சென்னை 18-7-12: தமிழக வருவாய்த்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனிடமிருந்து பதவிபறிக்கப்பட்டது. புதிய அமைச்சராக பெருந்துரை எம்.எல்.ஏ., வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக செங்கோட்டையன் திகழ்ந்தார். இதனைதொடர்ந்து அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் தலைமை நிலையச்செயலாளர் பதவி தேடி வந்தன. கோபிசெட்டிப்பாளையம் மற்றும் சத்தியமங்கலம் தொகுதிகளில் 7 முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை அ.தி.மு.க., ஆட்சியில் முதலில் அவருக்கு வேளாண்மைத்துறை வழங்கப்பட்டது. பின்னர் அநத பதவி மாற்றப்பட்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் அந்த பதவியும் பறிக்கப்பட்டு வருவாய்த்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
இன்று ஜனாதிபதி தேர்தல் குறித்து அ.தி.மு.க, எம்.எல்.ஏ.,ககள் மற்றும் எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை குறித்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் கட்சி எம்.எல்.ஏ.,களுக்கு முதல்வர் எச்சரி்க்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாலை செங்கோட்டையன் வகித்த தலைமை நிலையச்செயலாளர் பதவிபறிக்கப்பட்டது. அந்த பதவியிலிருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் அவரிடமிருந்து வருவாய்த்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. முதல்வர் பரிந்துரையின் பேரில் அமைச்சர் பதவியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் புதிய வருவாய்த்துறை அமைச்சராக பெருந்துரை எம்.எல்.ஏ.,வான என்.டி., வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சர் பதவியேற்பு விழா நாளை காலை 8.30 மணியளவில் நடைபெற உள்ளது.