷங்கர் மீண்டும் இணையும் படம் இது.
மற்றொரு படத்துக்கு, `பூலோகம் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில், ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பொன்வண்ணன், சண்முகராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். என்.கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இவர், டைரக்டர் ஜனநாதனிடம் உதவி டைரக்டராக இருந்தவர். படத்தின் வசனத்தை ஜனநாதன் எழுதியிருக்கிறார்.
ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் இன்னொரு படம் வல்லினம். நடிகர் நகுல் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிவழகன் இயக்குகிறார். இவை தவிர அர்ஜூன் நடிக்கும் ஒரு படம், தனுஷ் ஒரு படம் என மொத்தம் 6 படங்களை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.