மதுரையில் பள்ளிக்கூட பெஞ்சை விற்று மாணவர்கள் மது குடித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 5 பேருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.சமீபத்தில் ஒருநாள் மதுக்குடிக்க அவர்களிடம் பணம் இல்லை. என்ன செய்வது என்று யோசித்த அவர்கள், வகுப்பறையில் உள்ள ஒரு பெஞ்சை விற்று மது வாங்கி குடிக்க முடிவு செய்தனர்.
வகுப்பு முடிந்து மற்ற மாணவர்கள் சென்றதும், குறிப்பிட்ட அந்த 5 மாணவர்களும் ஒரு பெஞ்சை உடைத்தனர்.பல துண்டுகளாக உடைக்கப்பட்ட அந்த பெஞ்சின் பாகங்களை ஆளுக்கு கொஞ்சமாக எடுத்துச் சென்று அருகில் உள்ள மரக்கடையில் கொடுத்து காசாக்கினர்.
அந்த பணத்தை வைத்து அங்குள்ள டாஸ்மாக் பாரில் சென்று மது வாங்கி குடித்தனர். இந்த விவகாரத்தை பின்னர் தெரிந்து கொண்ட ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் மாணவர்களின் செயலை நினைத்து நொந்து போயினர்.
நேற்று இப்பள்ளியில் நடந்த புத்துணர்வு பயிற்சி முகாமில் பேசிய பள்ளி முதல்வர், வேதனையுடன் இத்தகவலை வெளியிட்டார்.அவர் பேசுகையில் ," தற்கால மாணவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. இதனால் கல்வி மற்றும் அது சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல், இவர்கள் பிரச்சினைகளை கவனிக்க வேண்டியுள்ளது. இதனால், ஆசிரியர்களுக்கு பல மணி நேரம் வீணாகிறது.
பள்ளியில் பெஞ்சை திருடி, மது குடித்த மாணவர்களின் பெற்றோரை அழைத்து விஷயத்தை எடுத்துச் சொன்னேன். அந்த குற்றச் செயலை செய்த மாணவர்களில் முக்கியமான மாணவர் பிளஸ்-2 படிக்கிறார்.அவரது பெற்றோர் திருப்பூரில் உள்ளனர். அந்த மாணவர் வாடிப்பட்டியில் உள்ள தாத்தா -பாட்டி வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்கு வருகிறார்.
மாணவர்கள் உடைத்து விற்ற பெஞ்சின் விலை ரூ.2,500 ஆகும்.அதற்கு பதிலாக புதிய பெஞ்ச் வாங்கி தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் கூறினேன்.
அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.இது தவிர 6-ம் வகுப்பு மாணவன் ஒருவன்,முதல் வகுப்பு மாணவனை தாக்கி அவன் பாக்கெட்டில் இருந்த காசை பறித்த சம்பவமும் நடந்துள்ளது.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதோடு கடமை முடிந்து விட்டதாக கருதக் கூடாது.அவர்களின் செயல்கள், நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்” என்றார்.