சென்னை : சென்னையின் பாரம்பரியமிக்க எல்.ஐ.சி.கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, மெட்ரோ ரயில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. எல்.ஐ.சி. கட்டிடத்திற்கு முன், தற்போது மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மெட்ரோ ரயில் பணிகளினாலேயே, எல்.ஐ.சி.கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதையடுத்து, ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையிலான குழு ஆய்வு செய்ய உள்ளது. இந்த குழுவின் அறிக்கை வெளியானபிறகே, மீண்டும் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளம் தோண்டும் பணி மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மணல் அள்ளும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மெட்ரோ ரயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.