நான் ஈ படத்தினை நடிகர் அஜித் பாராட்டியுள்ளார். நானி, சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நான் ஈ படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தென்னிந்திய திரையுலகினர் அனைவரும் படத்தை பார்த்துவிட்டு, இயக்குனரை தொலைபேசியில் அழைத்து புகழ்ந்து தள்ளுகின்றனராம். நடிகர்களில் ரஜினிகாந்த், வெங்கடேஷ், நாகர்ஜூனா, சித்தார்த், மகேஷ், பிரபாஸ், ரவிதேஜா, ராணா, விக்ரம், கார்த்தி, தனுஷ் ஆகியோரும் இயக்குனர்களில் ராம்கோபால் வர்மா, ஷங்கர், லிங்குசாமி ஆகியோரும் படத்தை பார்த்துவிட்டு ராஜமௌலியை தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் தற்போது அஜித்தும் சேர்ந்திருக்கிறார். நான் ஈ படத்தை பார்த்த அஜித் ராஜமௌலியை போனில் தொடர்பு கொண்டு புகழ்ந்து தள்ளிவிட்டாரம். இந்நிலையில் விரைவில் ராஜமௌலி நேரடி தமிழ்படம் இயக்குவார் என தமிழ் சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.