புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை அரசு மருத்துவமனையாக மாற்றுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டு, வழக்கு விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இன்று தீர்ப்பளிப்பதாக இருந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு குறித்த தீர்ப்பை அளிக்க மறுப்புத் தெரிவித்துள்ள நீதிபதிகள், இந்த வழக்கை வேறு நீதிபதியின் முன் மீண்டும் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை, பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக்க தற்போதைய அதிமுக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.