ஏதேனும் கொஞ்சம் வித்தியாசமா படம் வந்தாலே கொஞ்சம் விமர்சனமும் வரத்தான் செய்கிறது. எந்தமொழி படத்தில் கதையை எடுத்தார்கள் என்று ரசிகர்கள் தெளிவா சொல்ற அளவிற்கு படங்கள் சில விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. சமீபத்தில் வெளிவந்த தெய்வத்திருமகள் படத்தில் கூட அந்த பிரச்னையை இயக்குநர் விஜய் சந்தித்தார். அந்தவகையில் இப்போது இரண்டு படங்கள் ஒரே மாதிரியான கதையை எடுத்து வருவதாக ஒரு செய்தி பரவி வருகிறது. அதில் ஒன்று கே.வி.ஆனந்த் இயக்கும் மாற்றான். மற்றொன்று கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளர் பொன் குமரன் இயக்கும் சாருலதா. இதுகுறித்து இரண்டு பட டைரக்டர்களிடம் நாம் கேட்டறிந்த செய்தி இதோ...
மாற்றான் குறித்து கே.வி.ஆனந்த் சொல்லும் போது, விமான பயணத்தின் போது, ஒரு புத்தகத்தில் படித்த கதை இது. 1854-ல் தாய்லாந்தில் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் லீகன் - சான் ஆகியோரது கதை. இந்தக்கதை ரொம்ப சுவாரஸ்யமாகவும், கொஞ்சம் வித்தியாசமாகவும் இருந்தது. அதனால் இப்படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினேன். அந்த கதையைத்தான் மாற்றான் படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். இதில் லீகன் - சான் கேரக்டர் மாற்றானில் அகிலன்-விமலன் என்று மாற்றப்பட்டுள்ளது. நான் எடுக்கும் படம் வேறு ஒருவர் இயக்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன். தமிழ் சினிமாவில் ஒரு புதிய கதையாக மாற்றான் இருக்கும் என்றார்.
இதே கேள்வியை அடுத்த இயக்குநர் பொன் குமரன் வைத்தபோது, அவர் கூறுகையில், நான் கன்னடத்தில் கமர்ஷியலாக விஷ்ணுவர்தன் என்ற படத்தை எடுத்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்து ஒரு கமர்ஷியல் படம் பண்ணும் நிலை குறித்து யோசித்தபோது, தயாரிப்பாளர் ரமேஷ், தாய்மொழியில் வெளிவந்த அலோன் என்ற படத்தின் உரிமையை வாங்கி வைத்திருப்பதாகவும், அதை நீங்கள் இயக்குகிறீர்களா என்று கேட்டபோது, கொஞ்சம் வித்தியாசமாக இருக்கேன் என்று ஒப்புக்கொண்டு, அதில் நடிக்க ப்ரியாமணியை தேர்வு செய்தேன். அந்தபடத்தில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் எடுத்து கொண்டு அதை தமிழுக்கு ஏற்றவாறு கதையை அமைத்துள்ளேன். படத்தின் கதை ஒட்டி பிறந்த இருவரின் கதை. நம்ம ஊருக்கு ரொம்ப புதுசு. நீங்க கேட்ட இரண்டு படத்திலும் ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேர் ஒட்டி பிறந்தவர்கள் என்பதை தவிர படம் எடுக்கப்பட்ட விதம் எல்லாமே புதுசு. அந்தப்படம் வேற, இந்தப்படம் வேற என்றார். மேலும் ஆகஸ்ட் 20ம் தேதி படத்தை வெளியிடும் முயற்சியில் இருப்பதாகவும் டைரக்டர் கூறியுள்ளார்.