ஜகார்தா: இந்தோனேஷியாவில் இன்று இரு இடங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்தோனேஷியாவின் தென்மேற்கே , 150 கி.மீ. தொலைவில் உள்ள சிம்யூலு தீவில் கடலுக்கு அடியில் 45 அடி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் இப்பகுதியைச் சுற்றியுள்ள கட்டடங்கள் லேசாக குலுங்கின. உயிர் சேதம் குறித்த தகவல்கள் ஏவுமில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என ஆஸ்திரேலியா வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று தென்மேற்கு சுமத்ராவிலுள்ள மேற்கு கடற்கரையின் மடோன் தீவுப்பகுதியிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.